கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் செம்பருத்தி எண்ணெய்

கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் செம்பருத்தி எண்ணெய்


முடியின் வளர்ச்சியை அதிகரிக்க குழந்தைகள் வளரும் போதே கூந்தலுக்கு சரியான எண்ணெயை ஒரே எண்ணெய்யை பயன்படுத்துவது அவசியம். இதனால் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். முடி அடர்த்தியாக, பொலிவாக, நரையில்லாமல் வைத்திருக்கலாம்.

கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தையும் கொடுக்கும். அந்த வகையில் செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

செம்பருத்தி பூக்கள் – 30

ஆலிவ் எண்ணெய் – கால் லிட்டர்

தேங்காய் எண்ணெய் – கால் லிட்டர்

வெந்தயம் – 5 டீஸ்பூன் அளவு

முதலில் இரும்பு வாணலியில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சூடேற்றவும். அடுப்பு மிதமாக கொதிக்கட்டும். செம்பருத்தி பூவின் மகரந்தத்தை நீக்கி இதழ்களை தனியாக பிரித்து நறுக்கவும்.

கால் கைப்பிடி அளவு இதழ்களை மிக்ஸியில் அரைத்து எண்ணெயில் சேர்க்கவும். மற்ற இதழ்களை அப்படியே எண்ணெயில் போட்டு, வெந்தயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

எண்ணெய் குளிரவைத்து கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தவும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணெயை காய்ச்சலாம். தொடர்ந்து இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தினமும் உச்சந்தலையில் விரல்களில் தொட்டு மயிர்க்கால்களில் தடவி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து வந்தால் போதும்.

கூந்தலில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை மேம்படுத்தக்கூடும். மேலும், குழந்தைக்கு எண்ணெய் குளியலின் போது இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தலாம். இது உடல் உஷ்ணத்தையும் தணிக்க கூடியது.

வேறு எண்ணெய் எதையும் பயன்படுத்தாமல் இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்தால் முடி ஆரோக்கியமாக செழித்து வளரும். வயதானவர்களும் இதை பயன்படுத்தலாம். தினசரி தலைக்கு, ஆயில் மசாஜ் செய்வதற்கு, ஆயில் பாத் எடுப்பதற்கு என எல்லாவற்றுக்கும் இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்தலாம்.

சிறந்த பலன் கிடைக்கும். பின்னர், செம்பருத்தி எண்ணெய் முடிக்கு பலத்தை கொடுப்பதால் முடி இழப்பு உண்டாவது தவிர்க்கப்படுகிறது. முடியையும் வேர்க்கால்களையும் வலிமையாக்குகிறது.

இளநரையை வராமல் தடுக்க செய்கிறது. நரை பிரச்சனை தவிர்க்க உதவுகிறது. முடிக்கு அடர்த்தி கொடுக்கிறது. முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பொடுகு பிரச்சனை அதிகரிக்காமல் செய்கிறது.


Post a Comment

Previous Post Next Post