அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்தஹு.
18-09-2021, இத்தினத்தில்
CHANGING GALHINNA தலைமை ADMIN அவர்களினால் வெளியிடப்பட்ட ஒளிநாடாவில்
கல்ஹின்னையில் தற்பொழுதுள்ள COVID 19 தாக்கத்த்தினால் பாதிப்புக்குள்ளான ஒரு
குடும்பத்தின் அவலநிலையைப் பற்றியும் தற்பொழுது அக்குடும்பத்தில் ஒருவேளையாவது
பசிக்கு உண்ணும் உணவுயில்லாத காரணத்தினால் நோன்பு பிடித்துக் கொண்டு நாட்களை
சமாளித்துக்கொண்டு இருப்பதாக மிகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.
அந்த ஒளிநாடாவை
கல்ஹின்னை ஜும்மாப் பள்ளிவாசல் பிரதம கதீப்பாக இருந்த மர்ஹும் அல்-ஹாஜ் இஸ்மயில்
(ஆலீம்) அவர்களின் மகனான அப்துல் சலாம் அவர்கள் CHANGING GALHINNA (ADMIN)
அவர்களினால் வெளியிடப்பட்ட ஒளிநாடாவை பள்ளியக்கொட்டுவ கல்ஹின்னை எனும் (WhatsApp) ஊடாக ஊர் மக்களின் கவனத்திற்காகவும் வெளியிட்டுள்ளதை
நான் அறிந்தவுடனே அப்துல் சலாம் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு
பாதிப்புக்குள்ளான அக்குடும்பத்தின் விபரத்தைக் கேட்டேன் அவரிடமிருந்து ஆதாரமான
பதில் எதுவுமில்லை என்பதை அறிந்தவுடனே.
கல்ஹின்னை
ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர் அல்-ஹாஜ் பரிசிடீன் அவர்களின்
தொலைபேசிக்கு நான் ஒரு ஒளிநாடாவை பதிவு செய்து அனுப்பிவைத்தேன் இதனுடைய விபரத்தை
கேட்டறிந்து அக்குடும்பத்தார் யார் என்பதை எனக்கு அறியத்தரவும் இன்ஷா-அல்லாஹ்
நானும் முயற்சி செய்கிறேன் அவர்களின் அன்றாடத் தேவைகளை அறிந்து நான் அறிந்த நல்ல
மனிதர்கள் சிலரிடம் உண்மையான நிலையைக் கண்டறிந்த பின் முன்வைக்கலாம் என்கின்ற
நம்பிக்கையிலேதான் அல்-ஹாஜ் பரிசிடீன்
அவர்களுக்கு அறியப்படுத்தினேன்.
அதனைத் தொடர்ந்து
அந்த சம்பவம் தொடர்பாக முன்னையநாள் ஆசிரியர் சகீல், ஷிபான் ஹனிபா, மசாகிர்,
ரிஸ்மின் ஆசிரியர், போன்றவர்கள் ஒலிநாடாவில் பதிவிட்டிருக்கிறார்கள். இவ்விடயம் சம்பந்தமாக
அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி. ஷிபான் ஹனிபா அவர்கள் ஆம் இது உண்மையாகத்தான்
இருக்குமென்று ஆதரமற்ற வார்த்தையை உபயோத்துள்ளார்.
இவ்விடயத்தில்
தற்பொழுது ஈடுபடும் சகோதர்களிடம் ஒரு விடயத்தை மாத்திரம் சவாலாக கூரிக்கொள்கிறேன்
உங்கள் அனைவர்களுக்கும் முதல் நான் பாரூக் (WC) பொதுநலன்களில் சுமார் (35)
வருடகாலங்களுக்கு முன்பே எம் சமூகத்தினர்களுக்கும் எமதூரில் இருக்கும் பாடசாலைகள்,
பள்ளிவாசல், மத்ரஸா, மற்றும் தனிப்பட்டவர்கள் பலரின் தேவைகளை சொந்தப்பணத்தில்
செய்தததிற்கான ஆதாரங்கள் தேவைப்படுமானால் முன்வைக்க நான் தயார். கூட்டுச் சேர்ந்தே
ஒரு குடுப்பத்தின் அவலநிலையை தீர்க்க முடியாது ஒலிநாடாவில் பதிவிட்டு ஊர் மானத்தை
மாசுபடுத்தும் துரோகிகள் யார் நானா? CHANGING GALHINNA ஆதரவாளர்களா? நேரடியாக
விவாதிக்கவும் நான் தயார் முடிவு செய்வது நீங்கள்.
பசித்தவனுக்கு
உணவளிப்பது இஸ்லாத்தின் அழகிய பண்பு, பறையடித்துக் கொண்டு செய்வதற்கு பெயர் தர்மம்
அல்ல.