நாட்டில் 20 வயதிற்கும் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (02) முதல் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிககை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரச சேவை ஜக்கிய தாதியர் சங்கத்துடன் இன்று (02) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,இதன் கீழ் குறித்த வயதுப் பிரிவில் மூன்று தசம் ஏழு மில்லியன் பேர் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.இந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை விரைவில் நிறைவு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த செயற்றிட்டத்தில் விசேடமாக ஆடை தொழில்துறையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை