100 சிறந்த விடுகதைகளும் விடைகளும்

100 சிறந்த விடுகதைகளும் விடைகளும்


1. மண்ணுக்குள்ளே  கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?
2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ?
3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?
4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
5. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
6. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
7. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான் அவன் யார்?.
8. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்  அது என்ன ?
11. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்- அவன் யார் ?
12. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது- அது என்ன ?
13. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை- அது என்ன ?
14. மழையில் பிறந்து வெயிலில் காயுது - அது என்ன ?
15. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன் அவன் யார்??
16. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும்- அவன் யார்?
17.பல் துலக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள் - அவன் யார் ?
18.ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு -அது என்ன?
19. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை- அது என்ன?
20. ஊரெல்லாம் வம்பளப்பான்; ஓர் அறையில் அடங்குவான்- அவன் யார்?  
21.இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல,வேகமாய் ஓடும் மான் அல்ல,
கால்கள் உண்டு மனிதனல்ல.- அது என்ன?  
22.தங்கச்சி  விளக்கு  காட்டுவாள்.அண்ணன்  மத்தளம் கொட்டுவான் .
அம்மா  தண்ணீர்  தெளிப்பாள்  - அவர்கள் யார்?
23. குரலோசை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே-அது  என்ன ?
24 .நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?
25 .மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு வந்துவிடும்?
26 .வந்தால் கொண்டாட்டம், வராவிட்டால் திண்டாட்டம்
27. ஆடி ஆடி நடப்பான், அமைதியாக அதிர வைப்பான்?
28 . குளத்துத் தண்ணீரில்  பாம்பு நீந்துது.பாம்பின் வாயிலோ மஞ்சள் நிறக் குருவி-அது என்ன? 
29 .நீண்ட  உடலிருக்கும்  தூணும் அல்ல ,உடலில்  சட்டை  இருக்கும் ஆனால்   உயிர்   இல்லை,துயிலில்  சுகம்  இருக்கும்  மெத்தை அல்ல ... அது  என்ன? 
30 .ஈரேழு பதினாலு இறகு மயிலாட,முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட.வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?
31 .கோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன்.பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்.பழுக்காத காயைப் 
பணிந்து வைத்தேன். விதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன். - அது என்ன?
32 .தலை போனால் மறைக்கும்;இடை போனால் குரைக்கும்;கால் போனால் குதிக்கும்;மூன்றும் ஒன்று 
சேர்ந்தால்முந்தி ஓட்டம் பிடிக்கும். - அது என்ன?
33 .பளபளவென்று பட்டுடுத்திப் பதினாயிரம் குஞ்சலம் தொங்கவிட்டுத்
தெருவைச் சுற்றி வருகிற பெண் திரும்பிப் பார்க்க மாட்டாளாம். - அது என்ன? 
34 .அஞ்சு விரல் அமர்ந்தாட;பத்து விரல் பந்தாட;சூரியனுடன் வாதாட;
எமனுடன் போராட - அது என்ன? 
35 . அந்தரமான குகையிலே,சுந்தரமானவள் ஆடுகிறாள் -  அது என்ன?   
36 .மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்.மூத்த பெண் ஆற்றிலே;நடுப்பெண் காட்டிலே;கடைசிப்பெண் வீட்டிலே. _ 
அவைகள் என்ன ?
37 .பச்சை கதவு,வெள்ளை ஜன்னல்,திறந்தால் கருப்பு ராஜா - அது என்ன? 
38 . கையிலே அடங்குவார்;கதை நூறு சொல்லுவார். - அது என்ன?  
39 . பட்டணத்தில் இருந்து இரண்டு சிறாய் கொண்டு வந்தேன்;ஒன்று எரியுது; இன்னொன்று புகையுது. - அது 
என்ன?
40 . ஒரு கிணற்றில் ஓரே தவளை! - அது என்ன? 
41 . பறிக்கப் பறிக்க பெரிதாகும்! - அது என்ன? 
42 . படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும்;அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். - அது என்ன?
43 .கால் இல்லை; ஓட்டம் உண்டு,மூச்சு இல்லை;காற்று உண்டு. - அது என்ன?
44 . செய்வதைச் செய்வான்;சொன்னதைச் செய்யான். - அவன் யார்?
45 .பிறக்கும் போது வால் உண்டு;இறக்கும் போது வால் இல்லை. - அது என்ன? 
46 . இலையுண்டு; கிளையில்லை,பூ உண்டு; மணமில்லை,காய் உண்டு; விதையில்லை,பட்டை உண்டு, கட்டை 
இல்லை,கன்று உண்டு; பசு இல்லை - அது என்ன?
47 . உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நியாயம் சொல்வார் - அது என்ன? 
48 . அதட்டுவான்; அலறுவான் - ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான். - அவன் யார்?  
49 .விடிந்தவுடனே வேலையில் இறங்குவான்;வேலை இல்லையேல் மூலையில் கிடப்பான்.  - அவன் யார்?   
50 .வீட்டிலே இருக்கிற அண்டாவுக்குக் காதும் இல்லை:மூடியும் இல்லை. - அது என்ன ? 
51.அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி” அது என்ன?
52.வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க முடியாது
கறுத்தப்பிள்ளையார் கோவிலில் கால்வைக்க முடியாது
அது என்ன?
53.பெட்டியைத் திறந்தேன்,கிருஷ்ணன் பிறந்தான்” அது என்ன?
54.செண்பகவல்லி அம்மனும் பூவண்ண நாதரும் சிரித்து மகிழ்ந்து
தொடுத்த பூவைச் சிக்கில்லாமல்”அவிழ்த்தவருக்குச் சிக்கந்தா மலை சீதனம்…அது என்ன?
55.மஞ்சள் குருவி ஊஞ்சலாடும் மகாதேவனுக்குப் பூசைக்காகும் -
அது என்ன?
56.கூரை வீட்டைப் பிரிச்சா..ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் 
குளம்!அது என்ன?
57.அம்மா பிள்ளைத்தாச்சி அப்பா ஊர்சுற்றி!இவர்கள் யார்?
58.அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது!அது என்ன?
59.நீரிலே பிறப்பான்.. வெயிலிலே வளர்வான்.. நீரிலே இறப்பான்..!அவன் யார்?
60.சாத்திய கதவிருக்க, ஏற்றிய விளக்கிருக்க,இரவில் வந்தது யார்? இரத்தத்தைக்  குடித்தது யார்?
61.செக்கச் சிவந்திருப்பாள், செட்டியார் மகள் நாளைச்சந்தைக்கு வருவாள் நாத்தியார் மகள்- அது என்ன? 
62.சேலம் சிவப்ப,செவ்வாய்ப்பேட்டை கருப்பு,உடைத்தால் வெள்ளை, உண்டால் கசப்பு-அது என்ன? 
63. கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்-அது என்ன?
64. கடுகு மடிக்க இலை இல்லை, யானை படுக்க இடமுண்டு- அது என்ன?
65.கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ள நீரைக் கண்டு பதைக்கிறான்- அது என்ன?
66.கட்டைக்காளை குட்டைக்கொம்பு- கிட்டப் போனால் முட்ட வருது- அது என்ன?
67.கழனியில் விளைந்த கதிரை, கத்தரி போட்டு வெட்டுவார்- அது என்ன?
68. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான்-அது என்ன?
69. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து,தெருவிலே திரியும் பூ எது?
70. கரிச்சக்கட்டி வயிற்றிலே வெள்ளை முத்துக்கள், அது என்ன?
71. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை காகம் நிற்குது- அது உன்ன?
72.வண்ணத்தில் சிவப்பழகன்; வாய்க்குள் சேதி வாங்குவான். அவன் யார்?
73.வெள்ளை நிற சாமியார்; தண்ணீரைக் கண்டால் தவமிருப்பார். அவர் யார்?
74.செய்வதைச் செய்யும் குரங்கும் அல்ல;சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல.
அது என்ன?
75.கறுத்த மேகம் கண்ணீர் விட்டால் ஓடோடி வந்து உதவுவான். அவன் யார்?
76.ஓங்கி வளர்ந்தவன் ஒரு பக்கம் சாய்ந்தான். அவன் யார்?
77.அச்சு இல்லாத சக்கரம்: அழகு காட்டும் சக்கரம். அது என்ன?
78.உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
79.வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
80.சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
81.இரட்டைக் குழல் துப்பாக்கியில்,எப்போதாவது வேட்டுச் சத்தம்-அது என்ன?
82.வீட்டுக்கு வீடு தவறாது வரும், புத்தாண்டின் முதல் விருந்தாளி-அது என்ன?
83.வெள்ளை உடம்புக்காரிக்கு,பச்சை நிறக் கூந்தல்-அது என்ன?
84. மஞ்சள் தோல் பைக்குள், இனிய வெள்ளைப் பணியாரம்-அது என்ன?
85.துடுக்குப் பையனின் வாலில் இருக்குது அபாயம்-அது என்ன?
86.காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை – அது என்ன?
87.மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது – அது என்ன?
88.உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன்- அவன் யார்?
89. கன்னங்கரேல் என்று இருக்கும், காரிருள் அல்ல கானம் பாடித் திரியும்,வானம்பாடி அல்ல- அது என்ன?
90.ஓடியாடித் திரியும்- உடலைத் தேடிக் குத்தும் – அது என்ன?
91. நூல் நூற்கும், ராட்டை அல்ல ஆடை நெய்யும், தறி அல்ல- அது என்ன?
92. இருந்தாலும்,  இறந்தாலும்,  பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன?
93.தண்ணீரில் நீந்தி வரும் தரையில் தாவி வரும் – அது என்ன?
94. ஊசி போட்ட வைத்தியர் ஊமை போல போகிறார் – அவர் யார்?
95.போகும் இடமெல்லாம் கோடு கிழித்திடுவான் – அவன் யார்?
96.இருப்பது இரண்டு கால், ஓடுவது குதிரை வேகம்,  இறக்கை உண்டு  பறக்காது  – அது என்ன?
97.மழையின்றி மாரியின்றி பச்சையாவதென்ன?பூவின்றி காயின்றி பழம் பழுப்பதென்ன?
98.ஓஹோஹோ மரத்திலே உச்சாணிக் கிளையிலே வைகுண்ட ராஜனுக்கு கழுத்திலே வெள்ளை- அது என்ன?
99.நடைக்கு உவமை நளனுக்கு தூதுவன் – அது என்ன?
100.பகலில் துயிலுவாள்,இரவில் அலறுவாள்- அது என்ன?

விடைகள்
1.மஞ்சள்
2.மாதுளம்பழம்
3.இதயம் 
4.உப்பு
5.அடுப்புக்கரி
6.ஒட்டகம்
7.கரண்டி    
8.பாயாசம்
9.பென்சில்
10.வெண்டைக்காய்
11.நிலா
12.செருப்பு
13.மழை
14.காளான்
15.ரயில்
16.தேள்
17.சீப்பு
18.நிலா
19.நாக்கு
20. நாக்கு
21. மிதிவண்டி (cycle)
22.மின்னல் , இடி, மழை   
23.தொலைபேசி 
24. பூனை   
25.டிசம்பர் 
26. மழை 
27. யானை  
28. அகல் விளக்கு - குளம், தண்ணீர்- எண்ணெய், பாம்பு- திரி,
மஞ்சள் நிறக் குருவி-தீப ஜுவாலை 
29.தலையணை  
30. பல்லாங்குழி
31.வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் 
32.குதிரை
33. தேர்
34.வரட்டி
35.வாய், நாக்கு 
36.ஆற்றில் - முதலை,  காட்டில் - உடும்பு,  வீட்டில் - பல்லி    
37.சீத்தாப்பழம்     
38.புத்தகம் 
39. கற்பூரம், சாம்பிராணி
40. வாய்,நாக்கு 
41.குழி
42.கனவு
43.பந்து  
44.கண்ணாடி
45.தவளை
46.வாழை
47.தராசு
48.நாக்கு
49.துடைப்பம்
50.கிணறு      
51. மயில்        
52.கண்
53.நிலக்கடலை
54.தூக்கணாங்குருவி கூடு
55.எலுமிச்சம்பழம்            
56.தேங்காய்
57.பூசணிக்காய், பூசணிக்கொடி
58.கால் படி,அரை படி
59.உப்பு 
60.கொசு
61.மிளகாய்
62.குன்றிமணீ
63. தலை,பேன்கள்
64.சவுக்குமரம்
65.    செருப்பு
66.  முள்
67.தலைமுடி  
68.சோளக்கதிர்
69.உப்பு
70.சாதம்
71.உளுந்து
72.தபால்பெட்டி
73.கொக்கு
74.கண்ணாடி
75.குடை
76.மூங்கில்
77.வளையல்
78.பாய்
79. பூட்டு,சாவி
80. கண்
81.மூக்கு, தும்மல்
82.காலண்டர்
83.முள்ளங்கி
84. வாழைப்பழம்
85.தேள்
86.ஈ
87.ஈசல்
88.எறும்பு
89.கருவண்டு
90. கொசு
91.சிலந்தி
92.தட்டாம் பூச்சி
93.தவளை
94.தேனீ
95.  நத்தை
96.நெருப்புக் கோழி
97. கிளி
98.கருடன்
99.அன்னம்
100.ஆந்தை 

Post a Comment

Previous Post Next Post