கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் கிரீன் டீயில் நிறைவாக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும். கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டும் தன்மையை கொண்டுள்ளது.
கிரீன் டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
தண்ணீர்
கிரீன் டீ இலைகள்
எலுமிச்சைச் சாறு
தயாரிப்பு
ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அதில், ஒரு தேக்கரண்டி அளவுக்கு கிரீன் டீ இலைகளைப் போட்டு சில நிமிடங்கள் மூடிவைக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, கிரீன் டீயின் சாறு வெந்நீரில் இறங்கியிருக்கும்.
அதை வடிகட்டி, ஓரிரு சொட்டுகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிக்க வேண்டும். எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.
இது உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் பெக்டின் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, சுடுநரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், அது கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
கிரீன் டீயின் முழுப் பலனையும் பெற சர்க்கரை சேர்க்க கூடாது. கசப்பாக இருக்கிறது குடிக்க முடியவில்லை என்றால் தொடக்கத்தில் சிறிய அளவு தேன் எடுத்து கொள்ளுங்கள்.
Tags:
ஆரோக்கியம்