மனிதனாகப் பிறந்த அணைத்து மனிதர்களும் மரணிக்கும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் அவன் அறிவு
விருத்தியாக்கிக் கொண்டு வருகி றான் என்று கூறலாமே ஒழிய சகல அறிவையும் பெற்றவனாக ஆகிவிட முடியாது என்பதுதான் யதார்த்தம்.
வாசிப்பு என்பது உலக வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகவுள்ளது. அதனை மனிதனால் எப்பொழுதும் வாசிப்பவனாக மாற முடியயும் எம்மொழியாக இருந்தாலும் வாசிப்பினால் தான் அந்த மொழி பயிற்சியையும் அம்மொழியின் அறிவையும் பொதிந்துள்ள விடயங்களையும் விளங்கிக் கொள்ள ஒரு பாலமாக அமையும்என்பதை துணிந்து கூறலாம்.
பல அறிவு மேதைகளைப் பற்றி தேடிபடிக்க நேர்ந்தால் தான் வாசிப்பினால் உயர்ந்த மனிதர்களை இனம் கண்டு கொள்ளவாய்புண்டாகும்.
காலம் காலமாக ஆசான்கள் வாசிப்பின் உயர்வையும்,தத்துவங்களையும் கற்பித்து வந்ததை நாமறிவோம்.வாசிக்க வாசிக்க புது புது விடயங்களைக் கண்டறிய முடியும்.
வாசிப்பின் மூலம் தான் மனிதன் கல்வியில் முன்னேற்றம் அடைகிறான் என்பதை உணர்ந்த வயோதிபர்கள் கூட இன்றும் பத்திரிகை படிக்காமல் அவர்களுக்கு இருக்க முடியாத ஓர் உண்மையானநிலையைக் காண்கிறோம்.
வாசிப்பின் மகத்துவத்தை அறிந்த பலரும் கைபேசி இல்லாமலிருந்த காலங்களில் பத்திரிகை,சிறுசஞ்சிகைகள் கையடக்க புத்தகங்களை எந்நேரமும் அவர்களிடத்திலேயே காணமுடுந்திருந்தது.குறிப்பாகச் சொல்லப் போனால் இந்தியாவிலிருந்து வந்த ஆனந்த விகடன்,குமுதம். சிறுவர்களுக்கான அம்புலிமாமா போன்றபுத்தங்களைக் கூறலாம் இதைத்தவிர இன்னும் பல சஞ்சிகைகள் புத்தகங்களை சொல்லலாம்.
இன்னும் அவ்வாறான பழக்கங்கள் உள்ளவர்கள் இன்றும் பிரயாணங்களின் போதும் புத்தகங்கள் கைகளிலே காணமுடிகிறது.அது கதைப் புத்தகங்களாகவும் நாவல்,தொடர்கதைகள்,நீதிக்கதைகள் இன்னோரன்ன புத்தகங்களை படித்து வருவதைக்காணலாம்.
வாசிப்பு என்பது ஒரு பிள்ளைகருவறையில் இருக்கும் போதே ஆரம்பிக்கப்படவேண்டும். கருவுற்ற தாய் நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் பிள்ளையுடைய மூளை விருத்தி சிறப்பாக நடைபெறும் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.
றக்கூடிய சில வழி முறைகளைகாண்பது சிறந்ததாகக் கொள்ளப்படும்.வாசிப்பு பல முக்கியமான திறன்களைக் கொண்ட ஒரு செயல் முறையாகும். அதாவது சிந்தித்தல் ஆராய்தல் காரணம் கண்டறிதல் போன்றவற்றை உள்ளடக்கும் சந்தோசம் மகிழ்ச்சி பொழுது போக்குக்காக வாசித்தல் பொழுது போக்குக்காகஅறிவைத் தேடி வாசித்தல், நல்ல புத்தகங்களை விஞ்ஞான கட்டுரைகளை தெரிந்தெடுத்து
வாசிப்பது நல்லது.
ஆன் மீக நூல்களைப் படிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைத்து மிகுந்த அமைதியைக் கொண்டு வரும் அதே நேரத்தில் வாசிப்பதை தொடங்க முன் வகைப்படுத்திக் கொண்டு வாசிக்கத் தெரிந்து கொள்வது சிறப்பானது.
இன்று எம்மில் எத்தனைபேரிடம் வாசிப்புப் பழக்கம் இருக்கின்றது?பத்திரிகை படிக்கும் பழக்கம்கூட இன்று நம்மைவிட்டு போய்விட்டது.
ஒரு காலத்தில் இலங்கையில் பிரசுரமாகும் அணைத்து பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் கல்ஹின்னைக்கு வரும்,பத்திரிகைகளும் புத்தகங்களும் அநேகமான கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும்.
தினமும் பத்திரிகைகளை படிக்கும் வழக்கம் எமதூர் பெரியவர்களிடம் இருந்தது.அநேகமான வீடுகளுக்குச் சென்றால் வீட்டு ஹாலில் ஒரு சிறிய மேசை மீது பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இருக்கும் .அன்று அவர்களிடம் இருந்த வாசிப்புத்திறன் அவர்களை அன்றும், இன்றும் ஊர் மக்கள் மதிக்கும் அளவுக்கு அவர்களை மாற்றியிருந்தது.
அப்படிப்பட்ட மனிதர்கள் எங்களுக்கு காட்டி தந்த வழிமுறைகளை நாம் இன்று பின்பற்றுவதில்லை.
அன்று சாதாரணமாக படித்த ஒருவரிடம் இருந்த கடமையுணர்வும் ,கட்டுப்பாடான வாழ்க்கை முறையும் ,இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் தேர்ச்சி பெற்றவர்களிடம்கூட காண முடியாது.
அதற்குக் காரணம் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியா அல்லது பரம்பரை பழக்க வழக்கங்களை மறந்து விட்டஇன்றைய சமுதாயமா?