எதிர்வரும் நாட்களில் இலங்கை மக்கள் எதிர்கொள்ளப் போகும் உணவுப் பிரச்சினைக்கு ஓர் முன்னேற்பாடாக ஊரில் கல்ஹின்னை ஒன்றியத்தின் அனுசரையுடன் பயிரிடுதல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இன்றைய பொருளாதார வீழ்ச்சியில் அடுத்து வரும் நாட்களில் மக்கள் பாரியளவில்உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை கருத்தில்கொண்டு இந்தப் பயிறிடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம் கல்ஹின்னை அல் மனார்தேசிய பாடசாலையில் விவசாய விழிப்புணர்ச்சி ஊட்டும் நிகழ்வும் பயிர்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன் இரண்டாம் கட்ட நிகழ்வு படகொள்ளாதெனிய ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியாலய மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மத்திய மாகாண விவசாயத்துறை விஷேட அதிகாரி வருகை தந்து பொது மக்களுக்கு விவசாயத்துறையின் மகிமைமையினை சிறப்பாக விலக்கினார்.
அத்தோடு ஒன்றியத்தின் தலைவர் அல் ஹாஜ்.S.M.ஜிப்ரி அவர்கள் உரையாற்றும் போது "நாம் நமது அன்றாட தேவைகளுக்காக இந்தியாவையும் ,சீனாவையும் நம்பியே இருக்கின்றோம். அதற்குப் பரிகாரமாக விவசாயத்தை நம்புவதால் எதிகாலம் சிறப்பானதாய் அமையும் "என்ற ஆணித்தரமான கருத்தையும் தெரிவித்தார்.
இவ்விழாவுக்கு பூஜாபிட்டிய பிரதேச சபை உப தலைவர் ஜனாப் ஏ.எல்.எம்.றஸான் அவர்களும்,மற்றும் மார்க்க அறிஞர்கள்,விவசாய அதிகாரிகள்,அல்-மனார் உப அதிபர்.M.C.M.ராபி, துர்ஹம் பாடசாலை அதிபர் ஜனாப் அனஸ் ஜாமாலியா பாடசாலை அபிவிருத்தி சங்க செயளாலர் ஜனாப் K.மபாஸ் ஆகியோர் கலந்து கொண்டதோடு நிகழ்ச்சிகளை அல்-மனார் உப அதிபர் ஜனாப் எம்.ஸீ.எம் ராபி அவர்கள் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தகவலும் படமும்,
கலாஜோதி கல்ஹின்னை நிசார்ஷா
galhinnatoday@gmail.com
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்