எந்த நோன்பிலும் நடக்காத சம்பவங்கள் இந்த நோன்பில் நடந்து கொண்டிருக்கின்றன.
"இஃபதார் கிட் "
"சஹர் கிட்"
என்ற பெயர்களில் உணவுகளும் கேள்விபடாத பெயர்களில் பழசாறுகளும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரதானப்படுத்தப்படுகின்றது!!!.
நோன்பின் மாண்பு என்னவென்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த முடியாமல் போனதால் நடந்த விளைவு!!.
இது மிகவும் வருத்தத்துக்குரியது.
சாதாரண நாட்களில் உண்ணும் உணவை விட நோன்பு நாட்களில் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்வது போன்றே தோன்றுகிறது.
அதிலும் இந்த வருடம் சமூக வலைத்தளங்கள் மூலமாக மிக அதிக அளவில் உணவு விற்பனையும் அதை சார்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய உணவும் பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது.
இந்த நோன்பு முழுவதும் உணவே மிக முக்கியமான அம்சமமாக சமூக வலைத்தளங்களும் மூலமாக பதிய வைக்கப்படுகிறது.
ஒரு காலங்களில் நோன்பு திறந்தால் ஆரோக்கியமான சிறிதளவு நோன்பு கஞ்சி பேரித்தம் பழம் மற்றும் பழங்கள் ஆகியவையே எடுத்துக் கொள்வோம்.
நோன்பின் அடிப்படை தத்துவங்கள் உணவை கட்டுப்படுத்துவதன் மூலமாக நம் உடல் சார்ந்த உறுப்புகள் சுத்தமடைவது மட்டுமல்லாமல் அதன் மூலம் நம் ஆன்மாவின் உண்மை நிலை என்னவென்று உணர முடியும் இதனால் தான் முதலில் உணவில் இருந்து நமது தவிர்த்தலை தொடங்க வேண்டும்.
ஆனால் இங்கு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன.
எதை எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்கின்ற அடிப்படை அறிவு சுத்தமாக போய்விட்டன வெறும் வயிற்றை நிரப்பக்கூடிய குப்பை வகையான உணவுகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.
இந்த குப்பையான உணவுகளை உட்கொள்வதன் மூலமாக நம் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்கள் ஒரு போதும் கிடைக்கப் போவது கிடையாது மாறாக அது சார்ந்து செயல்படக்கூடிய உடல் உறுப்புகளை மிகப்பெரும் அளவில் பாதிப்படைய செய்யும்.
கிட்டத்தட்ட இளைய சமூகங்கள் மிக வேகமாக நோய்களில் சிக்கி வருகிறார்கள்.
சில நோய்களுக்கு தீர்வு என்பதே கிடையாது ஒரு முறை வந்துவிட்டால் body maintain வேண்டுமென்றால் பராமரித்துக் கொள்ளலாமே தவிர அதற்கு ஒருபோதும் தீர்வு என்பது கிடைக்காது.
ஆனால் முன்பே நமது உணவுகள் மூலமாக கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் நமது ஆரோக்கியத்தையும் உடம்பையும் பாதுகாக்கலாம்.
நோன்பு என்பது 11 மாதம் தொடர்ச்சியாக பணி ஆற்றிக் கொண்டிருந்த நமது உடல் சார்ந்த உறுப்புகள் அந்த ஒரு மாதம் சற்று ஓய்வு நிலைக்கு செல்லும் அதன் மூலமாக இறைவனை அறியக்கூடிய சில விஷயங்களை குறித்து நமக்கு அறிவின் மூலமாக உணர்வு ஏற்படும் இதுதான் அடிப்படை தத்துவம்.
வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ளுதல் வசதி வாய்ப்புகளை பெருக்குதல் வீடுகள் கட்டுதல் வாகனங்கள் வாங்குதல் ஆகியவற்றில் காட்டக்கூடிய அக்கறையும் அறிவையும் சற்று ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்வதிலும் முறையாக உறங்குவதிலும் உடல் நலன்களை பேணி காப்பதிலும் கவனம் செலுத்துவோம்.
நான் எனது துறை சார்ந்து சந்தித்து வருகிற ஒரு விஷயம் வீட்டில் பூச்சிகள் போன்று நோய்களில் இளைய சமூகம் மிக விரைவாக விழுந்து கொண்டிருக்கின்றார்கள் (அதற்கு மிக முக்கியமான காரணம் அதிக உணவு).
உண்மையிலேயே இது சமூக ரீதியில் மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒருவேளை அவரை நம்பி தான் குடும்பம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அந்த குடும்பத்தின் நிலையை சற்று யோசித்து பாருங்கள்.
இதற்கு நமது அறியாமையும் எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணமும் தான்.
உடல் சார்ந்த உறுப்புகளை நாம் வதம் செய்தால் அது திரும்பவும் வச்சு செய்யும்.
இதற்கு பெயர் தான் உடல் வன்முறை
வேறு எப்படி எனக்கு சொல்வது என்று தெரியவில்லை
40 வருடங்களுக்கு முன்பு வரை ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த சமூகம் தற்போது உணவு மயக்கத்தில் நாகரீக கோமாளிகளாக இருக்கின்றோம்.
whatsapp
Tags:
படித்ததில் பிடித்தது