படித்தவர்கள் பண்புடன் பயணிக்க வேண்டும்.

படித்தவர்கள் பண்புடன் பயணிக்க வேண்டும்.

உலகில் கற்றவர்களுக்கு  சென்ற இடமெல்லாம் மதிப்பும்,மரியாதையும் உண்டு என்பதுதான்  யதார்த்தம்.ஆனால் படித்த  சகலரும் தாம் படித்த அடிப்படையிலேயே செயல்படுகிறார்களா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

சிலர் சந்தர்பத்திற்கு  ஏற்றால் போல் தன் போக்கை மாற்றி  தான் ஓர் படித்த ஆசான் என்பதை மறந்து செயல்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

மனித மனங்களை சட்டென உடைத்து விடும் தன்மையையும் பக்க சார்போடு தன் போக்கினை கடைபிடித்து வருகின்ற ஓர் தன்மையையும் என்னால் எதையும் போட்டுடைக்க முடியும் என்ற இருமாப்போடு வேலை செய்கின்ற  குடி கெடுக்கக் கூடி படித்தவர்களும் நம்மில் உள்ளனர்.

நமது ஊரைப்பற்றிய வலியால்  பலரும் நல்ல அபிப்பிராயங்களை  சில விடயங்களுக்கு முன் வைப்பது சிறப்பானது. ஆனால்   அதற்கு தம்மால் முடிந்த அபிப்பிராயப் போக்கை  கடைபிடிக்காமல் எவனோ சொன்னான் என்பதற்காக அபிப்பிராயம் சொன்னவரை இழி சொல்லால்  தாக்கி அவருடைய உள்ளத்தை  நோகும்படி செய்வது மனிதாபம்அற்ற செயல் என்பதைக் குறிக்கிறது.

தனது சுய சிந்தனை எங்கே போனது ? அடுத்தவர்களுடன் முட்டி மோதும்  பலக்கம்  இன்னும் அற்றுப் போகவில்லை என்பது மட்டும்  தெரிகிறது.

ஆகவே மனிதன் தான் பெற்ற செல்வத்தின் மூலம் பகைமைகளை  கலைந்து சிறப்பான வாழ்வையே  நல்லுள்ளம் கொண்ட  மனித நேயம் மிக்கவர்களின் பொறுப்பாகும். 

அப்படியே  தனக்கு  பிடிக்காத ஒன்றை  எவராலும் குறிப்பிட்டிருந்தால் மௌனம் காப்பது சிறப்பாக நேசிக்கப்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது  கட்டாயமாகும்.

பிறரின் கருத்துக்களை பிடிக்காததால் ஒருவர் கூற இன்னொருவர்  மட்டம் தட்டி  அவரின் சிந்தனைக்குக் கொடுத்த பாரிய அடி என்று  எண்ணிக் கொண்டிருந்தாலும் படைத்தவன்நல்லவர்களின் பக்கம் இருக்கிறான் என்பதை மறந்து விடலாகாது. 

இதன் பின்பு சரி தான் பெற்ற அறிவை நல்ல விடயங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தி வெற்றியையும் பாராட்டையும்  பெற்றுக் கொள்ளமுயற்சிப்பார்களாக.

Post a Comment

Previous Post Next Post