கல்ஹின்னை வரலாற்றில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் விளையாட்டரங்கம்.

கல்ஹின்னை வரலாற்றில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் விளையாட்டரங்கம்.


இன்று கல்ஹின்னையில் இருக்கின்ற தொழிலதிபர்கள் கல்ஹின்னையின் வளர்ச்சிக்காக பல வழிகளிலும் பாடுபடுகின்றார்கள்.
கல்வி,மார்க்கக் கல்வி,படசாளைகளின் அபிவிருத்தி மற்றும் ஊரில் இருக்கின்ற வசதியற்றவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இப்படி கல்ஹின்னையின் வளர்ச்சிக்காக சுயநலமற்ற சேவை செய்து வருகின்ற  எமதூர் தனவந்தர்களுக்கு மத்தியில் கல்ஹின்னையின் இளம் தொழிலதிபர் அல்-ஹாஜ் அஹ்மத் ஷர்பான் அவர்கள் முக்கிய இடம் வகிக்கின்றார்.

மேலே  குரிப்பிட்டதைப்போன்று கல்ஹின்னையின் வளர்ச்சிக்காக பல வழிகளிலும் உதவுகின்றார்.

விளம்பரமில்லாமல் தனிப்பட்ட முறையில் பல குடும்பங்களுக்கு உதவுகின்றார்.முக்கியமாக கல்வி விடயத்தில் மிகவும் ஆர்வமுடன் செயல்படுகின்றவர்.கல்வி கற்கின்ற பிள்ளைகளுக்கு தேவையான வசகிளை செய்துகொடுக்கின்கின்றார்.

அல்-ஹாஜ் ஷர்பான் அவர்கள் சமீபத்தில் கல்ஹின்னையில் முதன் முதலாக சிறுவர் விளையாட்டரங்கு ஒன்றை நிறுவினார்.கல்ஹின்னை வரலாற்றில் இதுதான் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டரங்கு .அதற்குரிய பெருமை அல்ஹாஜ் ஷர்பான் அவர்களுக்கே .

அழகிய முறையில் வடிவமைக்கப் பட்டு தனது தந்தையின் பெயரில் ஊருக்காக வழங்கப்பட்டது. 

திறப்பு விழாவிற்கு அவரால் சமூகமளிக்க முடியாவிட்டாலும்  தன்னுடைய தந்தையின் உடன்பிறப்பான அல்-ஹாஜ் நிசாம் அவர்களை  விளையாட்டரங்கின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் தொழிலதிபர் அல்-ஹாஜ் S.M. ஜிப்ரி அவர்கள் சிறுவர்கள் விளையாட்டரங்கு நுழைவாயில் ரிப்பனை வெட்டி ஆரம்பித்து வைத்தார்

அல்-ஹாஜ் காமில் (முப்தி) அவர்களின் தலைமையில் துவாப் பிராத்தனை செய்யப்பட்ட போது கூட்டாக கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் பிரதம கதீப் சிஹான் மௌலவி, கல்ஹின்னை அல் பாத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் அதிபர் அல்-ஹாஜ் ரஷான் மௌலவி, உப-அதிபர் ரிசான் மௌலவி,  அல்-ஹாஜ் அல்ஹாபில் ரிப்கான்,(I.D.L) முகைமையாளர் A.L.M.ஆஷிக், பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவர் ஜனாப் உவைஸ் ரசான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்ஹின்னை பிரதேச அமைப்பாளர் ஜனாப் ரிசான் சாலி, ஐக்கிய தேசிய கட்சியின் பட்டகொல்லாதெனிய பிரதேச அமைப்பாளர் ஜனாப் ஹசாஹீம், பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் அல்-ஹாஜ் பரிசிடீன், பள்ளியகொட்டுவ கிராம சேவகர் அல்-ஹாஜ்  குலாம், மற்றும் பாடசாலை அதிபர் ஜனாப் அமீன், அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அல்-ஹாஜ் அஸ்லாம், நெதர்லாந்து அல்-ஹாஜ் ஹலீம்டீன், கல்ஹின்னை ஜனாஸா சங்கத்தின் தலைவர் அல்-ஹாஜ் அமீன், மற்றும் பாலர் பாடசாலையின் மாணவ மாணவிகளின் பெற்றார்கள், பொது மக்கள்  கலந்து சிறப்பித்தனர். 

அதனைத் தொடர்ந்து  பாலர் பாடசாலையின் அதிபர் ஜனாப் அமீன் அவர்களின்  தலைமையில்  கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் கேட்போர் கூடத்தில் தொழிலதிபர் அல்-ஹாஜ் அஹ்மத் ஷர்பான் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தார்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் முன்னைநாள் கென்யா நாட்டின் இலங்கை நாட்டிற்கான தூதுவர் அல்-ஹாஜ் சட்டத்தரணி H.M. பாரூக் அவர்களும் தொழிலதிபர் அல்-ஹாஜ் S.M.ஜிப்ரி அவர்களும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சிறுவர் விளையாட்டரங்கின் திறப்பு விழா இனிதே நடந்து முடிந்தது 


 


Post a Comment

Previous Post Next Post