மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யங்கள்!

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யங்கள்!

தன் 70 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் முழுப் பொறுப்புடன் தன் அதிகாரத்தைச் செயல்படுத்தினார். உலகின் பல அரசுகளோடு இணக்கமான உறவைப் பேணினார். ஆகவேதான் உலகம் முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார்.

தி கிரேட் பிரித்தானியா ராணியான இரண்டாம் எலிசபெத் தன் 96-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக  காலமானார். அவரின் மறைவுக்கு உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஜனாதிபதிகளும், பிரதமர்களும், தலைவர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 1953-ஆம் ஆண்டு முடிசூடிய எலிசபெத், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ராணியாக இருந்துள்ளார். இரண்டாம் எலிசபெத் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்…

சிறுமி முதல் ராணி வரை… குடும்பம், குழந்தைகள், அரியணை… ராணி இரண்டாம் எலிசபெத் நினைவலைகள்!

* உலகின் மிகப்பெரிய நில உடைமையாளரான ராணி எலிசபெத்தின் பெயரில் 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் உள்ளது.

* இவர் உலகின் 16 நாடுகளுக்கு ராணியாக இருந்திருக்கிறார்.

* தி கிரேட் பிரித்தானியா அரசாட்சிக்குட்பட்ட கடற்கரையிலிருந்து 3 மைல்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்கள் ராணிக்குச் சொந்தமானவை.

* லண்டன் தேம்ஸ் நதியில் உள்ள அனைத்து அன்னப் பறவைகளும் ராணிக்குச் சொந்தமானவையே.

* ஓட்டுநர் உரிமங்கள் ராணியின் பெயரில் வழங்கப்படுகின்றன என்பதால், ராணிக்கு வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.

* ராணியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பாஸ்போர்ட் தேவையில்லை.

* பிரித்தானியா  ராணியாக இருந்த இவருக்கு இரண்டு பிறந்தநாள்கள் உள்ளன. இவரின் அதிகாரபூர்வ பிறந்தநாள் ஜூன் மாதம் இரண்டாவது சனிக்கிழமை கொண்டாடப் படுகிறது. அவரின் உண்மையான பிறந்தநாள் ஏப்ரல் 21-ஆம் திகதி.

* ராணி தன் குடும்பத்துக்காக மட்டும் தனிப்பட்ட ஏ.டி.எம் ஒன்று வைத்திருக்கிறார், அந்த ஏ.டி.எம் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் உள்ளது.

* ராணியாக மட்டுமே இருப்பது சில சமயங்களில் மிகவும் சலிப்பை ஏற்படுத்தியதால், கவிதைகள் எழுதி கவிஞராகவும் திகழ்ந்திருக்கிறார்.

* பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் ராணியின் ஒப்புதலுக்காக அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர் கையெழுத்திட்ட பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.

* ராணி வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும், 1992 -ம் ஆண்டிலிருந்து இவர் தானாக முன்வந்து வருமான வரி செலுத்தி வந்தார்.
* இவர் அவுஸ்திரேலியாவின் ராணியும்கூட என்பதால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தைக் கலைக்கும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார்.

* ராணி இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்து தேவாலயத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

* நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் ராணி என்பதால் அவரை ஒருபோதும் கைது செய்ய முடியாத அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.

* பிரித்தானியா அரசின் ஆயுதப் படைகளின் தளபதியாகவும் இருந்தார்.

* பிரதம அமைச்சர் மற்றும் மந்திரிகளை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் இவருக்கு அதிகாரம் உண்டு.

* மற்றொரு நாட்டின் மீது அதிகாரபூர்வமாக போரை அறிவிக்கும் அதிகாரமும் இவருக்குண்டு.

* ராணி இரண்டாம் எலிசபெத் தன் 70 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் முழுப் பொறுப்புடன் தன் அதிகாரத்தைச் செயல்படுத்தினார். உலகின் பல அரசுகளோடு இணக்கமான உறவைப் பேணினார். ஆகவேதான் உலகம் முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார்.

 


Post a Comment

Previous Post Next Post