எதிர்காலத்தில் கல்ஹின்னை ஒரு போதைப்பொருள் சந்தையாக மாறும் நிலை..

எதிர்காலத்தில் கல்ஹின்னை ஒரு போதைப்பொருள் சந்தையாக மாறும் நிலை..


இலங்கையில் போதைப்பொருள் பாவனை மிகவும் மும்முரமாக நடைபெறுகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இளம் வயதினரிடையே  போதைப் பொருள் பாவனை  முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நாட்டில் தினமும் ஐஸ் போதைக்கு அடிமையானவர்களால் பல சம்பவங்கல் நடைபெறுகின்றன.அந்த வகையில் கடந்த வாரம் அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலை செய்த  கும்பல் ஹெரோயின், ஐஸ்,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்தும் எவ்வித பயனும் இல்லை எனவும், தகவல் கொடுப்பவர்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸார் கும்பலுக்கு தெரிவிப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீரற்ற நிலையில் இருப்பதால் இப்படிப்பட்ட குற்றங்கள் தினமும் சர்வ சாதாரணமாக நடக்கின்றது.போலீசாருக்கு தகவல் கொடுப்பதில் எந்தவிதப் பயனும் இல்லை என்று பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

உண்மையும் அதுதான் .இன்று குற்றம் செய்துவிட்டு தப்பிப்பது மிகவும் சாதாரணம் .காரணம் போலீசாரும் குற்றவாளிகளுக்கு துணைபோவதுதான் .பொலீசாருக்கு தகவல் கொடுத்தவுடன் அந்தத் தகவல் உடனே குறிப்பிட்ட கும்பலுக்கு போய்விடுகின்றது.தகவல் கொடுத்தவருடைய ஊர் பெயர் கும்பலுக்கு கிடைத்தவுடன் அந்தக் கும்பல் பலி எடுக்கின்ற  வேலையை செய்கின்றார்கள்.

ஏதோ கடமைக்கு கைது செய்து விட்டு அடுத்தநாள் விடுதலை செய்கின்றார்கள்.  மீண்டும் போதை வியாபாரம் ,ரவுடித்தனம் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றதை கண்கூடாகக் காண்கின்றோம் .

இன்று இலங்கையில் போதைப்பொருள் பாவனை  அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் பாதுகாப்புப்படையினரின்  பொறுப்பில்லாத செயல்பாடுகள்தான் . 

அரபு நாடுகள் ,மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தூக்கில் போடுவதைப்போன்ற கடுமையான சட்டங்களை பிறப்பிக்கவேண்டும்.
சட்டங்களில் ஓட்டை இருக்கும்போது குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடக்கும்.அதுதான் இன்று இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் குற்றங்கள் பெருகுவதற்கு  முக்கிய காரணங்களாயிருக்கின்றது.

இதே நிலைமை இன்று கல்ஹின்னைக்கும் தொற்றியுள்ளது.

கல்ஹின்னையிலும் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

கல்ஹின்னை சுற்றுவட்டாரத்தில்  ஹெரோயின், ஐஸ்,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பாவனைகளும், விற்பனைகளும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் பாவனை செய்கின்றவர்கள் ,விற்பனை செய்கின்றவர்களுக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாவது கொடுக்கவேண்டும்.அப்படியில்லைஎன்றால் கல்ஹின்னையும் ஒரு போதைப்பொருள் சந்தையாகவும் ,குற்றங்கள் நிறைந்த ஒரு ஊராகவும் புகழ்பெறும் என்பதை நாம் மறந்துவிடவேண்டாம் .

இன்று கல்ஹின்னையில்  போதைபொருள் பாவனையால் பல குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன.தங்கள் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாய் செல்லம் கொடுத்து வளர்ப்பதால் ,அவர்கள் செய்கின்ற தவறுகளை பெற்றோர்களே மறைக்கின்ற கொடுமையும் கல்ஹின்னையில் நடக்கின்றது.

ஐஸ் போதைக்கு அடிமையான கணவனால் துன்புறுத்தப்படும் மனைவிகள்  கணவனை காப்பாற்ற பொய்யான சாட்சியங்களை சொல்லி கணவனை காப்பாற்றுகின்றனர்.மனைவிகள் தாய்மார்கள் செய்கின்ற இந்தத் தவறால் மேலும் போதைப் பழக்கங்கள் அதிகரிக்கின்றன.

இந்த விடயத்தில் ஊர்ப்பெரியவர்கள் முன்வரவேண்டும் .கடுமையான சட்டங்களை பிறப்பிக்கவேண்டும்.

அதற்கு உதாரணம் நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினால் சகல ஜமாத்தார்களுக்கும்  விடுக்கப்பட்டுள்ள அறிக்கை.
(நிந்தவூர் பள்ளிவாசல் அறிக்கையை இத்துடன் இணைத்துள்ளேன் )


இப்படிப்பட்ட கடுமையான சட்டங்களை பொலிசாருடன் இணைந்து செயல்படுத்த முடியும் .

அப்படியில்லை என்றால் எதிவரும் காலங்கள் மிகவும் கடுமையானதாயிருக்கும்.கொலை கொள்ளைகள் சர்வ சாதாரணமாகிவிடும் .கற்பழிப்புக்கள் ,போன்ற கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத சம்பவங்கள் எமதூரிலும் நடக்கும்.

ஆகவே ஊர்ப் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து இதற்கான ஒரு தீர்மானத்தை எடுப்பார்கள் என்று நினைக்கின்றேன் 

M.M.பாரூக் (wc)
கல்ஹின்னை


 


Post a Comment

Previous Post Next Post