இஸ்லாம் மனித சமுதாயத்தின் ஓர் ஒப்பற்ற வாழ்க்கை நெறியாகும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதற்காகவும் மனித நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஏற்படவேண்டும் என்பதற்காகவும் இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மத்தைக் கட்டாயமாக்கியுள்ளது.
இஸ்லாத்தின் பார்வையில் ஒரு மனிதனுக்கு பொருளாதாரம் வழங்கப்படுவதென்பது அவன் அந்த பொருளாதாரத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் செலவு செய்வது போக மீதம் உள்ளதில் அவனால் இயன்ற அளவிற்கு தன்னுடைய பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் அவர்களின் கண்ணீர் துடைக்கும் விதமாக தர்மம் செய்வதற்குமாகும்.
ஆனால் தர்மத்தின் இன்றைய நிலை அதிகமாகவே தற்பெருமைக்காவும் தாங்களின் பெயர் மேலோங்கி மற்றவர்களினால் பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் தர்மத்தை ஆயுதமாக நம்மில் சிலர் பயன்படுத்திக் கொண்டிருப்பதை இன்று பார்க்க முடிகின்றது.
அப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் இன்று தர்மம் என்ற பெயரில் நடக்கின்றது.
அதற்கு கல்ஹின்னையும் விதி விலக்கல்ல தர்மம் என்ற பெயரில் எவர் தன்னை மதிக்க்கின்ராரோ ,எவர் தன்னை புகழ் பாடுகின்ராரோ அவர்களுக்கு தர்மம் செய்வதை பார்க்கின்றோம்.
தர்மம் செய்கின்றவர் யார் என்பது முக்கியமல்ல ,அவர் எப்படி அந்த தர்மத்தை நிறைவேற்றுகின்றார் என்பதுதான் முக்கியம் ,சிலர் தர்மங்கள் செய்யும்போது அதை புகைப்படங்கள் எடுத்து உலகமெல்லாம் பறையடிப்பது,பெருமை கதைத்துத் திரிவது குறிப்பிட்ட ஒரு சிலரை வைத்துக்கொண்டு துதிபாட வைப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்கின்றார்கள்.
இவை மிகவும் மோசமான ஒரு செயல் என்று இவர்களுக்கு ஏன் புரிவதில்லை ?
கடந்த சில நாட்களுக்கு முன் ஒருகடைக்கு முன்பாக பாய் விரித்து ,அதில் அன்றாட தேவைகளுக்கான உணவுப் பொதிகளை வைத்து தேவையானவர்கள் எடுத்துச் செல்லலாம் என்று ஒரு புதுமையான தர்மத்தை அறிமுகப் படுத்தியிருந்தார்கள்.
வறுமைக்கோட்டில் இருப்பவர்கள் அங்கு வந்து மிகவும் சங்கடத்தோடு பலர் முன்னிலையில் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துச் சென்றார்கள்.சில பெண்களைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாயிருக்கும் .
இது தவறான ஒரு செயல் என்று நாம் கல்ஹின்னை டுடேயில் குறிப்பிட்டிருந்தோம்.அதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள்.
ஆனால் இன்று அந்த புதுமையான தர்மம் அங்கு இல்லை.
தவறான ஒரு செயல் என்றும் நிலைப்பதில்லை என்பதற்கு அது ஒரு உதாரணம்
வாய்பிளந்து பாயில் மல்லாக்க படுத்திருப்பவனை எழுப்பி நான்கு பேர்கள் பார்க்க தட்டி எழுப்பி இத சாப்பிடு என்று உணவளிப்பது தர்மம் அல்ல. வயிற்றுப்பசியால் படுக்கவே முடியாமல் பதரித்திரிபவனைக் இனங்கண்டு உணவளிப்பதே உண்மையான தர்மம் ஆகும்.
வலது கரம் செய்வதை இடது கரம் அறியாத விதத்தில் இரகசியமாக செய்வது அந்தளவுக்கு சிறப்பிற்குரியதாகும். தர்மம் செய்யும் போது அல்லாஹ்வின் திருப்தி மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும்.
ஆகவே அல்லாஹ்வின் விருப்பத்திற்கு ஏற்ப முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களின் படி தர்மம் செய்வோம். அதனூடாக அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுவோம்.
நாம் எந்த ஒரு தனி நபரையும் பெயர் குறிப்பிட்டு குற்றம் சுமத்தவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
நல்லதை நல்லமுறையில் செய்யும்போது நாம் பாராட்டத் தவறியதில்லை .அதே நேரம் தவறை சுட்டிக்காட்டத் தவறியதுமில்லை
Tags:
கட்டுரை
சிலர் தான் செய்த தர்மத்தை வீடியோ செய்து பதிவு செய்கிறார் கள் ஆதாரம் GBC
ReplyDelete