கல்ஹின்னையில் பாதை அமைக்கும் திட்டத்தில் மோசடி -மக்கள் அவதி

கல்ஹின்னையில் பாதை அமைக்கும் திட்டத்தில் மோசடி -மக்கள் அவதி


கல்ஹின்னை பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக நீர் வழங்கும் திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்றுக் கொண்டுவருகிறது. இவ்வேளையில் கொங்க்ரிட் பாதைகள் அமைந்துள்ள சில பகுதியில் பாரியளவில் முறைகளுக்கு மாற்றமாக மோசடிகள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக கல்ஹின்னை பள்ளியகொட்டுவ பிரதேசத்தில் முன்னாள் பாலர் பாடசாலை இருக்கும் பகுதியில் 2006,ம் ஆண்டளவில் பாதைக்கான கொங்க்ரிட் இடும் வேளையில் அதற்கான பொறுப்பும்,மேற்பார்வையும் பூஜைப்பிட்டிய பிரதேச சபைக்கே பொறுப்பனதாகும்.

கொங்க்ரிட் பாதையை ஒரு பிரதேசத்தில் அமைக்கும் போது அதன் அகலம் குறிப்பாக (04) அங்குலம் இருக்கவேண்டும் இதுவே பொதுப்படையான சட்டமும் ஆகும். இவ்வேலையை பொறுப்பேற்று யாரேனும் அனுபவமுள்ள ஒருவர் முன்னெடுத்துச் செய்தாலும்கூட அதை கண்காணிக்க பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரியாக இருக்கும் ஒருவரின் முடிவே அதற்கான சான்றாகும்.

ஆனால் நடந்திருப்பது என்ன? 

அரசாங்கத்தால் வழங்கும் பணத்திற்கு மோசடி செய்துள்ளார்கள் என்பதை இதில் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் ஆதாரமாகும். (04) அங்குலம் அகலத்தில் இடவேண்டிய கொங்க்ரிட்டைவெறும் (2,1/4) அகலமானதாக செய்துள்ளார்கள்.

இந்நிலையில் நீர் வழங்கல் ஏற்பாடுகளுக்காக பயன்படுத்திய வாகனங்கள் கல்ஹின்னை பள்ளியகொட்டுவ பிரதேசத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில் தடம்புரண்டு பாரியளவில் பணியாளர்கள் சிரமப்பட்டார்கள். 

ஒரு சில பதவி மோகமும், பணமோகமும் கொண்டவர்கள் ஈடுபட்டதே இதற்கான காரணம் ஆகும்.

இது சம்பந்தமாக அரசாங்க மேலதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள் 



Post a Comment

Previous Post Next Post