மஜ்மா நகரில் கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது நிறுத்தம் .

மஜ்மா நகரில் கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது நிறுத்தம் .


இதுவரை 3,634 covid ஜனாஸாக்கள் அடக்கப்பட்ட புனித உடல்களை சுமந்த மஜ்மா நகரின் ஜனாஸாஸா நல்லடக்கம் நேற்றுடன் நிறைவு பெற்றது

.05.03.2021 ஆம் ஆண்டு முதல்    ஆண்டு தொடக்கம் 05.03.2022 வரையிலான ஒரு வருட காலப்பகுயில்  கொவிட்-19 தொற்றினால் மரணித்த 3,634 நபர்களின் புனித உடல்களை புனித மஜ்மா நகரம் தாங்கி நிற்கின்றது. 

Covid ஜனாஸாக்களை அடக்குவது பற்றிய அரசி புதிய தீர்மானத்திற்கு அமைவாக இது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைவாக நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தத்தமது பிரதேசங்களில் 5ம் திகதியிலிருந்து நல்லடக்கம் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதற்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையினால்மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப்பணி முடிவுறுத்தப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், நேற்றைய  தினம் கொவிட் -19  மையவாடிக்கு அருகில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களுக்காக விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், இராணுவத்தினர், சுகாதாரத்தரப்பினர், பிரதேச சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது,  இதுவரையில் covid ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பாடுபட்ட, நாடளாவிய ரீதியில் ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு தரப்பினர் , சமூக சேவகர்கள்,  சேவை நிறுவணங்கள் , தனவந்தர்கள் , அரசியல் பிரமுகர்கள் உற்பட  அத்தனை பேருக்கும் பிரதேச சபை தவிசாளர் நவ்பர்  தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post