குடலை சுத்தம் செய்ய இரவில் இந்த ஒரு உணவை கட்டாயம் சாப்பிடுங்கள்..மீறினால் பாதிப்பு உறுதி..

குடலை சுத்தம் செய்ய இரவில் இந்த ஒரு உணவை கட்டாயம் சாப்பிடுங்கள்..மீறினால் பாதிப்பு உறுதி..

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் முக்கனிகளுள் வாழைப்பழம் ஒன்றாகும். வாழைப்பழம், ஒவ்வொன்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ பயன்களையும் உள்ளடக்கியவையாக உள்ளன.வாழைப்பழம், செவ்வாழை, பூவன் பழம், நாட்டு பழம், பச்சை பழம் என பலவகைகளில் உள்ளன. இவை அனைத்துமே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை ஆகும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. அவை என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1. வாழைப்பழம் அதிக கலோரி, பொட்டாசியம் கொண்டது. இது உடலில் தங்கியிருக்கும் தேவையற்றை சோடியம் உப்பை நீக்குகிறது. மேலும், உடல் சோர்ந்து போகாமல் இருக்க தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. 

2. உடலில் நீர்ச்சத்து குறையும் போது, இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கும் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.

3. வாழைப்பழம் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. அதுமட்டுமின்றி, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அமினோ அமிலங்களை வளர்சிதை மாற்றம் செய்யவும், ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
 
4. வாழைப்பழங்கள் செரிமானத்திற்கு உதவுவதோடு, இரைப்பை குடல் பிரச்சனைகளை போக்கவும் உதவும். எனவே, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்

5. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்கள் போன்ற உடலின் ஆற்றலை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

6. மாதவிடாய் காலங்களில் எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்க வாழைப்பழம் உதவியாக இருக்கும். வாழைப்பழத்தில் போதுமான இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது.

எனவே, நீங்கள் காலை எழுந்ததும் ஒரு வாழைப்பழம், பிறகு இரவு உணவுக்கு பின் ஒரு மணிநேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

 


Post a Comment

Previous Post Next Post