பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் மற்றும் ப்ரோபைல் புகைப்படத்தை குறிப்பிட்ட சில காண்டாக்ட்களுக்கு மட்டும் மறைத்து வைக்க செய்யும் அம்சம் உருவாக்கப்படுகிறது.
தற்போது இவற்றை யாருக்கும் வேண்டாம் (no one), அனைவருக்கும் (everyone) மற்றும் காண்டாக்ட்களுக்கு மட்டும் (only contacts) என மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் குறிப்பிட்ட சில காண்டாக்ட்களை மட்டும் தேர்வு செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை.
புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் விரைவில் இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் பீட்டாவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
தகவல் தொழில்நுட்பம்