இருப்பினும் ஊர் ஜமாஅத்தினரிடம் சிலவார்த்தைகள் கூறி பல அபிப்பிராயம் கூறுவதுடன் கொழும்பில் இருந்து கொண்டு கல்ஹின்னை நிர்வாகத்தினரை இயக்கும் ஹாஜியார்மார்களே எமது ஊரின் மீது நீங்கள் பிறந்துவளந்த மண்ணின் மீதும் உங்கள் உறவுகள் மீதும் உண்மையான அன்பு பாசம் இருக்குமாயின்
புதியவர்களை தெரிவு செய்ய ஊர்மக்களுக்கு ஒரு சந்ததற்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பது உங்கள் எல்லாரினதும் கடமையாகும்
மஹல்லாக்கல் ஒன்றினைந்த நிர்வாகம் தான் ஊருக்குத்தேவை என்பதை உணரவும் கல்ஹின்னையில் பெரியபள்ளியுடன் அனைத்து மஹல்லாவும் இனைந்த நிர்வாகம் தேவை
அன்கும்புர மஹல்லா ,கெடஹேன மஹல்லா,கட்டாப்பு மஹல்லா,ஹுஸைனியா மஹல்லா,இஸ்மாயில் ஆலீம் பள்ளி மஹல்லா,பெபுலகெல்ல மஹல்லா,ஸ்கூல் மஹல்லா,
பூதல்கஹ மஹல்லா ஆகிய மஹல்லாக்களில் இருந்து தலா மூன்று போர்கள் வீதம் தெரிவு செய்து பின்னர்பெரியபள்ளி மஹல்லாவில் இருந்து பின்வரும் முறையிலும் தெரிவு செய்து
O.L.M.மாவத்தை,பள்ளியகெடுவ ஸ்கூல்,மூஸா முனை,இஸ்மாயில் ஆலீம் மாவத்தை,பள்ளி பசார்ஆகிய பகுதியில் இருந்தும் தலா மூன்று பேராக தெரிவு செய்யும் போது மொத்தமாக 36 உருப்பினர்கள் வருகிறார்கள்
இந்த 36 உருப்பினர்களில் இருந்து ஒரு தலைவரை தெரிவு செய்வதன் மூலமாக மஹல்லாக்கள் ஒன்றினைந்த கல்ஹின்னை பெரிய பள்ளி நிர்வாகத்தின் கீழ் ஊரை நிர்வாகிக்க முடியும்
நமது முன்னோர்ர்கள் ஒன்றுபட்ட கல்ஹின்னையின் கீழ் ஹல்கெல்லை வரையும் நிர்வாகித்ததை ஞாபகப்படுத்துவது சிறந்ததாகும்.ஐந்து நேரமும் ஜமாஅத்துடன் தொழக்கூடியவர்களாகவும் ஊரில் இல்லாதவர்கள் ஊர் மக்களை மதிக்ககூடியவர்கள் ஊரில் நிறந்தரமாக பதிவுடன் வாழக்கூடியவர்களாகவும் மார்க்கம் அறிந்தவர்களாகவும் இருப்பதுதான் முக்கியமாகும்.
அத்துடன் பெரியபள்ளியில் எதுக்கப்படும் எல்லா தீர்மானங்களும் மஹல்லா பள்ளிகளுக்கும் ஒன்றானதாக இருக்க வேண்டும்
இன்று கல்ஹின்னையில் அப்படி நடக்கின்றதா?
இல்லை ,
அதற்குக் காரணம் தகுதி இல்லாதவர்களை எல்லாம் நிர்வாக சபைக்குள் நிறுத்தி அழகு பார்க்கின்றோம்.இஸ்லாத்தில் இல்லாத நபி (ஸல் ) அவர்களால் காட்டித்தராத ஒரு கலப்பு நிர்வாகமே இன்றைய பள்ளிவாசல் நிர்வாகமாகும்.
பள்ளி நிர்வாகத்தில் பதவி வகிப்பதென்பது முட்களின்மீது நடப்பதைப்போன்றது, மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு பதவி,அனுபவசாலிகளை ஒதுக்கிவிட்டு திருடர்களையும்,துரோகிகளையும் பள்ளி நிர்வாகத்திற்குள் கொண்டு வருவதை நிறுத்துங்கள்
ஊர் மக்களின் விருப்பிற்கேட்ப நியமனம் செய்யுங்கள் .அரசியல் ஆதரவை வைத்து சமூகத்தை நாசமாக்காதீர்கள்,
அதாவது நிர்வாகம் என்பது எந்த ஒரு காரணத்தாலும் சுயநலத்தை நாடும் களமாக இல்லாமல் அங்கத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் நீதி அடிப்படையில் பகிர்ந்து வழங்கும் உழைக்கும் களமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக ஏழைகளுக்கு உதவி வழங்கும் போது சொந்த பணத்தை கொடுப்பது போன்று உணர்வை வெளிப்படுத்தி வறுமையை விசாரித்து விளம்பரம் செய்யாமல் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இன்றைய கல்ஹின்னை பள்ளி நிர்வாகம் அப்படியில்லை ,ஊரில் நடக்கின்ற சில விடயங்கள் பள்ளி நிர்வாகத்திற்கே தெரிவதில்லை ,அப்படியே தெரிந்தாலும் ,கண்டும் காணாதவர்கள் போன்று இருக்கின்றார்கள்.
வேட்பாளராக முடிவு செய்வதில் கல்ஹின்னை மக்கள் பொதுவான விசயத்தில் பெரும்பான்மை விருப்பத்தை விரும்புவதே நீதியாகும்.
மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் இல்லங்கள். அவை உயிர்ப்பிக்கப்பட வேண்டும். மக்கள் மஸ்ஜிதுகளுடன் அழகான உறவைப் பேணி வர வேண்டும். ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் வரும் இடங்களாக பள்ளிவாசல்கள் மாற வேண்டும்.
மஸ்ஜித் பரிபாலனம் என்பது இலகுவானதொரு காரியமன்று. நினைத்தவர்கள் எல்லாம் அந்தப் பொறுப்பை ஏற்கவும் முடியாது. ஆசை வைப்பவர்களுக்கு எல்லாம் அப்பொறுப்பைக் கொடுக்கவும் முடியாது. மாற்றமாக அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக்களில் இப்பொறுப்பும் முக்கியமானது. ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஊர் நிர்வாக முறைமையிலும் அதனை மேற்கொள்வோரிடமும் தங்கியிருக்கிறது.
பள்ளிவாசல் நிர்வாகியாக எவரும் முன்வந்து அல்லது ஏற்கனவெ இருக்கக்கூடிய நிர்வாகிகளில் இருக்கும் நிர்வாகிகளை மீண்டும் மீண்டும் அமர்த்துவது, அல்லது அவர்களாகவே அமர்ந்து கொள்ளவதை நாம் அனுமதிப்பது பிழையை ஊக்குவிப்பதாகும். இப்படியான நிர்வாகிகள் முற்றிலும் களையப்பட வேண்டும். அதற்கு மக்களாகிய நாம் ஒரு போதும் இடம் அளிக்க கூடாது.
கல்ஹின்னை மக்களே சிந்தித்து செயலாற்றுங்கள் .பணத்திற்கு விலைபோகின்ற பழக்கத்தை தூக்கி எறியுங்கள் .இந்த முறை கல்ஹின்னைக்கு ஒழுங்கான நேர்மையான ஊர் மக்கள் மதிக்கக் கூடிய ஒரு நிர்வாகத்தை தேர்ந்தெடுத்து கல்ஹின்னையை சுற்றியுள்ள இருளை அகற்றுங்கள்.
கல்ஹின்னை நண்பன்