கல்ஹின்னைக்கு ஒரு நல்ல விளையாட்டு மைதானம் தேவை.

கல்ஹின்னைக்கு ஒரு நல்ல விளையாட்டு மைதானம் தேவை.

விளையாடுவதால் மனிதன் உடல் நலத்தையும், மன நலத்தையும், சமூக நலத்தையும் பெறலாம். விளையாட்டுகளை விளையாடுவதால் ஒற்றுமை வளர்கின்றது. விளையாட்டுகளை விளையாடுவதால் ஒவ்வொருவரிடமும் தலைமைத்துவத்தன்மை வளர்கிறது.

எமது வாழ்க்கைக்கு விளையாட்டு என்பது மிக முக்கியமானதொன்றாகும். விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் அனுகூல நிலையை அடைகின்றோம். எமது உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் இருக்க விளையாட்டுகள் எமக்கு உதவுகின்றன.

இன்று கல்ஹின்னையில் நல்ல திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள் எதிகாலத்தில் மிகவும் உயர்ந்த இடத்திற்கு செல்லக்கூடிய திறமை எங்கள் ஊர் பிள்ளைகளுக்கு இருக்கின்றது.

எனினும் ,இவர்களால் அடுத்த கட்டத்திற்கு போக முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.இவர்களால் தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கல்ஹின்னையில் மிகக் குறைவு.
அதில் முக்கியமான ஒன்றுதான் கல்ஹின்னை விளையாட்டு மைதானம் .கல்ஹின்னையில் இருக்கின்ற விளையாட்டு வீரர்கள் கல்ஹின்னை அல்மனார் பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.இருக்கின்ற இந்த மைதானம் பல ஆண்டுகள் புனரமைக்கப் படாமல் இருக்கின்றது.

கல்ஹின்னையில் கிரிக்கெட் விளையாடுபவர்கள்தான் அதிகம் .சிறுவர் முதல் பெரியவர்கள்வரை கிரிக்கெட் விளையாடுவதிலும் ,கண்டுகளிப்பதிலும் ஆர்வமுள்ளவர்கள்.

ஆனால் எமது இளம் வீரர்களுக்கு பயிற்சி பெறுவதற்கோ அல்லது சுதந்திரமாக ஒரு சிக்ஸ் அடிப்பதற்கோ முடியாத நிலை இருக்கின்றது. தப்பித் தவறி ஒரு ஆறு (6)ஓட்டங்கள் அடித்தால் பந்தை தேடுவதற்கு ஒருவரையும் நியமிக்க வேண்டும் . ஏனென்றால் பாடசாலை மைதானம் மிகவும் சிறியதாகவும் ,சுற்றியுள்ள ஒரு பக்கம் காடுகளும் ,ஒரு பக்கம் வீடுகளும் மற்றொரு பக்கம் பாடசாலைக் கட்டிடமும் இருக்கின்றது.

பாடசாளைக்கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் .களையிழந்து காணப்படுகின்றது அந்தக் கட்டிடம்.மிகவும் பளையதாகிவிட்டதால் அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிதாக ஒரு கட்டிடம் கட்ட தீர்மானித்துள்ளதாக கேள்விப் பட்டேன். மகிழ்ச்சியான ஒரு விடயம் .

எனினும் அந்த இடத்தில அதாவது விளையாட்டு மைதானத்தோடு இருக்கின்ற அந்த கட்டிடம் அவசியம்தானா?

அந்த இடத்திலிருந்து கட்டிடத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில பார்வையாளர்களுக்கான இடமாக ஒதுக்கலாமே?

இன்று கல்ஹின்னை அல்மனாரில் மாணவர்கள் மிகக் குறைவாகவே படிக்கின்றார்கள்.இருக்கின்ற மாணவர்களுக்கு தாரளமாக படிப்பதற்குரிய கட்டிடங்கள் இருக்கின்றன.
அப்படியே அவசியம் என்றால்   பாடசாலை வளாகத்தில் வேறு இடங்களில் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கலாம்.

ஒரு பாடசாலைக்கும் ,ஒரு ஊருக்கும் விளையாட்டு மைதானம் மிக மிக முக்கியம்.வருங்கால சந்ததியினர் படித்துப் பட்டம் பெற்றாலும் விளையாட்டு இல்லையென்றால் அந்தப் படிப்பால் சமூகத்திற்கு எந்தப் பிரயோசனமுமில்லை.

இன்று எமது இளைஞர்கள் தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி விடுகின்றனர் .போதை மருந்து பாவனை சினிமா,போன்ற மாயைகளில் சிக்குண்டு மீண்டு வர முடியாதவர்களாய் இருக்கின்றார்கள் .இவை அத்தனைக்கும மாற்று ஏற்பாடாகத்தான் விளையாட்டு திகழ்கின்றது 
ஆகவே கல்ஹின்னையில் இருக்கின்ற செல்வந்தர்கள் ,கொடை வள்ளல்கள் இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை எடுத்தால் எதிகாலத்தில் எமது ஊறில் இருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் உருவாகலாம் .

ஊர் மக்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக கல்ஹின்னை பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் குறைகளை நிவர்த்தி செய்வார்கள் என்று நினைக்கின்றேன்.       

 


Post a Comment

Previous Post Next Post