வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் மெசேஜ் தொடர்பில் ஒரு முக்கிய அப்டேட்டை அந்நிறுவனம் வெளியிடுகிறது.
வாட்ஸ் அப்பில் நாம் சில சமயம் அவசரத்தில் அனுப்ப வேண்டிய நபருக்கு பதிலாக வேறு நபருக்கு மெசேஜை மாற்றி அனுப்பிவிடுவோம். அல்லது அனுப்ப வேண்டிய நபருக்கே தவறான மெசேஜ்களை அனுப்பிடுவோம்.
இனி இந்த தவறை செய்தால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் வாட்ஸ் அப் செயலியில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை இரண்டரை நாட்கள் வரை நிரந்தரமாக அழிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த செயலியில் ஒருவருக்கு அனுப்பும் தகவல்களை (delete for everyone) என்ற வசதியை பயன்படுத்தி இருபக்கமும் நிரந்தரமாக அழித்துக்கொள்ளலாம்.
தற்போது, அவ்வாறு அழிக்க கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் என்ற அவகாசத்தை நீட்டிக்க வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி 2 நாட்கள், 12 மணி நேரம் வை கூட அழிக்கலாம் என தெரியவந்துள்ளது.
galhinnatoday@gmail.com
Tags:
தகவல் தொழில்நுட்பம்