கல்ஹின்னை பாடசாலையும் ,விளையாட்டு மைதானமும் மீண்டும் மீழ்ச்சி பெருமா?

கல்ஹின்னை பாடசாலையும் ,விளையாட்டு மைதானமும் மீண்டும் மீழ்ச்சி பெருமா?


கல்ஹின்னை அல்-மனார் தேசியப் பாடசாலை விளையாட்டு மைதானம் அபிவிருத்தி சம்பந்தமாக கடந்த சில நாட்களாக     (AL-MANAR GROUND DEVELOPMENT) என்கின்ற   whatsApp குளுமத்தினூடாக ஆலோசனைகள் பரிமாறிக் கொண்டிருந்த  வேளையில் 09,ம் திகதி அக்டோபர் மாதம் 2022,ல் கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில் கல்ஹின்னையைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களாள் ஒன்று கூடி கலந்து ஆலோசிக்கப்பட்டன.

கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், கல்ஹின்னை ஒன்றியம், கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளி நிவாகசபை தலைவர் உட்பட இன்னும் சில முக்கியஸ்தர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக அறியப் படுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலை மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை  பாடசாலையின் அதிபரும்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அல்-ஹாஜ் அஸ்லம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் வழிநடாத்திச் செல்ல ஏகமனதாக  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும்  அறிந்தோம். 

இது கல்ஹின்னை மக்கள் அனைவரும்   ஏற்றுக்கொள்ளும் விடயமாகும்.

அல்-மனார்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தற்போதைய தலைவர்  அல்-ஹாஜ் அஸ்லம் அவர்கள் நான் அறிந்த வகையில் பொதுப்பணி என்றாலே மிக ஆர்வத்துடன் செயல்படும் தன்மையுடையவர், 

எக்காரியத்தையும்   சிரமம் பாராமல் இரவு,பகல் பாராமல் செயல்படக்கூடிய பண்பு,ஒழுக்கம்,கடமையுணர்வு கொண்டவர்.

இன்ஷா-அல்லாஹ் அஸ்லம் அவர்கள் இந்த விடயத்திலும் முழு மூச்சுடன் செயல்படுவார் என்று நினைக்கின்றோம்.சாதித்துக் காட்டுவார். கல்ஹின்னை விளையாட்டு மைதானம் மிகச்சிறந்த ஒரு மைதானமாக காட்சியளிக்கும் என்று நம்புகின்றோம். 

அதுமாத்திரமல்ல தற்பொழுது கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் பற்றாக்குறை மாணவ-மாணவிகளின் ஒழுக்கநிலை போன்ற குறைபாடுகள் அனைத்துமே இவரின் காலத்திற்குள் முடிந்துவிடும். 

கல்ஹின்னை அல்மனார் பாடசாலை மீண்டும் ஒரு தரமுள்ள பாடசாலையாக மாறவேண்டும்.

கடந்த காலங்களில் மிகவும் மோசமான நிலைக்கு  தள்ளப்பட்டுள்ள பாடசாலையை நல்லதொரு நிலைக்கு மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது. பாடசாலையை நல்ல முறையில் அபிவிருத்தி செய்ய  SDC முன் வந்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும் 
.


கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையின் வரலாற்றில் இன்றுள்ளதைப் போன்ற  மோசமான நிலை என்றும் இருந்ததில்லை.

பாடசாலைக் கட்டிடங்கள் பேய்கள் குடியிருக்கும் வீடுகளைப் போன்று காட்சியளிக்கின்றன.ஆயிரக் கணக்கான மாணவர்கள் கல்விகற்ற பாடசாலை இன்று 500க்கும் குறைவாகியுள்ளது.எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கேட்பாரற்றுக் கிடக்கின்றது.

பாடசாளைக் கட்டிடங்கள் எந்த நேரத்தில் இடிந்து விழும் என்ற பீதியில் மாணவர்கள் எப்படி கல்வி கற்பார்கள்?
அதிகாலையில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு பேய்கள் குடியிருக்கும் கட்டிடங்களைப் போன்று காட்சியளிக்கும் கட்டிடங்களை பார்க்கும்போது படிப்பு எப்படி வரும்?.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்களிடம் நல்ல பெறுபேறுகளை எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆகவே இனி வரும் காலங்களிலாவது ஆசிரியர்களும் ,SDCயும் இணைந்து  இப்படிப் பட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்வார்கள் என்று நினைக்கின்றோம்.

பாடசாலையும் ,விளையாட்டு மைதானமும் மீண்டும் மீழ்ச்சி பெரும் என்று நம்புகின்றோம்.
 

 


1 Comments

Previous Post Next Post