இன்று 16 ம் திகதி இடம் பெற்ற பூஜாபிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் பொது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறும் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெரும் வீடற்றவர்களுக்கு புதிதாக வீடு ஒன்றை நிர்மனித்துக் கொடுப்பதற்காக அரசாங்கம் ஆறு இலட்சம் ரூபாவை வழங்குகின்றது.
அதன் முதற் பகுதியாக ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுகின்றது. இந்த ஒரு இலட்சம் ருபாய் வழங்கப்பட்ட பின் அவ்வீட்டுக்கு செல்லும் அரசியலில் சம்பந்தப்பட்டவர்களாக கூறப்படும் சிலர் இப் பணத்தில் இருந்து 50,000 ரூபாய வரை பெற்றுச் செல்வதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் எவரிடமாவது கூறினால் மீதிப்பணத்தை தடுப்பதாக பயமுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர்கள் அதனை வெளியே கூற விரும்புவதில்லை எனவும் தெரிவித்த அவர் இது தொடர்பாக சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் படியும் தெரிவித்தார்.
இதன்போது தலைவர் அநுர பிரனாந்து கருத்து தெரிவிக்கையில் இது ஒரு பாரிய குற்றம் எனவும் இது தொடர்பில் பூரன விசாரணை ஒன்று நடாத்தப்பட்டு சம்பந்தபட்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் இதுபோன்ற பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட மோசடி அரசியல்வாதிகளிடம் மக்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.அத்தோடு இந்த மோசடிகள் பற்றிய விசாரணைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.