பாரதியின் கவிதை மரபில் வந்த “ஈழத்துக் கவிமணி" சுபைர்

பாரதியின் கவிதை மரபில் வந்த “ஈழத்துக் கவிமணி" சுபைர்


காலம் காலமாக பிரபுத்துவ ஆட்சி முறையில் வளர்ந்த தமிழ்க் கவிதை மரபு பாரதியின் தோற்றத்திற்குப் பிறகு தான் மாற்றமடைந்தது. தெய்வத்தையும், அரசர் களையும், பிரபுக்களையும் பாடிப் பொருள் பெற்று தம் வாழ்க்கையை நடத்தி வந்த புலவர்கள், யாப்பிலக்கணத்திற்கமையவே தம் கவிதைகளை யாத்தனர். இக்கவிதை மொழி. பெரும்பாலும் புலவர்களுக்கு மாத்திரமே விளங்கியது. பாமர மக்களுக்கு இக்கவிதை மொழி புரியவில்லை. இதனைப்பற்றி கவிஞர்களோ, பிரபுக்களோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பாமர மக்களும் அலட்டிக் கொள்ளவில்லை.

தமிழ் இலக்கியத்தில் இரு போக்குகளைக் காண்கிறார்கள். ஜீவானந்தம் ஒரு போக்கு, மாயாவாதம், ஆத்மீகத் தத்துவம் தெய்வத்தத்துவம் என்று சொல்லிக் கொண்டு மனிதனையும் மனிதனின் முயற்சிகளையும் மனித வாழ்வின் உண்மையையும் வீரியத்தையும் சிறுமைப்படுத்துவது, பண்டைக்காலத்திய பாரம்பரியத்தைக் கொண்டாடுவதன் பெயரால் பிற்போக்கான பழைய கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் இன்று நிலைநாட்ட முயல்வது.

இரண்டாவது போக்கு எல்லாம் மக்களுக்காவே என்ற அடிப்படையில் செயல்படுவது. தெய்வத்தைப் பாடும்போது மக்களை மையத்தில் வைத்து மக்களின் ஆன்மீக வளர்ச்சி யையும் அதற்கு ஆதாரமாயுள்ள லௌகீக வாழ்க்கை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு விளங்குகின்றது.

இந்த இரண்டாவது போக்கைத்தான் பாரதி முன்வைத்தான். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராக இந்திய மக்களின் சுதந்திர எழுச்சிக்காலத்தில் வாழ்ந்த பாரதி, இவ்வெழுச்சியின் ஓர் அங்கமாகப் பரிணமித்தான். அவன் தன்னுடைய கவிதை களில் ஒரு புதிய இந்திய சமுதாயத்தைக் கண்டான். இப்புதிய சமுதாயம் உருவாவதற்குத் தக்கவிதத்தில் தன்னுடைய கவிதைகளை யாத்தான்.

'நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்"

என்று சுதந்திர வெறிகொண்டு, அல்லும் பகலும் இப்புதிய சமுதாயம் தோன்ற உழைத்தான். பண்டைய மரபையே பேசிப் பேசி பழைய குட்டையிலேயே இருக்கும் ஒரு சமுதாயம் வீறு கொண்டு எழ வேண்டுமானால் அச்சமூகத்தில் புதிய கருத்துக்கள் தோன்ற வேண்டும். புதிய மரபு. புதிய பாரம்பரியம் உருவாக வேண்டும். இந்திய தத்துவ மரபு இரு பிரிவுகளின் அடிப்படையில் வளர்ந்திருந் தது. ஒன்று வேதங்களையும், அவற்றுக்குப் பின்னால் அவ்வேதங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல்களையும் சார் ந்து உருவாக்கப்பட்ட தத்துவங்களாகும். இரண்டாவது இவ்வேதங்களை எதிர்த்து எழுந்த தத்துவங்கள், சமணம், பௌத்தம் போன்ற சமயத் தத்துவங்கள்.

பாரதியின் காலத்தில் ஆங்கிலக்கல்வி பரவலாக்கலினாலும் மேல்நாட்டு அரசியல், சமூக, தத்துவக் கருத்துக்களின் செல்வாக்கினாலும், ஒரு படித்த, சமூக உணர்வுள்ள புதிய பரம்பரை தோன்றத் தொடங்கியது. இந்தப் புதிய பரம்பரையின் பிரதிநிதியாக பாரதி தோன்றினான்.

பாரதி தோற்றுவித்த இந்தப் புதிய பரம்பரையில் வளர்ந்த கவிஞர்கள் பாரதி வழியையே பின்பற்றினர். இவர்களுடைய கவிதைகளில் பாரதியின் சாயல் தென்பட்டது. இலங்கையிலும் ஐம்பதுகளில் இந்தப் போக்கை நாம் காண்கின்றோம். இடதுசாரி அரசியல் செல்வாக்கினாலும், முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் பாதிப்பினாலும் ஒரு புதிய எழுத்தாளர் பரம்பரையினர் தோன்றினர். அப்படித் தோன்றிய எழுத்தாளர்களில் ஒருவர்தான் "ஈழத்துக் கவிமணி" என்று பேராசிரியர் சு. வித்தியானந்தனால் பட்டம் சூட்டப்பட்ட எம்.சி.எம்.சுபைர் அவர்கள்.

புதிய பரம்பரை : மலை நாட்டில் கல்ஹின்னை என்ற கிராமத்தில் பிறந்த இவர், ஐம்பதுகளில் ஆசிரியராகப் பதவி ஏற்றார். ஐம்பதுகளில்தான் இலங்கை அரசியலில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படுகிறது. இடதுசாரிக் கட்சிகளின் தாக்கத்தினால்' இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட ஓர் அரசாங்கம் முற்போக்குக் கருத்துக்களுக்கு விளைநிலமாக அமைந்தது. இக் கருத்துக்களினால் பாதிக்கப்பட்ட சுபைர் இஸ்லாமிய சூழலில் வளர்ந்து, இஸ்லாமியப் பண்பாட்டில் திளைத்து, இஸ்லாமிய மரபை மையமாகக் கொண்ட கவிதைகளை யாத்தார். முஸ்லிம் தலை வர்களில் ஒருவரும், கல்வி அமைச்சருமாயிருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஒரு புதிய பரம்பரையைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாயமைந்தார். இஸ்லாமிய உணர்வோடு, சமூக உணர்வும் கொண்ட ஓர் ஆசிரியர் சமூகத்தை உருவாக்கினார். இதுகால வரையும் எவ்வித சமூக உணர்வுமில்லாமல் வணிகத் தொழிலி லேயே ஈடுபட்டிருந்த ஒரு சமூகத்திற்குப் புத்துயிர் அளிக்கக்கூடிய ஒரு புதிய பரம்பரையினரை உருவாக்கினார். இப்புதிய பரம்பரை யினரின் பிரதிநிதிகளில் ஒருவராகத்தான் கவிஞர் சுபைர் பரிணமித்தார், இஸ்லாமியப் பண்போடு பாரதி தோற்றுவித்த தமிழ் மரபையும் தன்னுள்ளடக்கி, ஒரு புதிய தலைமுறையின் தலைமகனாகத் தோற்றமளித்தார் சுபைர். அவருடைய கவிதைகள். மலர்ந்த வாழ்வு. 'கண்ணான மச்சி", 'எங்கள் தாய்நாடு" காலத்தின் குரல்கள்", பிறைத்தேன்'. 'இலக்கிய மலர்கள்". மனிதம் பேணும் மாமறை" ஆகிய நூல்களாக பரிணமிக்கின்றன. பாகிஸ்தானின் தோற்றத்திற்குக் காரணமாயமைந்த கவிஞர் அல்லாமா இக்பால், இவரின் ஆதர்ஸ புருஷனாக இருப்பதை இவர் கவிதைகளில் காணலாம். 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த கவிஞராகிய அப்துல் காதர் லெப்பையின் செல்வாக்கும் இவரு டைய படைப்புக்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

மகாகவி பாரதி ஒரு புதிய சமுதாயம் தோன்றுவதற்கு தனக்கு சக்தியளிக்குமாறு தெய்வவத்தை வேண்டி நின்றான்.

"வல்லமை தாராயோ இந்த
மானிலம் பயனுற வாழ்வதற்கே" 
என்று தெய்வத்திடம் கேட்ட பாரதி,
"மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கே தென்பட வேண்டும்" 
என்று ஒரு புதிய உலகையே காண்கின்றான்.
"எந்தன் பாட்டுத்திறத்தாலே இந்த
வையத்தை பாலித்திட வேண்டும்...

என்று தன்னுடைய கவிதையின் மூலம் ஒரு புதிய சமுதாயம் உருவாக வேண்டும் என்று கனவு காண்கிறான்.

கவிமணி சுபைரும் இதே பாணியில் இறைவனிடம் யாசிக்கிறார்.

"எந்தன் பணியெல்லாம் ஏழை எளியோர் வாழ்வுக்காகட்டும் நொந்து வரும் யாவர்க்கும் நோவை நீக்க உதவட்டும்!"

என்று கவிஞர் சுபைர் தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை இங்கே கூறுகின்றார். தன்னுடைய கவிதைகள் ஏழை எளியோரின் நல்வாழ்வுக்குப் பயன்படட்டும். என்ற உயரிய கொள்கையை அவர் கொண்டிருந்தார். வாழ்க்கையிலே நொந்து அவஸ்தைப்படும் ஏழை எளியவருக்குத் தன் கவிதை மருந்தாக அமையட்டும் என்று அவர் கூறுவதிலிருந்து அவருடைய இலக்கிய தர்மம் இங்கே தென்படுகிறது.

ஒரு கவிஞனுக்கோ எழுத்தாளனுக்கோ அவனது எழுத்துக் களுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்க வேண்டும். எண்ணங்கள் தூய்மையாக இருந்தால்தான். வாழ்க்கை தூய்மையாக அமையும். இந்தத் தூய்மை அவனுடைய எழுத்துக்களிலும், கவிதைகளிலும் பிரதிபலிக்கும். இதற்கு அவன் ஒரு நற்புருஷனாக இருக்க வேண்டும். தன்னுடைய வாழ்க்கை, "வையத்து மக்க ளுக்கு திருவிளக்காய் அமைந்துவிடு" என்று அவர் இறைவனை இறைஞ்சுகிறதைக் கீழே உள்ள கவிதை காட்டுகிறது.

"வையத்தெந்தன் வாழ்க்கையினை
வண்ணவிளக்காய் ஆக்கிவிடு!
ஐயமின்றி யதன் மூலம் அகிலத்திருளை நீக்கிவிடு!"


இலங்கையின் இன்னொரு இஸ்லாமியக் கவிஞனாக விளங்கிய "புரட்சிக் கமாலின்" கவிதைகளிலும் இவ் இஸ்லாமியப் பண்பு தொனிக்கிறதை நாம் அவதானிக்கலாம்.

சுழலும் ஈனப் புன்மைகளை
இமைப்போ தகற்றி நீறாக்கு நலனை ஒறுத்து 
நலஞ் சேகரிக்கும் நல்லாண்மைக்கு இலக்காக்கு!

என்றும்,

எங்கும், எந்நிலையும் இறைவா! 
உன்னில் சுஜுதாகும் குன்றாய் 
என்னை குணமாக்கு 
குமையா வாழ்வின் அமைவாக்கு 
இறுதிவேட்கை இதுவாகும்.

என்று புரட்சிக்கமால் பாடும்போது ஒரு இஸ்லாமியக் கவிஞன் இஸ்லாமிய வாழ்க்கை முறையின் அடிப்படையில் தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளைக் கொண்டிருப்பதை நாம் இங்கே காண்கிறோம். கவிஞர் சுபைரும் இஸ்லாமியக் கருத்துக்களில் ஊறித் திளைத்த காரணத்தினால் அவருடைய கவிதைகளிலும் சமூகப்பார்வை இருந்தாலும் இஸ்லாமிய மணம் வீசுவதைக் காணலாம்.

சுமையாய் நெஞ்சின் சுமைக்குள்ளே!

இஸ்லாமியக் கடமை:  இஸ்லாமிய சமூகம் 'சக்காத்" என்ற அறத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகம். இங்கே பணக்காரர் ஏழை என்ற பாகுபாடு இல்லை. ஏழைகளின் பொருளைப் பாதுகாப்பவர்களாகத்தான் செல்வந்தர்கள் கணிக்கப்படுகிறார்கள். ஆகவே பணக்காரன் தன்னுடைய சொத்துக்களின் ஒரு பங்கை ஏழை எளியவர்க்குக் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று. இப்படி ஏழைகளின் துயரை நீக்காமல் சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வந்தர்களின் இழிவான போக்கைக் கவிஞர் சாடுகிறார்.

"வான் முட்டும் மாளிகை வாழ்வார்-அண்டை வயிறொட்டி வற்றல் குடிசையில் நொந்து ஊன் வற்றி வாழ்வோரைக் கண்டும் உளம் சற்றும் இரங்கார் ! உவந்துண்டு வாழ்வர் ஏழைகட்கீயார் இருக்கும் பணம்

தன்னைப் பெருக்கிட வஞ்சம் புரிவார்!
கோழைகள்! செல்வப் பயன்தான்ஈதல்
என்பதனை ஏனோ உணர்ந்திட மாட்டார்.

கவிஞர் சுபைரின் இந்தக் கவிதை, பாரதியின் 'நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்" என்ற கவிதையின் சாயலில் தொனிக்கிறதல்லவா?

ஒரு கவிஞன் தான் வாழும் சமூகத்தின் உணர்ச்சிகளைத் தன் கவிதைகளில் பிரதிபலிக்க வேண்டும்.. அவன் சமூகத்தில் காணும் காட்சிகள் அவனுடைய உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும். கவிஞன் அனுபவிக்கும் அனுபவங்களே உணர்ச்சிகளாக அவனது கவிதைகளில் வெளிப்பட வேண்டும். அந்த அனுபவம்தான் கவிதை. அனுபவத்தை உணர்த்தும் ஒரு சித்திரம். கவிஞன் சமூகத்தின் உணர்ச்சிகளைத் தன் உணர்ச்சிகளாக அவன் தன் கவிதைகளில் வெளிப்படுத்தும் போதுதான், அதில் யதார்த்தம் இருக்கிறது. கவிதையின் முக்கியமான பாகம் தான் அதன் ஜீவசக்தி. அது கவிஞனது உள் மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது. கவிதையின் இலக்கணத்தைக் கூறப்புகுந்த புதுமைப்பித்தன் கவிதையைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: "கவிதை மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை. மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்றுபட்டோ பிரிந்தோ கண்ட கனவு. அது உள்ள நெகிழ்ச்சியிலே உணர்ச்சி வசப்பட்டு, வேகத்துடன் வெளிப்படுகிறது. அதுதான் கவிதை

கவிஞர் சுபைர் பிறந்து வளர்ந்தது தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய மலைநாட்டில். பண்டாரவளையில் அவர் ஆசிரியராகக் கடமையாற்றிய பொழுது தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளை களும் அவரிடம் கல்வி கற்றார்கள். ஏனைய ஆசிரியர்களைப் போலல்லாமல், தன்னிடம் கல்வி பயில வந்த மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்திருந்ததோடல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையின் அவல நிலையை எண்ணி உணர்ச்சிவசப் பட்டு எழுதிய கவிதைகள், தோட்டத்து மக்களின் துன்ப வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது.
"தேயிலைத் தோட்டத்திலே உடல்
வற்றி வரண்டு சுருண்டு விழும்வரை நாளும் உழைத்திடுவோம் கண்ணே! நாமிங்கே வாழ்ந்திடுவோம் இந்த நாடும். உழைப்பும் நமக்குப் பயன்தரும் காலம்
 மலருமடி ! சூழும் கவலை மறையுமடி
தொழிலாள வர்க்கத்தின் எதிர்கால வாழ்வின் மலர்ச்சியை கவிஞன் இங்கே காண்கிறான். இதே பாணியில் ஒரு நாட்டுப்பாடல் இருப்பதைக் கவனிப்போம்.

"மாடாய் நாம் ஒழைச்சாலும்-ஒத்தெச் சதமுமே மிஞ்சுதில்லே நாம் ஓடாகத் தேஞ்சோண்டா உள்ள சொத்தே நீதாண்டா

நமக்கும் நல்ல காலம் ஒண்ணு நாளை இல்லேண்ணா போகும்.

தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வைக் கனவுகண்ட கவிஞர். மேலும் அவர்கள் படும் துன்ப த்தை பின்வரும் கவிதைகளில் கூறுகிறார். பாரதியின் கரும்புத் தோட்டத்திலே" என்ற கவிதையின் சாயல் இங்கே தென்படுகிறது.

"தேயிலைத் தோட்டத்தில் உடல் தேய்ந்து தேய்ந்து துரும்பாகி மெலிந்திட ஓய்வின்றி நாமுழைத்தோம் மச்சான் நோய் கண்டு தானிளைத்தோம்

வளம் தாங்கும் உயிர் கொடுத்தோம் வரும் சாவிலும் நாமிந்தத் தேயிலைக்கே உரம் ஆகப் புதைந்திடுவோம்.

*ஓய்வின்றி உழைத்த நாம். இத்தேயிலைச் செடிகளுக்கே உரமாகப் புதைந்திடுவோம்" என்ற தொழிலாளியின் உயர்ந்த எண்ணத்தைக் காட்டுகிறார். இங்கே முதலாளிக்கெதிரான வஞ்சம் இல்லை. தம்மை ஆட்டிப் படைக்கும் அதிகார வர்க்கத் திற்கெதிராகப் போர் முழக்கம் கேட்கவில்லை. அவன் விரும்புவ தெல்லாம் தன் உழைப்பிலே பசுமையாக வளர்ந்த இந்தத் தேயிலைச் செடி. தான் செத்த பிறகும் அதற்கு உரமாகத் தன் உடல் பயன்பட வேண்டும் என்று தொழிலாளியின் எண்ணத்தைக் கூறு முகமாக. கவிஞன் தன்னுடைய உயர்ந்த கொள்கையை விளக்கு கிறான்.

மேற்கின் அறிவு: மேலைத்தேச நாடுகளிலிருந்து வந்த கல்வியைக் பயின்ற நம் இளைஞர்கள் மேல்நாட்டு கலாசாரத் திலும் மூழ்கிவிடுவதைக் கண்ட கவிஞர், இளைஞர்களுக்கு,

மேனி மினுக்கில் மயங்காதே"
"மேற்கில் அறிவைக் கற்றுக்கொள்

என்று அறிவுரை கூறுகிறார். முஸ்லிம் சமுதாயம் இஸ்லாமிய தத்துவக் கட்டுக்கோப்பில் வளர்ந்த ஒரு சமுதாயம். நாகரிகம் என்ற பெயரில், என்னதான் புதுமைகள் வந்தாலும் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய பண்பாட்டிலிருந்து வழுவக்கூடாது. இஸ்லாம் அவனுக்கு ஒரு வாழ்க்கை நெறியைக் கற்றுக் கொடுக்கிறது. சில முஸ்லிம் இளைஞர்களுடைய தான்தோன்றித்தனப் போக்கினால் முஸ்லிம் சமுதாயம் சீர்கெட்டுவிடும் என்று அஞ்சுகிறார் கவிஞர். அவருடைய இந்த உணர்ச்சிகள் பின்வரும் கவிதைகளில் வெளிப்படுகின்றன.

"சிந்தை செல்லும் போக்கிற் சென்று சீர்மை யென்ன காணுவீர் கண்ட கண்ட கொள்கைக் கெல்லாம். இருப்பதென்ன ஏற்றமோ! வளரும் பிளவை முளையிற் கிள்ளி வலிமை பெற்றுத் திகழுவீர்*

இந்த அறிவுரையைத்தான் கவிஞர் முஸ்லிம் பெண்களுக்கும் கூறுகிறார். முஸ்லிம் சமுதாயத்தின் அடித்தளம் முஸ்லிம் பெண்களே. தங்கள் குழந்தைகளை இஸ்லாமிய முறைப்படி வளர்க்கா விட்டால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகமே சிதைந்து விடும் 'தாய்மார்களே!" என்று முஸ்லிம் சமுதாயம் நிலைபெறுவதற்கு முஸ்லிம் தாய்மார்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

பெண்கள் பயிலும் கல்வியகம் பேணும் சமயப் பண்பிழைந்தால் தன்னைத் தானே கொலை செய்யும் தலமாய் மாறும், எச்சரிக்கை சீரிய அன்புத் தாய்மாரே செல்வம் உங்கள் மக்கள் தான். நேரிய குர்ஆன் சமுதாயம் நிலைக்கச் செய்யும் தூண்நீவிர் உங்கள் பணியால் உலகுய்யும்.

முஸ்லிம் பெண்களைப் பற்றியும், முஸ்லிம் இளைஞர்களைப் பற்றியும், முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றியும் வருந்திய கவிஞர் சுபைர் ஒரு மனிதநேயம் படைத்தவர். அவருடைய கவிதைகளில் நாம் மனிதத்தைக் காண்கிறோம். அவர் மானிட சமுதாயத்தை நேசிக்கிறார். அவருடைய மனிதப் பண்பு, பின்வரும் கவிதையில் தொனிக்கிறது.

அகமதிற் தூய்மை வேண்டும்
சழக்கர்கள் மாள வேண்டும்
அறிஞரைப் போற்ற வேண்டும் 
அருங்கலை வளர்க்க வேண்டும் 
வறியவர் மகிழ ஈயும்
வள்ளலார் வாழ வேண்டும்

ஆழ்ந்த நல்லறிவு வேண்டும் சாதியாற் சண்டை மூட்டும் 
இந்த கருத்திற் தான் தமிழ் மொழியைப் பற்றி அவர் சிந்திக்கிறார்.

"யாதுமூர் யாவரும் கேளிர் என்னும்
சமத்துவ மொழியே

கருத்துமோதல் சமூகத்தில் ஏற்படும் பெரும் பிளவுகளுக்கும் பண்பாடு மறைமொழியே பேதமெல்லாம் ஒழித்தே பெருமை தரும் சண்டைகளுக்கும் மூலகாரணமே. கருத்துமோதல்தான். கருத்து வேற்றுமையிருந்தாலும் எம்முடைய பிரச்சினைகளை நாம் அலசி ஆராய்ந்து அவைகளுக்கு ஒரு நியாயமான. தீர்க்கமான முடி வைக் காண வேண்டும். இதற்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருதரத்தாரிடமும் இருத்தல் வேண்டும்.

இதை கவிஞர் மிக அழகாக எடுத்துரைக்கிறார்.
"கருத்து மோதல் காணும் போது கனிவாய் ஆய்ந்திடுவோம் - நுணுகிக்
விட்டுக் கொடுத்திடுவோம் - பேதம் விரட்டி யோட்டிடுவோம்."
கனிவாய் ஆய்ந்திடுவோம் நியாயப் 
பொருத்த மெங்கு உண்டோ - அங்கு
கவிஞர் சுபைர் முற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர். இஸ்லாமிய பண்பு தெறியை வலியுறுத்திய கவிஞர், ஏழை எளிய வர்களின் எதிர்கால வாழ்விலும் நாட்டம் கொண்டார். உழைப்பவனுக்குத்தான் சமூகத்தில் முக்கிய இடம் இருக்க வேண்டும். பிறர் உழைப்பில் வாழும் சோம்பேறிகளுக்கல்ல என்ற திடமான நம்பிக்கை கொண்டவர். உழைப்பவனுக்குத்தான் ஆளும் உரிமை உண்டு என்ற எண்ணம் கொண்டவர்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித் திருப்போரை நிந்தனை செய்வோம் என்ற பாரதியின் மரபில் வந்த கவிஞர் சுபைர்

*உழைப்பவர் நாட்டினை ஆள்வர்உரிமை
உழைப்பவர் பார்த்திரடி"
நசுக்குவோர் ஓடிடுவார் - உடல் ஆவி துறந்தும் உரிமையைக் காப்பர்!

என்று தொழிலாளவர்க்கத்தின் உரிமையைப் பறை சாற்றுகிறார். ஆளும் உரிமை உழைக்கும் தொழிலாள வர்க்கத்திற்கே உரியது என்ற கவிஞரின் கருத்துக்கள், எதிர்கால சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக அமைகிறது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய முற்போக்கு எண்ணம் படைத்த இளைஞர் சமுதாயத்தின் பிரதிபிம்பமாக கவிஞர் சுபைர் காட்சியளிக்கிறார்.

(கண்டியில் நடந்த எம். சி.எம். சுபைர் நினைவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை)
 முன்னாள் கல்விப் பணிப்பாளர்
அல்ஹாஜ். ஏ.எம்.சமீம்


 


Post a Comment

Previous Post Next Post