மாற்றத்தை நாடிநிற்க்கும் கல்ஹின்னை மக்கள்

மாற்றத்தை நாடிநிற்க்கும் கல்ஹின்னை மக்கள்

கல்ஹின்னை டுடேக்கு கிடைத்த தகவலின்படி கல்ஹின்னை மக்கள் ஊரில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கின்றார்கள் என்பது தெளிவாகப் புரிகின்றது.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கல்ஹின்னையின் நலனுக்காக சிந்திக்கின்ற ஒரு சிலரிடமிருந்து கிடைத்த தகவலின்படி ஊரில் நிறைய மாற்றங்களை மக்கள் எதிர்பார்கின்றார்கள் என்பதை  அறிய முடிகின்றது. .

அதிலும் முக்கியமாக கல்ஹின்னை பாடசாலையைப்பற்றிய கருத்துக்கள் மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாய் இருக்கின்றது. 

ஒரு காலத்தில் கல்வியிலும் ,கலைத்துறையிலும்,விளையாட்டிலும் மிகவும் பிரபல்யமாய் திகழ்ந்த கல்ஹின்னை அல்மனார்  பாடசாலை இன்று சாதாரண ஒரு பாடசாலையின் தரத்தைவிட தாழ்ந்துள்ளதாக ஊர் மக்களின் கருத்தாயிருக்கின்றது.

பணபலமும் அரசியல் செல்வாக்கும் இவர்களிடம் இருக்கும்போது  மக்களின் குறைகளை ஆராய்ந்து  அதற்கு ஏற்றவாறு இந்தக் குறைகளை தீர்க்க முடியும் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றார்கள் .

கல்வி என்பது அழியா சொத்து .அதை முறையாக மக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உள்ள கடமை .அப்படியிருக்கும்போது கல்ஹின்னை அல்மனாரில் பாடசாலையில் மட்டும்” ஏதோ வந்தோம் போனோம் மாணவர்கள் எப்படிப்போனால் நமக்கென்ன ...மாதம்தம் முடிய பணம் கைக்கு வந்தால் போதும் என்று நினைக்கின்ற ஒருசில ஆசிரிரியர்களை இடமாற்றம் செய்வது மிகவும் முக்கியம் .

ஒரு பாடசாலையின் தரம் உயரவும் ,வீழவும் அந்த பாடசாலை அதிபரின் கையிலிருக்கின்றது.கல்ஹின்னை அல்மனார் பாடசாலை தற்போதைய அதிபர் பதவி ஏற்றததிளிருந்து வீழ்ச்சியை தவிர எதையும் கண்டதில்லை.பாடசாலைக்கு தேவையான கட்டிடங்களை மட்டும் எப்படியோ கஷ்டப்பட்டு நல்ல மனம் படைத்தவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள தயங்கியதில்லை.

ஆனால் மாணவர்களின் கல்வியையும்,அவர்களுக்குள் இருக்கின்ற திறமைகளையும்  மேம்படுத்த்க்கூடிய எந்த ஒரு செயல் திட்டங்களையும் செய்ததாக தெரியவில்லை.

அப்படி இருக்கும்போது தரமில்லாத ஒரு அதிபரையும்,தரமில்லாத ஒருசில ஆசிரியர்களையும்  நீண்டகாலமாக பதவியில் வைத்து கொண்டாடுவது உலகத்தில் எங்குமே நடக்காத ஒரு  செயல்.

கல்ஹின்னை அல்மனார்  போன்றுதான் கல்ஹின்னை மதரசாவும் .நீண்டகாலமாக ஒரே அதிபரையும், தரமில்லாத ஆசிரியர்களையும் வைத்துகொண்டு வருங்கால சந்ததியினரை  சீரழிக்கின்ற ஒரு பயங்கரமான செயலை செய்கின்றோம். 

எதிகாலத்தில் எமது ஊர்ப்பிள்ளைககளின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.

இன்று சாதாரன வசதிகளை வைத்துக்கொண்டு மிகவும் புகழ் பெற்றுள்ள பாடசாலைகளைப் பற்றிக் கேள்விப்படுகின்றோம்.சின்னச்சின்ன பாடசாலைகளில் படிக்கின்ற மாணவர்களின் பெறுபேறுகளைப்பற்றிய செய்திகளை படிக்கின்றோம் ,அப்படியிருக்க ....அத்தனை வசதிவாய்ப்புக்களையும் பெற்றுத்திகளும் கல்ஹின்னை அல்மனாரும்,கல்ஹின்னை மதரசாவும் எதை சாதித்துள்ளார்கள்?

 ஆகவே கீழ்வரும் மாற்றங்களை செய்து பாருங்கள் கல்ஹின்னை பிள்ளைகளின் எதிகாலம் சிறப்பாய் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை,  

இன்று கல்ஹின்னை மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் உதவிகள் புரிகின்ற அல்ஹாஜ் முஸ்லீம் ஹாஜியார்,மற்றும் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹாஜியார் போன்ற செல்வந்தர்கள் நினைத்தால் ஊர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில்   கீழே குறிப்பிடப்பட்டுள்ள  மாற்றங்களை செய்ய முடியும்.

கல்ஹின்னை ஊர்நிர்வாகத்தில் மாற்றம் வேண்டும் 

தலைமைக்கு மாற்றம் வேண்டும் 

மஹல்லாக்கள் எல்லாம் ஒன்றினைந்த நிர்வாக மாற்றம் வேண்டும்  

ஊலல் வாதிகளில்லாத நிர்வாகமாக மாற்றம் வேண்டும் 

பாடசாலையில் மாற்றம் வேண்டும்

அதிபர் மாற்றம் வேண்டும் ஆசிரியர்களில் மாற்றம் வேண்டும்

பாடசாலை நலன்புரிச்சங்கத்தில் மாற்றம் வேண்டும்

மத்ரசாவில் மாற்றம் வேண்டும் 

மத்ரசா நிற்வாகத்தில்  மாற்றம்   வேண்டும் 

அதிபர் மாற்றம் வேண்டும் ஒஸ்தாத்மார்களில் மாற்றம் வேண்டும்

அரசியலில் மாற்றம் வேண்டும்

ஊலல் அரசியலில் மாற்றம் வேண்டும்

பழையவர்களை மாற்றி புதியவர்கள் வரவேண்டும்

நாங்கு கிராம சேவை பகுதியிலும் மாற்றம் வேண்டும்

ஒன்றியத்தில் மாற்றம் வேண்டும் 

கல்வியில் மாற்றம் வேண்டும்

பள்ளிக்குள் உருப்பினர்கள் மாற்றம் வேண்டும் 

பேஷி இமாம் கதீப் இவர்களில் மாற்றம் வேண்டும் 

ஊர்மக்களில் மாற்றம் வேண்டும். 

மக்கள் இறைசிந்தனை தொழுகையாளராக மாறினால்தான்  இத்தனை மாற்றங்களையும் மாற்றமுடியும் .நிர்வாகத்தின் மாற்றத்துடன் மற்றைய எல்லாத்துறைகளிலும் மாற்றம் வேண்டும்,

இன்ஷாஅல்லாஹ்

கல்ஹின்னை நண்பன் 


Post a Comment

Previous Post Next Post