உடல் எடையை குறைப்பதற்கு நாள் தோறும் வொர்க் அவுட், யோகா, நடைப்பயிற்சி என பல்வேறு முறைகள் உள்ளது. இதை தவிர சிலர் அடிக்கடி பசி எடுப்பதால் மருந்து மாத்திரைகளை கொண்டு பசியை அடக்கி உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் இந்த உடல் எடையை குறைக்க சிறிதளவு சீரகம் போதும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எப்போதும் இயற்கை முறை மருத்துவம் தான் எந்த பக்க விளைவுகளும் இன்றி நம் உடலில் உள்ள நோய்களை நீக்கும் மருந்தாக அமையும்.
அதே போல தான் இந்த சீரக தண்ணீரும். இது போன்ற பல நன்மைகளை கொண்ட சீரக தண்ணீரை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்..
இதற்கு முதலில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு குளிர வைத்து தினமும் அடிக்கடி குடித்து வந்தால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இந்த முறையை தினமும் தவறாமல் பின்பற்றி வந்தால் ஒரே வாரத்தில் 2 கிலோ எடை வரை குறைக்கலாம். இதனை குடிப்பதால் அளவுக்கு அதிகமாக பசி எடுப்பதும் குறைக்கப்பட்டு அளவுக்கு மிஞ்சி உணவு சாப்பிடும் பழக்கமும் தவிர்க்கப்படுகிறது.
சரியான உணவை சரியான இடைவெளியில் எடுத்து கொண்டால் உடல் எடையை ஈசியாக குறைத்து விடலாம்.
Tags:
ஆரோக்கியம்