இந்திய அணியை வீழ்த்தி அடிலெய்டில் வரலாற்றை மாற்றி அமைத்த இங்கிலாந்து

இந்திய அணியை வீழ்த்தி அடிலெய்டில் வரலாற்றை மாற்றி அமைத்த இங்கிலாந்து

அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்தி டாஸ் வென்ற அணி வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை  இங்கிலாந்து தற்போது மாற்றி அமைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் 2வதுஅரையிறுதி போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி. இந்த மைதானத்தில் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் இந்த மைதானத்தில்  டாஸ் வென்ற எந்த ஒரு அணியும் அந்த போட்டியில் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை, இது இங்கு நடந்த 11 டி20 போட்டிகளிலும் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியும் தோல்வி அடைந்துவிடும் என கனவு கண்டு கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே.

டாஸ் வென்று அடிலெய்ட் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் அணியாக இங்கிலாந்து மாறி வரலாற்றை மாற்றியுள்ளது. அதுவும் சாதாரண வெற்றியல்ல 169 ரன்களை விக்கெட்டே விடாமல் வென்று சாதித்து உள்ளது இங்கிலாந்து அணி. இதனையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீச்சை நடத்துகிறது.
news18


 


Post a Comment

Previous Post Next Post