கல்ஹின்னையின் மூத்த ஊடகவியலாளர் கலாஜோதி நிஷார் எம்.ஷெரீப்

கல்ஹின்னையின் மூத்த ஊடகவியலாளர் கலாஜோதி நிஷார் எம்.ஷெரீப்

எழில் கொஞ்சும் கல்ஹின்னை மண்ணுக்கு புகழ் சேர்த்தோர் வரிசையில் கல்ஹின்னை அன்னை இல்லத்தில் வசித்து வந்தவரும் தற்போது படகொள்ளாதெனியில் 
வசித்து வருபவருமான ஜனாப் நிஸார்.எம்.ஷரீப்  அவர்கள் கல்ஹின்னையின் மூத்த ஊடகவியலாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளரும்,சமூக சேவையாளரும், சமூக சிந்தனையாளருமாவார்.

ஜனாப் நிஸார்.எம்.ஷரீப்  அவர்கள் 1985-ம் ஆண்டில் கொழும்பில் பணி புரிந்த வேலையில் தானும் நண்பரான   S.L M .அமீர் அவர்களும் இணைந்து "புது மணம்" என்ற பத்திரிகையொன்றினை நடாத்தி வந்ததோடு,கல்ஹின்னை படகொள்ளாதெனியவில் இருந்து வெளிவந்த" கலைமுத்து " என்ற சஞ்சிகையின் இணையாசிரியராகவும்,
படகொள்ளாதெனிய ஜாமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி  வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு1992-ம் ஆண்டு  கல்ஹின்னை தாருல் ஹூ தா பாலர் பாடசாலை ஆரம்பித்ததிலிருந்து இது காலவரை முகாமைத்துவப்பணிப்பாளராக 
கடமையாற்றும் இவர் சிறந்த அறிவிப்பாளரும், படகொள்ளாதெனியாவில் அஹதிய்யா என்ற பெயரில் பாடசாலை   ஒன்றினை தனியாளாக நடாத்தினார். சுமார்  நானூறு மாணவர்கள் கற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

சில தவிர்க்க முடியாத காரணத்தால் அப்பாடசாலையை தொடர்ந்தும் நடாத்த முடியாத நிலையேற்பட்டது.

நிஷார் ஷரீப் அவர்களின் பொதுநல ஈடுபாட்டை கருத்திற்கொண்டு 2002.ம் ஆண்டு செப்டம்பர் 01ம் திகதி இரத்தினபுரி "அகில இனநல்லுறவு ஒன்றியத்தினூடாக கலாஜோதி" என்ற பட்டமளித்து கெளரவிக்கப் பட்டார்

நாடாளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களின் அன்புக் கரங்களால் பொன்னாடை போர்த்தி  கௌரவிக்கப்பட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது .

கதை கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள நிஷார் அவர்கள் பல பத்திரிகைகளில் எழுதியிருக்கின்றார்.
அவருடைய கலை,இலக்கிய ஆர்வமும் சமூக சேவையும் இன்றும் தொடர்கின்றது என்பது பெருமைக்குரிய விடயமே.

கல்ஹின்னை வரலாற்றில் முதன் முதலாக வெளிவரும் "வேட்டை" "கல்ஹின்னை டுடே "போன்ற ஆன்லைன் பத்திரிகைகளிலும் பல ஆக்கங்கள் எழுதி வரும் நிஷார் எம்.ஷெரீப் அவர்கள் தொடர்ந்தும் எழுத எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் .

கல்ஹின்னை டுடே நிருபர்


1 Comments

Previous Post Next Post