கல்ஹின்னைக்கு பெருமை சேர்த்த சாஜித் சவாஹிர்

கல்ஹின்னைக்கு பெருமை சேர்த்த சாஜித் சவாஹிர்


கல்ஹின்னையில்  பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள்  பல சாதனைகளைப் படைத்து  ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

அந்த வகையில் மற்றுமொரு சாதனையாளர் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

கல்ஹின்னை கட்டாப்புவைச் சேர்ந்த சாஜித்சவாஹிர் அவர்கள் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற  பல்வேறுபட்ட புகைப்படக் களைஞர் போட்டிகளிலே கலந்து கொண்டு முதலாமிடத்தை பெற்றுள்ளதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவர் இலங்கையில் உள்ள அனைத்து காடுகளிலும் சென்று  புகைப்படமெடுத்து போட்டியில் தனது திறமையைக் காட்டி வெற்றி பெற்றமை தனது பெற்போருக்கும் தான் பயின்ற பாடசாலைகளுக்கும் கல்ஹின்னை மண்ணுக்கும் புகழ் சேர்த்துள்ளார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை தாருல்ஹூதா பாலர் பாடசாலையில் கற்று பின்னர், அல்மனார் மத்திய கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரம் வரை கற்று, பின்புக.பொ.த.உயர்தரக் கல்வியை மடவல மதீனா தேசிய பாடசாலை யில் கற்று ,பின்பு இவரது இலட்சியமாகவிருந்த புகைப்படக் களைஞராக வர வேண்டுமென்றுகனவு கண்டவர்.



அதன்படியே 2015 ஆண்டு  குருணாகலை விஜயகுறூப் கம்பனியில் டிப்லொமாவில் இணைந்து 2017-ம் ஆண்டு டிப்லோமாவை முடித்து 
வெளியேறினார்.அதன் பின்பு 2018 தொடக்கம் photography degree செய்து முடித்துள்ள இவருக்கு B.M.I.C.H ல் வைத்து  ,department of,wild Life and forest department  ஆகியவிருதுகள் வழங்கப்படவுள்ளது

அத்தோடு  அதே ஆபிஸில் வேலை, வெளிநாட்டு சுற்றுப் பிரயாணம் போன்றவையும் இவருக்கு கிடைக்கப் பெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அதோடு எமது ஊர் சார்பிலே இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Post a Comment

Previous Post Next Post