கல்ஹின்னையின் கருப்பு நாள்-7-10-2011 -VIDEO-1

கல்ஹின்னையின் கருப்பு நாள்-7-10-2011 -VIDEO-1

7-10-2011 ஆம் ஆண்டு கல்ஹின்னையில் நடந்த ஒரு (கல்ஹின்னையின் கருப்பு நாள்)சம்பவத்தை மீண்டும் நினைவு கூற வேண்டும் போலிருந்தது 

அதற்குக் காரணம் கல்ஹின்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை 21-11-2021) முன்னாள் பாடசாலை அபிவிருத்திக்குழு(2009)வினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "கல்ஹின்னையின் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒன்றியத்துடனான ஒன்று கூடல் "நிகழ்ச்சிக்கு வருகை தந்த முன்னாள் அதிபரை கண்டதும் பழைய நிகழ்வுகள் என்னில் மீண்டு வந்தது.

நான் கடையை மூடிவிட்டு அந்த நிகழ்ச்சியை காணச் சென்றேன்.அங்கே எமது ஊர் அரசியல்வாதிகள் ,தனவந்தர்கள்,முன்னாள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் சமூகமளித்திருந்தார்கள்.

மேலும் ஒரு முக்கியமான ஒரு மனிதர்  அமர்ந்திருந்ததைப் பார்த்தும் எனக்கு பழைய நினைவுகள்தான் என்னுள் தோன்றியது.

அந்த மனிதர் கல்ஹின்னையின் கருப்பு நாட்களுக்கு பொறுப்பானவர் என்ற பட்டத்தை பெற்றவர் .

ஒரு பெண் ஆசிரியைக்கு எதிராக ஊர் மக்களை ஒன்று திரட்டி அந்த ஆசிரியையை அவமானப்படுத்தியவர்.

"பாத்திமா ஒழிக"என்று ஒரு புனிதமான் பெயரைச்சொல்லி மக்களை கூச்சல் போட தூண்டியவர்.

சட்டப்படி ஒரு பெண் ஆசிரியையுடன் மோத தைரியமில்லாமல் கல்ஹின்னை மக்களின் வாயால் "பாத்திமா" என்ற பெயரை கேவலப் படுத்த துணை நின்ற ஒரு மனிதர்,

கல்ஹின்னை வரலாற்றில்  நடக்காத ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்த  உறுதுணையாக இருந்த ஒருவரை  மேடைபோட்டு அழகு பார்த்தார்கள் எமதூர் முன்னாள் பாடசாலை அபிவிருத்திக்குலுவினர்.

அதில்வேறு ஒன்றியத்தின் தலைவரும் அந்த கூட்டத்தில் பங்கு பற்றியதுதான்  கவலையான விடயம்,

கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் நேரம் காலம் பாராது கல்ஹின்னைக்கு செய்கின்ற சேவையை நாம் அனைவரும் அறிந்ததே .அதில் ஒரு உழைப்பும் நேர்மையும் இருந்தது,சுயநலமற்ற அவரது சேவைக்கு கல்ஹின்னை மக்கள் என்றுமே கடமைப்பட்டவர்களாவார்.

இப்படியான ஒரு மனிதர் இப்படிப்பட்ட ஒரு கேவலமான (கல்ஹின்னையின் கருப்பு நாட்களுக்கு பொறுப்பான )மனிதர் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறாகும்.  

எப்படியோ ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டாலும் ஊர் மக்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சில(கல்ஹின்னையின் கருப்பு நாட்கள் ) காணொளிகள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பதிவிட நினைத்துள்ளோம் 




(தொடரும்)


  

Post a Comment

Previous Post Next Post