பில் கேட்ஸ் 20 பில்லியன் அமெரிக்க டொலரை தானமாக வழங்க தீர்மானித்துள்ளார்

பில் கேட்ஸ் 20 பில்லியன் அமெரிக்க டொலரை தானமாக வழங்க தீர்மானித்துள்ளார்


தனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கவுள்ளதாக உலகின் முன்னணி செல்வந்தர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்துள்ளமை பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கமைய, 20 பில்லியன் அமெரிக்க டொலரை அவர்  (Bill Gates) தானமாக வழங்க தீர்மானித்துள்ளார் அத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வௌியேற விரும்புவதாகவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த செல்வந்தரான பில் கேட்ஸ் (Bill Gates) கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தாலும் உலகிலுள்ள செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் (Bill Gates) ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போதைய உலக பணக்காரர்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் பில் கேட்ஸ்  (Bill Gates) உள்ளார். அதேசமயம்   பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நலத்திட்டங்களை உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post