அண்மைக்காலமாக கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாயல் நிர்வாகக் குழுவினைத் தெரிவு செய்வது தொடர்பாக இரண்டு வேறுபட்ட கருத்துடையவர்களுக்கு இடையில் முறுகல் நிலை காணப்பட்டதை நாம் அறிவோம்.
அதாவது தனிப்பட்ட சில நபர்கள் மூலம் இந்தக் குழு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற ஒரு தரப்புக்கும் அவ்வாறல்லாமல் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து இக்குழுவினைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற மற்றத் தரப்புக்கும் இடையில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
தற்போது இவ்விடயம் தொடர்பாக வக்பூ சபையிலும் (Wakf Board) - வழக்கு இல. WB/9477/2023, உயர் நீதிமன்றத்திலும் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேற்சொன்ன இரு வழக்குகளின் தீர்ப்புகள் எட்டப்படும் வரைக்கும் தற்போது உள்ள நிர்வாக சபையின் அங்கத்தவர்கள் நிர்வாகத்திற்குரிய பொறுப்பு தாரர்களாக (Persons in-charge) இருப்பார்கள். ஊரினுடைய முன்னேற்றத்திற்காகச் செயல்படுவதற்கு இந்த அமைப்புக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும், தற்போது ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலை மேலும் அதிகரித்து பிழவுகளை ஏற்படுத்தி விடாத வண்ணம் அமைதியாகவும், மொறுமையாகவும், நிதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும்; தேவையற்ற வாக்குவாதங்கள் தனிநபர் தாக்குதல் போன்ற முறையற்ற செயற்பாடுகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது நாட்டின் சட்டத்தினை மதிப்பவர்களாகவும், பள்ளிவாயல் விடையத்திலும், சமூகத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் விடையத்திலும் இறையச்சமுடையவர்களாகவும் செயற்படுவோம்.
இவ்வண்ணம் கல்ஹின்னை அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்கான அமைப்பு