கல்ஹின்னையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள்!

கல்ஹின்னையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள்!

நீர் தொட்டியில் நீர் நிரம்பும் அளவினைக் கண்டறியும் ஓர் கருவி!
கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில் 9,ஆம் வகுப்பு B பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் மொஹமத் பரீன் சுலைமான், சாஹுல் ஹமீத் அப்துல்லாஹ் வயது 14, இருவரும் ஒன்றுசேர்ந்து புதியதோர் கண்டுபிடிப்பை செய்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

நீர் சேகரிப்பு தொட்டியில் தண்ணீரை நிரப்பும் போது தண்ணீர் தொட்டியில் நீர் நிரம்பிக் கொண்டிருப்பதை நீர் தொட்டி வைத்திருக்கும் இடத்திற்கு செல்லாமல் இலகுவாக அடையாளம் காட்டக்கூடிய மின்சார தொடர்புடன் இயங்கக்கூடிய கருவி ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

இக் கண்டுபிடிப்பாளர்களான இருவரும் பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் கிராமசேவகர் பிரிவு பள்ளியகொட்டுவ தொகுதிக்குள் வசிப்பவர்கள் ஆவார்கள், மொஹமத் பரீன் சுலைமான் 183/2 மூசாமுனை பள்ளியகொட்டுவ கல்ஹின்னை, சாஹுல் ஹமீத் அப்துல்லாஹ்  136/7, பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் வீதி பள்ளியகொட்டுவ கல்ஹின்னை முகவரியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு சிறார்களின்  முயற்சிகளின் முன்னேற்றம் வெற்றிகரமாக தொடர்ந்தும் பயணிப்பதற்கு ஊரார்களின் ஒத்துழைப்பு அவசியம்.இவர்களின் முயற்சிற்கு ஊர் மக்களின் ஆதரவு நிச்சியமாகக் கிடைக்கும் என நம்புகின்றோம்.

கல்ஹின்னையில் திறமையான சிறுவர்கள் இருக்கின்றார்கள்.விளையாட்டிலும்,கல்வியிலும்,சிறந்து விளங்கும் நம் பிள்ளைகளுக்கு போதிய ஆதரவு இல்லாமல் அவர்களின் திறமைகள் மறக்கடிக்கப்படுகின்றன.

இவர்களைப்போன்ற சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் எம் சமூகத்தில் இன்னும் பலர் உருவாக வேண்டுமென இறைவனைப் பிராத்திப்போம்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post