அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்கத்துஹு
இல்மைச் சுமந்த ஆலிம்கள் சமூகத்தின் கலங்கரை விளக்காகவும் இருளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சத்திய ஜோதியாகவும் திகழ்பவர்கள் என்றால் மிகையன்று!
இன்று நாம் காணும் உலகிலேயே நீதி அநீதியாகும், தர்மம் அதர்மம்யாகவும் தலைவிரித்தாடுகிறது ஏன்? .
,பதவிக்காகவும் ,பணத்திற்காகவும் எதையும் இலக்கத் தயாராகும் தலைமைகளால் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை இன்று நாம் உலகில் காண்கின்றோம்
இந்நிலைமையால் நீதி,நேர்மையில்லாத ஒரு உலகமாக மாறிக்கொண்டிருப்பதையும் காண்கின்றோம்.
மார்க்க போதகர்கள் பெரும்பாலும் நம் சமூகத்தில்கூட ஆதாரமற்ற கருத்துக்களையெல்லாம் தன்னலம் கருதி தெரிவிக்கின்றதை இன்று காணக்கூடியதாய் உள்ளது.
அதில் குறிப்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமசபைத் தலைவர் (ரிஸ்வி முப்தி) அவர்களின் கருத்துக்கள் எம் சமூகத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி இலங்கை வாழ் முஸ்லிகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பதை அறிவோம் .
ஒரு இடத்தில் ஜனாஸாவின் சாம்பல் போதும் இன்னுமொரு இடத்தில் ஜனாஸாவை தீயில் எரிப்பது ஹராம் என்றும் பதிவிட்டுள்ள சில ஒலிநாடாக்களை காணக்கூடியதாக உள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான் என்ற இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு எதிராக அவரின் கருத்துக்கள் இருப்பதால் ,இந்த விடயம் குறித்த காரசாரமான விமர்சனங்கள் பல வலைப்பதிவுகளில் காணக்கூடியாயுள்ளது.
நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இணையத்தில் நிறைய முகமூடிகள் உலவுகின்றனர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களும் அவர்களுள் இருக்கலாம். அதனால் பெயரை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். அத்தகையோர் வெளிப்படுத்தும் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.
உலமாக்களின் அந்தஸ்தும் கௌரவமும் குறைக்கப்படுவதற்கு சில உலமாக்களின் நடத்தைகளும் காரணமாக அமைகின்றன. கற்றவர்களிடம் கல்வியின் செயற்பாடுகள் குன்றிக் குறைந்து போனால் அவர்களின் மகிமை எப்படி மங்கி மறையாதிருக்கும்?
உலமாக்களிடம் இஸ்லாமியப் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும், ஒழுக்க மாண்புகளும் உயர்வாகவே இருக்க வேண்டும். கடந்த கால உலமாக்கள் மாமன்னர்களுக்கு முன்னாலும் தலை தாழ்த்தாமல் இல்மின் கண்ணியம் பேணி இருக்க, இன்றைய உலமாக்களில் சிலர் மிகுந்த உலக மோகம் கொண்டவர்களாகவும் அற்ப ஆதாயத்திற்காக மார்க்கத்தை மறைக்கவும் நெளிக்கவும் தயங்காதவர்களாகவும் திகழ்கின்றனர்
.
தாம் கற்ற கல்விக்கு ஏற்ப மக்களை வழிநடாத்தக் கடமைப்பட்டவர்கள் நிர்வாகிகளின் நிபந்தனைகளுக்கு ஏற்ப மார்க்கத்தை வளைக்கும் நிர்க்கதி நிலைக்குச் சென்றுள்ளனர். இத்தகைய சில உலமாக்களால் ஒட்டுமொத்த உலமாக்களின் அந்தஸ்துக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் அறியாமை காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவியுள்ள ஷிர்க்கான நடவடிக்கைகள், மூட நம்பிக்கைகள், அந்நிய கலாசார பழக்க வழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு வேண்டியது உலமாக்களின் கட்டாயக் கடமையாகும்.
இன்று இலங்கையில் பேரினவாத சக்திகளது “இனவாதப் போக்கு” மற்றும் “இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனையுத்தம்” போன்றவற்றில் எமது உலமாக்களது பங்குபற்றி மிகப்பெரிய கேள்வி உள்ளது. இவர்களுக்கு சமூகத்தை வழிநாடாத்துவதற்கான பாரிய பொறுப்புள்ளது. குப்பார்களுக்கு இஸ்லாத்தை தெளிவு படுத்தவும் அவர்களது நச்சுக்கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.
எனவே வேஷம் போட்டுக்கொண்டு உடை, நடை, பாவனையில் மாத்திரம் நான்தான்டா மார்க்க போதகர்கன் என்று வாய்மொழியாமல் இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். என்பதைமாத்திரம் பாமர மக்களின் முன் கொண்டு செல்வது உலமாக்களுக்கு இருக்கின்ற மிகப் பெரும் பொறுப்பு என்பதை இன்றைய உலமாக்கள் மறந்துவிடக்கூடாது.
ரிஸ்வி முப்தியின் தவறான கருத்துக்கள் குர்ஆன் ஹதீஸுக்கும் முரணாக இருக்கும் பட்சத்தில் அதை தட்டிகேட்கும் தைரியம் ஏனைய உலமாக்களுக்கு இருக்க வேண்டும்.உலமா என்ற முக மூடி அணிந்து மக்களை ஏமாற்றி வயிற்ரை நிரப்பும் மனிதைர்களை உலமா என்று மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் இன்றைய உலமாக்கள் புரிந்துகொள்ள வேண்டும் .
வெறும் மதரசாக்களில் படித்துவிட்டு உலமா என்று பெருமை அடித்துக்கொள்வதை நிறுத்திவிட்டு சமூகத்தோடு இணைந்து சமூக நலன்களுக்காக பாடு படுங்கள்.நியாயம் ,அநியாயம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
இன்றைய இக்கட்டான இந்த காலகட்டத்தில் உலமாக்களின் சேவை மிகவும் முக்கியமாக தேவைப்படுகின்றது,
பட்டம் பெற்று பதவிகளுக்காக இஸ்லாமிய கொள்கைகளை மாற்ற எந்த ஒரு மனிதருக்கும் உரிமை இல்லை என்பதை உலமாக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி இருந்தால் மட்டுமே உலமாக்களுக்குரிய உயர்வான மரியாதையை எதிர்பாக்கலாம் .
மக்கள் மதிப்பார்கள் .
கல்ஹின்னை டுடே
galhinnatoday@gmail.com
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்