மண்ணினுள் மறைந்த போதும் மனங்களில் மறையாத ஒருவர் மர்ஹும் ஜுனைத் (மாமா) அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்களை மரணத்தாலும் மறக்கடிக்க முடியாது இந்த உலகில்.
2012,ம் ஆண்டில் எங்கள் அனைவரினதும் அன்பு மரியாதைக்கு பாத்திரமாக இருந்த அலவத்த ஜுனைத் மாமா அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்து இறையடி சென்றுவிட்டார். அல்லாஹ் அவருக்கு ஜென்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சொர்கத்தை நசீபாக்குவானாக ஆமீன்.
சுமார் 25,வருட காலத்திற்கு முன்பு கல்ஹின்னை வாழ் மக்கள் அனைவரினதும் மிக முக்கிய தேவையின் ஒன்றாக இருந்ததுதான் தொலைத்தொடர்பு சாதனம் (டெலிபோன்)
இதை நன்கு அறிந்த மர்ஹும் அலவத்த ஜுனைத் மாமா அவர்கள் அன்றிருந்த (காலம்சென்ற) மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தபால் தந்தி தொலைத் தொடர்புகள் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் அனுசரணையுடன் (24-03-1996,ம்ஆண்டு) கல்ஹின்னைக்கு அவசியமான தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
அதுமாத்திரமல்ல எமதூரில் இருக்கும் வகானங்கள் இன்று மிக சொகுசாக பாதையில் செல்வதற்கான கார்பெட் பாதையாக மாறுவதற்கான வழிகாட்டலும் மர்ஹும் அலவத்த ஜுனைத் (மாமா) என்றால் மிகையாகாது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில் கல்ஹின்னைக்கு, அல்லது தனிப்பட்ட மக்களுக்கோ ஒரு தேவையை நடாத்திக்கொள்ள அமைச்சர்களை சந்திப்பதாக இருந்தால் இலஹுவான ஒரே வழி அலவத்த ஜுனைத் (மாமா) அவர்களுடன் செல்வதே ஆகும் ஊரில் யாவரும் அறிந்தொன்று.
அரசியல் வாழ்கையில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும் சுய இலாபத்திற்காக எதையும் எதிர்பார்க்காமல் கல்ஹின்னை மக்களுக்காக உழைத்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னைநாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா , ஜனாதிபதி கௌரவ சந்திரிக்கா அம்மையார், முன்னைநாள் அமைச்சர்கள் பவ்சி, மங்கள சமரவீர, எதிரிவீர வீரவர்தன, எரிக் வீரவர்தன போன்றவர்கள் இடத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஒரு மஹான் ஆவர் ஜுனைத் (மாமா) அவர்கள்.
கல்ஹின்னையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பமாவதற்கு முக்கிய காரணமாயிருந்தவர்.பல எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டு வளர்த்தெடுத்தவர்.
கல்ஹின்னை ஜும்மா பள்ளியை புனரமைக்கும் போது பள்ளி நிவாகத்துடன் சேர்ந்து பல வழிகளிலும் உழைத்தவர்.
அவரோடு அரசியல் பயணம் செய்ததில் பல விடயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு பல சந்தர்ப்பங்களில் கிடைத்தது .
மக்களோடு தோளோடு தோல் நின்று பழகும் விதம் ,மக்களை அணுகுகின்ற முறை அனைத்தும் அவரிடம் இருக்கின்ற மிகப் பெரிய பலம்.
அரசியல்வாதிகளிடம் அவர் மிகவும் நட்பாகப் பழகும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது.எதிர்க் கட்சிகளிடமும் மிகவும் நட்பாக இருந்தார்.
எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரோடு நல்ல நண்பனாகப் பழகுவதை நான் நேரடியாக் கண்டிருக்கின்றேன் .
கல்ஹின்னை மக்களுடன் கட்சி பேதமின்றி பழகியவர்.
இப்படி பொது நலசேவைகள் செய்தவர் அலவத்த ஜுனைத் மாமா அவர்கள். இச் சந்தர்ப்பத்தில் அவரை நினைவு கூறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இப்படி இன்னும் கைவிரல் தொட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் இருந்து மறைந்து விட்டார்கள் ஆனால் இக்காலத்தில் இப்படிப்பட்டவர்களை காண்பது ஊரில் மிகவும் குறைவு. ஏன் இந்த ஒற்றுமை சீர்குலைந்து போகின்றன.?
அநியாயத்திற்கு குறள் கொடுக்கின்றவர்கள் இன்று எமதூரில் மிகக் குறைவு .அப்படியே இருந்தாலும் அணியாயத்தை கண்டும் கானாதவர்களைப்போன்று அமைதியாய் இருப்பது வேடிக்கையாயிருக்கின்றது.
M.M பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னை பொக்கிஷங்கள்