உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான சாடியோ மானே செனகலின் ஏழ்மை குணம்

உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான சாடியோ மானே செனகலின் ஏழ்மை குணம்

உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான 30 வயதான சாடியோ மானே செனகல் (Sadio Mane senegal) இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (15கோடி) சம்பாதிப்பவர். புகழ்பெற்று விளங்கும் இவரின் ஏழ்மை குணம் தான் பலரையும் அப்போதே வியக்க வைத்திருந்தது.

கடந்த 2020 ஆண்டில், இவர் உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார். அப்போது ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்ட போது, அவள் அளித்த தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.

அதற்கு அவர், நான் அதை சரி செய்வேன், டிஸ்பிளே மாற்றி விடுவேன் எனக்கூறினார். அதற்கு நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கும் அவரின் பதில், என்னால் ஆயிரம் மொபைல்கள் , 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை வாங்க முடியும்.,

ஆனால் இதையெல்லாம் நான் ஏன் வாங்கனும்? நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டபட்டுள்ளேன், விவசாயம் செய்துள்ளேன்.. அப்போது என்னால் படிக்க முடியவில்லை, எனக்கு காலணிகள் இல்லை, காலணிகள் இல்லாமல் விளையாடுவேன், நல்ல உடைகள் இல்லை, சரியாக சாப்பிட்டது இல்லை.

ஆனால் இன்று நான் நிறைய பணத்தை சம்பாதிக்குறேன். அதனால் தான் சம்பாதித்த பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்..

என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும், உணவும் கொடுக்குறேன். மேலும், வசதியாக வாழ்வதற்கு பதிலாக அதை என் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என Sadio Mané தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

பின் அந்த ஐபோன் கூட அவர் விரும்பி வாங்கவில்லை. அவரது நண்பர் Liverpool அணியின் Georginio Wijnaldum என்பவரால் பரிசாக வழங்கப்பட்டது. இவரின் இந்த ஏழ்மை குணம் தான் உலகமே இன்றுவரை இவரை கொண்டாட உத்வேக சாதனை நாயகனாகவும் வலம் வருகிறார் என ரசிகர்களும் இன்று வரை பாராட்டி வருகின்றனர்.

கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post