கலைத்துறையில் கல்ஹின்னைக்கு பெருமை சேர்த்த ரியாஸ் முஹம்மத்

கலைத்துறையில் கல்ஹின்னைக்கு பெருமை சேர்த்த ரியாஸ் முஹம்மத்


இளம் வயதில் பல திறமைகளைக் தன்னகத்தே கொண்டிருந்த முஹம்மத் ரியாஸ் தொழில் நிமித்தமாக கொழும்பில் வசிக்கின்ற காலத்தில்  ,பல அறிமுகங்கள் கிடைக்கப்பெற்றன.

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ளுவதற்காக பயன் படுத்திக்கொண்டார்.

மீடியாலின்க்(medialink)தலைவர் ஜனாப் எம்.எச்.எம்.நியாஸ் அவர்களுடன் கிடைத்த தொடர்பின் மூலம் அரசியலில் நுழையும் வாய்ப்புக்களை பெற்றார்.

ரியாஸ் அவர்களின் திறமையையை புரிந்துகொண்ட ஜனாப் நியாஸ் அவர்கள் ரியாசின் வளர்ச்சிக்கு உருதுனையாகயிருந்தார்.

கலைத்துறையில் மிகவும் ஆர்வமாயிருந்தார்.
தனது 17,வது வயதினிலே மாத்தளையில் நடைபெற்ற சாஹித்திய கலாபிரஷாதினி முதல்நாள் இரவு கலாசார நிகழ்ச்சியின் போது இவர் அறுபதுக்கும் மேற்பட்ட பல்வேரு குரல்களில் பேசிக்காட்டினார், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், கமலஹாசன், போன்ற பிரபல்யமான நடிகர்களைப் போன்று மிமிக்ரி செய்து புகழ்பெற்றார் .

அதுமட்டுமா ? எத்தனை வகைப் பாடல்கள் பாலசுப்பிரமணியம், மனோ, மற்றும் பழம்பெரும் பாடகர் சிதம்பரம் எஸ் ஜெயராமன், போன்றவர்களின் குரலையும் மிமிக்க்ரி செய்து அசத்தியுள்ளார்.

குரல்வகைப் பயிற்சி மூலம் இக்கலையை வளர்த்து தானும் இலங்கைக்கு பெருமையை தேடி ஒரு சாதனை வீரனாகத் திகழ வேண்டும் என்பது ரியாஸின் இலட்சியம், கல்ஹின்னையைப் பிறந்தகமாய்க் கொண்ட இவர் “யங் ஏசியா டெலிவிஷன் என்ற அமைப்பில் 1998, ம் ஆண்டுகாலத்தில் இணைந்து தன் ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார்  
அதனைத் தொடர்ந்து இவர் இளைஞர் இதயம், மாணவர் மன்றம் என்பவை மூலம் தனது குரல்வளத்தை ‘ யாட்டீ’யின் உதவித் தயாரிப்பாளராகவும் சேவை செய்துள்ளார். 

அன்று சமாதானத்தை அடிப்படையாகக் கொண்ட ‘விழிப்பு’ என்ற நிகழ்ச்சி டி.என். எல். சேவையில் செவ்வாய் தோறும் இரவு 7.30 முதல் 8.00 மணிவரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை இவரே நடாத்திச் சென்றார். 
ஸ்வர்ணவாகினி, சங்கீத சாரிகாவும் வர்த்தக ஒலிபரப்பு சேவையில் அல்லியின் ஹலோ நிகழ்ச்சியும் இவரைப் பேட்டி கண்டன, அத்தோடு இளம் இசையமைப்பாளர் இர்பான் நடாத்திக்கொண்டிருந்த மாஸ்டர்ஸ் இசைக் குழுவிலும் ரியாஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் ஜனநாயக ஐக்கிய முன்னணி மாகாண சபைத் தேர்தல் கொழும்பு மாவட்டத்தில் இரட்டை இலையை சின்னமாக கொண்டு  2004,ம் ஆண்டு காலகட்டத்தில் 13,ம் இலக்கத்தில் போட்டியிடும் சந்தர்ப்பம் இவருக்கு கிடைக்கப்பெற்றன.

மேலும் எழுத்துத்துறையிலும் மிகவும் ஆர்வமாயிருந்துள்ளார்.

ரியாஸ் முஹம்மத் பற்றிய சில முக்கிய குறிப்புக்கள்  
  • 1995, SLBC VOIVE & DRAMA ARTIST 
  • 1998, YOUNG ASIA TV ASSISTANT PRODUCER & PRESENTER
  • 1999, ANNOUNCER AT SWARNA OLI RADIO (EAP EDIRISINGHE)
  • 2000, TO 2006, SHAKTHI TV PROGRAMME EXECUTIVE & PRESENTER
  • 2009 TO 2013, PROGRAMME MANAGER JAY FM DUBAI 
  • 2014, DEEPAM TV LONDON
  • 2017 TO 2018, CHIEF EDITOR TAMIL VIRAL MEDIA
  • 2018, R’TV CHAIRMAN (TAMIL) NETHERLANDS.

இளம் வயது முதற்கொண்டே பல திறமைகளை கொண்டவர் என்ற பெருமை ரியாஸ் அவர்களுக்குண்டு.

அதன்மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்ட ரியாஸ் அவர்கள் ,தற்போது RTV என்ற SOCIAL MEDIA தொலைகாட்சி சேவையை நெதர்லாந்திலிருந்து நடாத்திக் கொண்டிருப்பது பெருமைப்படக்கூடிய ஒரு விடயமாகும்.

சாதனைகளும், சந்தர்பங்களும் பணத்தினாலோ பரம்பரை ஆதிக்கம் கொண்ட குடும்பத்தார்களுக்கு மாத்திரம் உருத்தானதல்ல என்பதற்கு ரியாஸ் முஹம்மத்  அவர்கள் ஓர் உதாரணம்.

NAME;RIYAS MOHAMMAD
FATHER:Marhoom al haaj  mohammed  cassim  mohammed haniffa  
MOTHER:marhoom haajiyani  Ramlath

3 elder brother 
3 elder sisters
 
8th and last child In the family
Education al manar  maha  viddiyalaya  and zahira college matale

தகவல்;
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post