
ராக்கெட் தயாரிப்பு

கி.பி. 1280ல் ஹஸன் அல்-ரமான் என்பவர் ராக்கெட்டை உருவாக்குவது பற்றியும், வெடிமருந்து தயாரிப்பது பற்றியும் எழுதியுள்ளார்.
வரலாற்றில் முதன் முதலாக ஹைதர் அலீ மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் இருவரும்தான் ராக்கெட்டைத் தயாரித்து ராணுவ நோக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு விஞ்ஞான அறிவுத்துறையில் முந்தைய முஸ்லிம்கள் உன்னதமான நிலையினை அடைந்திருந்தனர். அந்த முஸ்லிம்களை இப்படி விஞ்ஞான முன்னோடிகளாகத் திகழவைத்தது எது? அல்குர்ஆன்தான்!
கடிகாரம்

முஹம்மது இப்னு அலீ இப்னு ருஸ்தூம் குராஸானி என்பவர் கடிகாரங்களை உருவாக்குவதில் பிரபல்யமானவராக விளங்கினார். எனவே இவரை மக்கள் “ஸாஅதி” (கடிகாரம் செய்பவர்) என்றே அழைத்தனர். இவருக்குப் பின் இவரது மகன் கடிகாரங்கள் தயாரிப்பைச் செப்பனிட்டுச் செம்மைப்படுத்தினார்.
இப்னு யூனுஸ் என்பவர் கி.பி.1009ல் காலத்தை அளக்க ஊசல் மணிகுட்டை (பெண்டுலம்) பயன்படுத்தினார்.
‘ஹம்மாம்’ எனப்படும் சூடான நீராவி குளியல் முறையை (Hot Steam Bath) முஸ்லிம்கள்தாம் அறிமுகம் செய்தனர். ‘ஹம்’ (சூடாக்குதல்) என்ற அரபிச் சொல்லில் இருந்துதான் ‘ஹம்மாம்’ என்ற சொல் வந்தது.
நிலயியல் அறிஞர்

அல் இத்ரீஸி ஹிஜ்ரி 493 முதல் 561 வரை வாழ்ந்தார். (கி.பி.1100-1166). இவர் புகழ்பெற்ற நிலயியல் அறிஞர்.
அபூ அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், சுருக்கமாக அல் ஷெரிஃப் அல் இத்ரீஸி என்று அறியப்படுகின்றார். இவர் பிறந்தது சப்தாவில். அலுவிய்யாஹ் எனும் குலத்தைச் சார்ந்தவர். கற்றது குர்துபாவில். (ஸ்பெயின் நாட்டில் உள்ள கார்டோவா.
இவர் ஆசியாவின் ஒரு சில பகுதிகளுக்கும், ஐரோப்பா முழுமைக்கும், ரோட்ஸ் தீவுக்கும் பயணம் மேற்கொண்டு சுற்றி வந்துள்ளார். ”நுஸூத் அல் முஷ்தக்ஃபி இகி ராக் அல் அதக்” எனும் நிலயியல் நூலை எழுதிய பிறகு இவரது புகழ் எங்கும் பரவியது. அதனை கி.பி.1154ம் ஆண்டு எழுதி வெளியிட்டார். அந்த நேரத்தில் நிலயியல் ஆராய்ச்சிக்கு அந்நூல் பெரிதும் துணை புரிந்தது.
மருத்துவத்துறை வளர்ச்சியில் முஸ்லிம்கள்
மருத்துவத்துறை வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகப் பெரியது. ரேஸஸ் என்று மேலைநாட்டவரால் அழைக்கப்படும் அல்ராஸி மற்றும் அபிசென்னா என்று அழைக்கப்படும் இப்னு சீனா ஆகிய இருவரும் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு மிகவும் பங்காற்றியவர்கள். இவ்விருவரின் படங்களும் பாரிஸ் பல்கலைக்கழகம் உட்பட பல மருத்துவப் பல்கலைக்கழகங்களிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் இன்றளவும் இருப்பதைக் காணலாம்.
1.அல்-ராஸி

இவர் எழுதிய மருத்துவ நூல்கள் அனைத்தும் லத்தீன் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு பெயர்க்கப்பட்டுள்ளன.
சின்னம்மை, பெரியம்மை இவற்றிற்கிடையேயான வேறுபாட்டையும் அந்நோய்க்கான காரணங்களையும் இவர்தான் முதன்முதலில் இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்தார். இந்நோயைப் பரப்பும் நச்சுக் கிருமிகளையும், ஒருமுறை பெரியம்மை வந்தால் மறுமுறை அந்நோய் வராது என்பதையும் கண்டறிந்தவர் இவரே.
2.இப்னு சீனா
மருத்துவர்களின் இளவரசன்’ (Prince of Physicians) என்ற அடைமொழி சூட்டப்பட்ட அபூ அலீ ஹூஸைன் இப்னு அப்துல்லஹ் இப்னு சீனா (கி.பி. 980-1036) மருத்துவத்துறையின் மாமேதையாக விளங்கினார்.
இவர், தான் கற்றுணர்ந்த அறிவியல் துறைகள் அனைத்தையும் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் உலகப் புகழ்பெற்றது ‘அல்கானூன் ஃபித்தீப்’ (மருத்துவ விதிமுறை) என்ற நூலாகும். மூளைச்சுற்றி, கொள்ளை நோய், மனக்கோளாறு போன்ற நுண்ணிய நோய்கள் பற்றியும், எலும்புருக்கி நோய்க்கு தொற்றும் தன்மை உண்டு என்பதைக் கண்டறிந்தும் இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை சுமார் 150 ஆகும். இப்னு சீனாவின் மருத்துவச் செல்வாக்கு சுமார் 500 ஆண்டுகள் கோலோச்சி இருந்தது.
இரசாயனக் கலப்பின் தந்தை

கி.பி.8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜாபிர் பின் ஹையான் என்பவர் இரசாயனத்தில் செயல்முறை ஆய்வினை மேற்கொண்டார். இவர் மேற்கொண்ட ஆய்வின் மூலம்தான் வேதியியலின் முக்கிய அமிலமான கந்தக அமிலம் (Salphuric Acid) கண்டறியப்பட்டது.
இதனால் இவர் ‘நவீன இரசாயனத்தின் தந்தை’ என்றழைக்கப்படுகிறார். ஒரு நாட்டின் தொழில் முன்னேற்ற அளவைத் தீர்மானித்திட அந்நாடு பயன்படுத்தும் கந்தக அமிலத்தின் அளவே அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. இது கந்தக அமிலக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது.
துல்லிய நாளேடு கண்டவர்கள்

வானவியல் துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. வானவியல் ஆரய்ச்சிக்கென்றே சிறந்த ஆய்வுக்கூடங்களை நெஷாப்பூர் என்ற இடத்தில் உருவாக்கினார் செல்ரிக் மன்னர் சுல்தான் ஜலாலுதீன் மாலிக் ஹிலஹ். இந்த ஆய்வுக்கூடத்தில் எண்ணற்ற அறிஞர்கள் ஆய்வுகள் பல நடத்தி பல்வேறு விஞ்ஞான உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் உமர் கையாம் என்ற அறிஞர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இந்த ஆய்வுக்கூடத்தில் நடத்திய ஆய்வின் மூலம்தான் அறிஞர் உமர் கையாம் அவர்கள் நாட்களைக் கணக்கிட மிகத் துல்லியமான நாட்காட்டி ஒன்றைத் தயாரித்தார்கள்.
வானவியலார்களில் மிகவும் பிரசித்துப் பெற்றவர்
அப்துல்லாஹ் முஹம்மது இப்னு ஜாபிர் இப்னு சீசான் அல் பத்தானி என்பவராவார். இவர் கி.பி.858லிருந்து 929 வரையில் வாழ்ந்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினார். இவரது கண்டுபிடிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்கது 365 நாட்கள், 5 மணி நேரங்கள், 46 நிமிடங்கள், 24 வினாடிகள் என்று சூரிய ஆண்டுக் கணக்கைத் தீர்மானித்ததாகும். இது இன்றைய நவீன விண்ணாராய்ச்சி மதிப்பிற்கு ஒத்ததாக விளங்குகிறது.
கணிதத்துறையின் புதிய பரிணாமம்

கணிதத்துறையில் இயற்கணிதத்தை வகுத்தவர்கள் அக்காலத்து அரபு முஸ்லிம்களே. இயற்கணிதத்துறையில் குறிப்பிடத்தக்க பெருந்தொண்டு ஆற்றிய பெருமை கி.பி.780 முதல் 850 வரை வாழ்ந்த முஹம்மத் இப்னு மூஸா அல் குவாரிஸ்மி என்பவரையே சாரும். 1,2,3 என்ற எண்முறைக் கணிதம். இவரது பெயராலேயே ஐரோப்பாவிற்கு அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் ‘அல்கோரிதம்’ (Algorithm) என்று அழைப்பர். இது அல்குவாரிஸ்மி என்ற இவரது பெயரைக் குறிப்பதே. இவர் ‘அல்ஜிப்ரா’ (Algebra) என்ற ‘குறிக்கணிதவியலின் தந்தை’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அதிலுள்ள ‘அல்ஜபர்’ என்ற அரபிச்சொல்லிலிருந்துதான் ‘அல்ஜிப்ரா’ என்ற பெயர் பிறந்தது.
1,2,3 என்ற எண்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் அவை இந்தியாவிலிருந்து தோன்றியவை. இந்த எண்கள் அரேபியர்களால் உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதால் இது அரபி எண்கள் (Arabic Numbers) என்றே அழைக்கப்படுகின்றனர்.
உலகம் முதல் பூகோளப்படம்

உலக வரைபடம் வரைவதில் கிரேக்கர்கள் சிறந்து விளங்கினர் என்றாலும் இவர்களது வரைபடம் பல குறைகளைக் கொண்டிருந்தது. இதனால் இலக்குகளைத் துல்லியமாக அறிய கடற்பயண, தரைப்பயண அடிப்படையில் துல்லியமான வரைபடம் ஒன்று தேவைப்பட்டது.
ஏழாவது அப்பாஸியாக் கலீஃபாவான அல்மாமூன் என்பவர் புவியியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். எனவே இவர் துல்லியமான உலக வரைபடத்தை வரைந்திட 70 அறிஞர்கள் கொண்ட குழுவினை நியமித்தார். இத்துறையில் சிறந்தவரான அல்குவாரிஸ்மியின் தலைமையிலான இக்குழு துல்லியமான உலக வரைபடத்தை முதன்முதலில் வரைந்தது.
உலகம் உருண்டை என்ற உண்மையை முதலில் கண்டறிந்தவர்

இந்தப் பூவுலகம் உருண்டை என்ற பேருண்மையை கலிலியோ கண்டறிவதற்கு முன்பாக ஒன்பதாம் நூற்றாண்டிண் கலீஃபா அல்மாமூன் ஆட்சிக்காலத்தில் அல்பிரூனி என்ற முஸ்லிம் அறிஞர் கண்டறிந்தார். மேலும் இவர் உலகின் சுற்றளவை அளப்பதற்கு வியக்கத்தக்கதோர் எளிய வாய்ப்பாட்டை முதன்முதலில் வகுத்தளித்தார். மேலும் சூரியனைச் சுற்றி உலகம் சுழலுவது இயற்கையான நிகழ்வு என்பதையும் கண்டறிந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.992-1050 வரை ஆகும்.
புவி ஈர்ப்பு விசையை முதலில் கண்டுபிடித்தவர்

பெளதீகத்திலும் முஸ்லிம்களே முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். பெளதீகத்தின் அடிப்படை குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆராய்ச்சியின் காரணமாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் பழம் மேலே செல்லாமல் கோழ்நோக்கிப் பாய்ந்து விழுந்ததற்குக் காரணம் அதைப் பூமியின் மையம் ஈர்த்து இழுப்பதேயாகும் என புவி ஈர்ப்பு விசைத் தத்துவத்தை ஐசக் நியூட்டன் கண்டறிந்து கூறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கி.பி.1122ல் அல்காஸினி என்பவர் கண்டறிந்து கூறியுள்ளார். அல்காஸினி என்றழைக்கப்படும் அபுல்ஃபத் அப்துர்ரஹ்மான் அல்மன்சூர் அல்காஸினி இயந்தரவியல் (Mechanics), நீர்மநிலையியல் (Hydrostatics), பெளதீகம் குறித்து எழுதிய நூல் ‘கிதாப் மீஸான் அல் ஹிக்மா’ ஆகும். ’அறிவு ஞானத்தின் சமநிலை பற்றிய நூல்’ என்ற இந்த நூலில் புவிஈர்ப்பு விசைத் தத்துவத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஐரோப்பாவிற்கு ஒளியூட்டிய முஸ்லிம்கள் 

அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கிய தோழர்கள் பன்முகத்திறன் படைத்தவர்களாய் விளங்கினர். அவர்கள் ஒவ்வொரு துறை குறித்தும் ஆழமாகச் சிந்தித்து, சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்களாய்த் திகழ்ந்தனர்.
இறைத்தூதரின் மறைவுக்குப்பின் தொடர்ந்த கலீஃபாக்கள் (கி.பி.632-661), உமையாக்கள் (661-750) அப்பாசியாக்களின் (750-1258) ஆட்சிக்காலத்தில் விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் அரசியல் போன்ற துறைகள் வளர்ச்சியடைந்தது. அதிலும் குறிப்பாக அப்பாசியாக்களின் ஐந்து நூற்றாண்டு ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஆராய்ந்து ஏற்படுத்திச் சென்ற விஞ்ஞானத் தொழில்நுட்பத்தைத்தாம் இன்றைய ஐரோப்பா சுவேகரித்துக் கொண்டுள்ளது. இதைத்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.
“ஐரோப்பா அன்று கல்வியில், விஞ்ஞானத்தில், கலையில், வாழ்வின் அடிப்படை வசதிகளில் பின்தங்கி இருந்தது. அரபு ஸ்பெயின்தான் அதிலும் குறிப்பாக அங்குள்ள கார் டோபா பல்கலைக்கழகம்தான் ஐரோப்பாவின் இருண்ட காலகட்டங்கள் முழுவதும் கல்வி அறிவுப் பேரார்வம் என்னும் ஒளிவிளக்கைத் தொடர்ந்து எரியச் செய்தது. அதனுடைய ஒளிக்கீற்றுகளில் சில ஐரோப்பாவை மூடியிருந்த இருளைக் கிழித்துச் சென்றன.” ‘இந்தியக் கண்டுபிடிப்புகள்’ என்ற நூலிலிருந்து.
runhacker.blogspot.com
Tags:
தகவல் தொழில்நுட்பம்