பணம் என்றால் வாய் திறக்கும் கல்ஹின்னை தனியார் பாடசாலைகள்!

பணம் என்றால் வாய் திறக்கும் கல்ஹின்னை தனியார் பாடசாலைகள்!

கடந்த வாரம்  கல்ஹின்னை டுடேயில் வெளி வந்த தனியார் பாடசாலை சம்பந்தமான கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக கமெண்ட்ஸ் பதிவிட்டிருந்தார் ஒரு மகா அறிவாளி.

மிக்க மகிழ்ச்சி ஐயா .அந்தக் கட்டுரையில் பணம் சம்பந்தமாக மட்டுமா குறிப்பிட்டிருந்தோம்? எழுதி  இருந்த பல  விஷயங்களை நீங்கள் படிக்கவில்லையா?  

நீங்கள்  பணத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள். நீங்கள் ஓரு   பாடசாலை ஆசிரியராகவோ   அல்லது பாடசாலைக்கு சார்பானவராகவோ இருக்கலாம்.

தங்களது பதிவில்  தனியார் பாடசாலையில் அனுமதித்துள்ள  மாணவர்களுக்கான தொகையை செலூத்த முடியாவிட்டால் ஏன் பிள்ளைகளை அனுமதித்தீர்கள்? என்றவினாவினையும் உள்வாங்கி இருந்தீர்கள். பணத்தினைப்பற்றிய குறிப்பினை மாத்திரமே எழுதி இருந்தீர்கள்.

அப்போ அப்பாவிப்பெற்றோர்கள் தனியார் பாடசாலைகளை நம்பி தமது  பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்தது  குற்றமா? 

பாடசாலையில்சேர்க்கும் போது தேன் போல்  பேசி  இணைத்துக் கொள்ளும் நிர்வாகங்கள் கல்வியூட்டளில் ஏன் தவறிவிடுகிறர்கள்? 

பதில் பதிவிட்டவருக்கு   இவைகள் தெறியவில்லையா?

உங்கள் பிள்ளைகளைப் பற்றிய தேடல் உமக்கு இல்லாமல் இருக்கும். அல்லது நீங்கள்  நிர்வாகத்தில் உள்ளவராக இருக்கலாம் அது எவராக இருந்தாலும் இன்றைய சிறார்கள் தான் நாளைய தலைவர்கள்  என்பதை உணராமல்  உம்முடைடய  பதிலில் குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் ஓர் சுயநலக் காரனாகவல்லவா பதிவிட்டிருந்தீர்கள்?

 உமது பிள்ளையை இப்படிப்பட்ட பாடசாலையில் சேர்த்திருந்தால் தான் புரியும்.தனியார் பாடசாலையில் முற்று முழுதாக பணத்தை வைத்தே அனைத்தையும்  செய்கின்றார்கள்  என்ற  கருத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இப்படிப்பட்டதொரு இக்கட்டான சூழலை பயன்படுத்தி பணம் பறிக்க வேண்டாம என்றுதான் அந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்ததை இந்த மகான் படிக்கவில்லையா?

 அனுபவமில்லாத ஆசிரியர்களை சேவைக்கு இணைத்து   மாணவர்களுக்கு கல்வியூட்ட முடியுமா? அல்லது பாடசாலைகளின் பெயரைக் காப்பாற  முடியுமா?

இப்படியான ஆசிரியர்களின் பல குறைகளை பல பெற்றோர்கள் சுட்டிக் காட்டியும் இருக்கிறார்கள்   ஆகவே முட்டி பிடிக்கும் தன்மையிலிருந்து விலகி   உண்மையான நிலையை அறிந்துகொள்ளுங்கள்.

ஹராமாக நமது பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுக்க வேண்டாம் என்ற ஓர் சொல்லையும்  கண்டோ ம். ஹராமாக நாங்களா? நீங்களா? என்பதை நன்கு புரிந்து நடந்துகொள்ளத் தெரிந்து கொள்ளவும்,ஹராம் எது ஹலால் எது என்பதாவது தெரியுமா?கல்வியை காசுக்கு விற்பதே ஹராம்தான்.

மற்றுமொரு விடயம் வட்சப் ஊடாக  நாம் எமது பிள்ளைகளைப் பற்றிய விபரங்களைத்  தெரிந்து கொள்வது தான் வழக்கம்   கொறோனா  காலத்தில்  குறூப்பில் இருந்து.

நீக்கியிருக்கின்ற செய்தியினையும் அறிகிறோம் .இனியும் நாம் ஓய்ந்திருக்க மாட்டோம்.எங்களது பெற்றோரருக்கு. விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி எல்லாப் பிள்ளைகளினதும் கல்வி மட்டத்தினை பரிசீலிக்க  வைக்க  முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

கல்ஹின்னை தனியார் பாடசாலையால் பாதிக்கப்பட்ட ஒருவர்

Post a Comment

Previous Post Next Post