உலகக்கோப்பையை விண்வெளியில் அறிமுகம் செய்த ஐசிசி… விளையாட்டு வரலாற்றில் புதிய முயற்சி

உலகக்கோப்பையை விண்வெளியில் அறிமுகம் செய்த ஐசிசி… விளையாட்டு வரலாற்றில் புதிய முயற்சி


ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விண்வெளியில் அறிமுகம் செய்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய முயற்சி முதல்முறையாக நடந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிகழ்வு எப்படி நடந்தது என்பது குறித்து ஐசிசி விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. 

இதுகுறித்த போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.

இந்த தொடரில் விளையாட இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள மற்ற 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வேயில் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் விளையாட்டு வரலாற்றில் எந்தவொரு அமைப்பும் செய்யாத சாதனையாக, உலகக்கோப்பையை பூமியில் இருந்து 1.20 லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் வைத்து ஐசிசி அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக Sent into space என்ற பிரிட்டனில் செயல்படும் விண்வெளி நிறுவனத்தை தொடர்பு கொண்ட ஐசிசி, அதன் மூலமாக கோப்பையை விண்வெளிக்கு அனுப்பியது. இதற்காக உலகக்கோப்பை 2 நாட்களுக்கு முன்பாக கடந்த 24 ஆம் தேதி சென்ட் இன்டூ ஸ்பேஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட லான்ச்சர்கள், பலூனின் உதவியோடு, உலகக்கோப்பை விண்வெளியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

கோப்பை நிறுத்தப்பட்ட இடத்தில் வெப்பநிலை -65 டிகிரி செல்சியஸில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் இந்த அதிரடி முயற்சியை உலகின் மற்ற முன்னணி விளையாட்டு நிறுவனங்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.


news18



 


 


Post a Comment

Previous Post Next Post