பயங்கர நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிதியுதவி அளியுங்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ராஷித் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 1000 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்போது வரை 1,500 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தலிபான் தலைமையிலான அரசாங்கமும் சர்வதேச உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வீரர் ராஷித் கான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி கொடுத்து உதவுங்கள் என உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நிலநடுக்கத்தினால் ஆப்கானிஸ்தான் பரிதாபமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். மக்கள் பலர் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவிட நான் நிதி திரட்டுகிறேன்.
இந்த கடினமான மற்றும் முக்கியமான நேரத்தில் உங்கள் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கும். உங்களது சிறு பங்களிப்பும் எங்களுக்கு மிக முக்கியம். எனவே தயவுசெய்து நிதியுதவி அளித்து உதவுங்கள்.
என்னைப்போலவே வீடியோ வெளியிட்டு நிதி திரட்ட ஷாகித் அப்ரிடி, ஹர்திக் பாண்ட்யா மட்டும் டி.ஜே.பிராவோ ஆகியோர் கேட்டுக்கொள்கிறேன்' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கல்ஹின்னை டுடே
galhinnatoday@gmail.com
Tags:
உலகம்