நியூசிலாந்து பற்றிய வினோத தகவல்கள்!

நியூசிலாந்து பற்றிய வினோத தகவல்கள்!

நமக்கு நியூசிலாந்து நாட்டை பற்றி கேட்டதும், அந்த நாட்டின் கிரிக்கெட் அணி மற்றும் கிவி பறவை தான் சட்டென்று ஞாபகத்துக்கு வரும். பசுபிக் பெருங்கடலில் தீவுகளாக அமைந்திருக்கும் இந்த நாட்டில் எண்ணற்ற சுற்றலா தளங்கள் உண்டு. இந்த நாட்டின் அழகைப் பற்றி தெரிந்தாலும், இந்த நாட்டை பற்றி சில வியக்கவைக்கும் தகவல்களை இங்குத் தெரிந்துகொள்வோம்
ஸீலாந்து” என்ற கண்டத்தின் 3% சதவீதம் தான் நியூசிலாந்து நாடு. அந்தக் கண்டத்தின் 97% நிலப்பரப்பு நீரில் முழுகிவிட்டது. 800 ஆண்டுகளுக்கு முன்புவரை நியூசிலாந்தில் மனிதர்கள் யாரும் வாழவில்லை.

நியூசிலாந்தின் பெரும்பகுதி மக்கள் தொகை ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இந்நாட்டின் மகாராணி மற்றும் மாநில தலைவராக இருப்பவர் எலிசபெத் மகாராணி !
நியூசிலாந்தின் மூன்று அதிகாரப்பூர்வ மொழிகளில் சைகை மொழியும் ஒன்று !
 
உலகில் உள்ள சில நாடுகளில், ஒரு தொழிலை தொடங்க சில நாட்கள் அலைந்து திரிந்து உரிமை பெற்று அந்தத் தொழிலை தொடங்குவதற்குள் ஒரு ஜென்மமே முடிந்தது போல் இருக்கும். ஆனால் நியூசிலாந்தில் பிசினஸ் தொடங்க ஒரு நாள் போதும். உங்களிடம் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். இதுமட்டும் அல்ல, உலகிலேயே மிக விரைவாகத் தொழில் தொடங்கும் வசதிகள் கொண்ட நாடுகள் பட்டியலில்  நியூசிலாந்து முதல் இடம் வகிக்கிறது.

சுதந்திரம் பெற்று நவீன நாகரிகமான நாடுகளில், முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு நியூசிலாந்து ஆகும். உலகின் ஊழலற்ற நாடுகள் பட்டியலில் நியூசிலாந்தும் ஒன்று. ஊழலற்ற சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது நியூசிலாந்து.

பாம்புகள் இல்லாத முன்று நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. இங்கு நிலத்தில் வாழும் பாம்புகள் இதுவரை தென்பட்டதில்லை. powelliphanta எனப்படும் மிகப்பெரிய நத்தைகள் நியூசிலாந்தில் அதிகம் உள்ளது. இவை மாமிசம் உண்ணும் நத்தைகள், மண்புழு,குருட்டடி,இலை அட்டைப் போன்றவற்றை உண்ணும். இவை நமது உள்ளங்கை அளவுக்கு வளரக்கூடியவை.

2013 ஆம் ஆண்டு, நியூசிலாந்தில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு திறன் கொண்ட ஒரு பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் செங்குத்தான தெரு நியூசிலாந்தில் உள்ள பால்ட்வின் தெருவாகும். இந்தத் தெரு  38° சாய்வாக உள்ளது.
உலகின் முதல் பங்கீ ஜம்பிங் நியூசிலாந்தில் 1980-களில் தொடங்கப்பட்டது.
 
அதிகமான எடை உள்ளவர்களுக்கு நியூசிலாந்தில் தங்குவதற்கு விசா கொடுக்கமாட்டார்கள்.


Post a Comment

Previous Post Next Post