கல்ஹின்னை தனியார் பாடசாலைகளும் பெற்றோரின் குமுறல்களும்.

கல்ஹின்னை தனியார் பாடசாலைகளும் பெற்றோரின் குமுறல்களும்.

கடந்த  சில ஆண்டுகளாக உலகெங்கும்  உள்ள   மாணவர்களுக்கு  கல்வியில் பாரிய அளவிலான கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்பட்டுள்ளதை யாவரும் அறிவர்.காரணம். 

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் தான்.இரண்டு வருடங்களாக மாணவமணிகளின் கல்வி  நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சிலபாடசாலைகள் இணையவழி கல்வி முறையினை  ஆரம்பித்து நடத்திக் கொண்டு செல்வதை காண்கிறோம்.

ஆனால் அது எந்த அளவிற்கு பயன் பெறுகிறது என்பதை பிரிதொரு சந்தர்ப்பத்தில்  பார்ப்போம்.

இன்று மக்கள்  கொரோனாவால் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள்.ஒருவேளை வயிற்ருக்கே கஷ்டப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் 

 ஆனால்  கல்ஹின்னையில் சில தனியார்  பாடசாலைகளில் ஆன்லைன் வகுப்புக்களுக்காகவும்,பாடசாலை சந்தாவையும் ஈவு இரக்கமற்றமுறையில்  வசூலிக்கும் முயற்சியிள் இறங்கியுள்ளதாக  பெற்றோர்கள் கவலைப்படுகின்றார்கள்.

மாணவர்களைப்பற்றிய  சிறிதளவேனும் அக்கரை கொள்ளாமல்  கொரோனாவால் ஏற்பட்டுள்ள கல்வித் தாக்கத்தினையும் உணராமல்  தனியார் பாடசாலை களின்   அழுத்தங்கள் அதிகமாகவே உள்ளது. 

இன்றைய அசாதாரண கால கட்டத்தில் தொழில் இல்லாமல் அன்றாட செலவுக்கே லாட்டியடிக் கும் பெற்றோரிடம் அழுத்தம் கொடுப்பது  முறையல்ல.

 மாணவர்கள்  அமானிதங்களாக பார்க்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு\ கல்வியினை சரிவரக் கற்றுக் கொடுக்கின்றார்களா என்றால்  அதுவும் இல்லை  

ஆனால் இது பற்றி பெற்றோர்கள் அலசி ஆராய்வதில்லை .எதோ பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று வந்தால் போதும் ,இரண்டு வார்த்தை ஆங்கிளம் பேசினால் போதும் என்று நினைக்கின்ற பெற்றோர்கள்தான் அதிகம்.

அப்படியே இதைப்பற்றி பாடசாலையில்  கேட்டாலும் அவர்களைச் சமாளித்து அனுப்பி விடுகிறார்கள்.

காரணம் பிள்ளைகள்ஆங்கிலக்கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கிலேயே இவர்கள் ஆங்கிலப் பாடசாலைகளில்  பிள்ளைகளைப் சேர்க்கின்றார்கள்.

ஆனால்  ஆங்கிலக்  கல்வி அறியாத பெற்றோர்களின் பிள்ளைகள் படும் பாடு மிகவும் பரிதாபம். 

 ஓர் சந்தேகமான கேள்வியைக் கூட  தம் பிள்ளைளுக்கு சொல்லிக் கொடுக்கமுடியாத பெற்றோர்களின் அவல நிலை அதைவிடக் கொடுமை .

 பிள்ளைகள் நல்ல நிலையை அடைய வேண்டும்,ஆங்கிலம் பேசவேண்டும்  என்ற எண்ணத்துடன் இந்த பாட சாலைகளில்  சேர்ததுதான் பெற்றோர்கள் செய்த  மிகப் பெரும்  தவறு  

அப்படியே பிள்ளைகளைப் பற்றி  விசாரிக்க பாடசாலைக்குச் சென்றால் உங்கள் பிள்ளை நல்லதரமான பிள்ளை நன்றாகப் படிக்கிறார் என்று சமாளித்து அனுப்பி விடுகிறார்கள்.  விசாரிக்கச் சென்றவர்கள் மகிழ்ச்சியோடு வீடு திரும்புகிறார்கள்.

பிள்ளைகளைப் பற்றி சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டுமாயின், வேறொரு பாடசாலைக்கு எமது பிள்ளைகள் சென்றால் தான்  பிள்ளை எந்த அளவுக்கு கெட்டிக் காரன் என்பதை உணரமுடியும்.

ஆகவே தனியார் பாடசாலை நடாத்துகின்ற  ஆசிரியப் பெருமக்களே மிக அவதானமாக  நடந்துகொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் சன்னிதானத்திலே குற்றம் இழைத்த கூட்டத்தில் சேர்ந்து விடாதீர்கள்.

இன்றைய சூழ்நிலையில்  உங்களுக்கு பணம் தேவை என்றால் எவரிடமாவது கேட்டு வாங்கித்தின்னுங்கள் வசதியில்லாதவர்களின் வயிற்றில் கை வைக்காதீர்கள்.

இன்று கொரோனாவால் உன்ன உணவில்லாமல் மக்கள் படுகின்ற அவஸ்தை உங்களுக்கு தெரியுமா?

எத்தனை மரணங்கள்? எத்தனை தற்கொலைகள் ?

பணமா காப்பாற்றுகின்றது? அல்லது குவித்து வைத்துள்ள சொத்துக்களா காப்பாற்றுகின்றது?

அந்த படைத்தவனைத் தவிர எந்த கொம்பனாலும் இந்த உலகத்தைக் காப்பாற்ற முடியாது.

கொஞ்சமாவது  அல்லாஹ்வை நினைத்துக்கொள்ளுங்கள் .பயப்படுங்கள்.

கல்ஹின்னை டுடே  நிருபர் 


1 Comments

  1. இத்தகவலை வெளியிட்ட சகோதர பெரும் மக்களே!
    நீங்கள் குறிப்பிட்டு உள்ள அனைத்தும் எந்த விதத்தில் நியாயம் என்று விளங்கி கொள்ள முடியவில்லை. உமது கருத்தில் உலகெங்கும் உள்ள மாணவர்களுக்கு இன்று கல்வியில் பெரும் கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளவை யாவரும் அறிந்ததே!

    அந்த வகையில் உமக்கு தனியார் பாடசாலைகளை மட்டும் குறை கூற முடியாது. தனியார் பாடசாலை என்பது முழுமையாக கட்டணம் செலுத்தி கல்வி பயில்விக்கப்படும் சட்டமுறை ஆகும். இது உமக்கு தெரியாது என்பது சிரிப்புக்கு உண்டான விடயமே ஆகும். எனவே உமக்கு அதன் சட்டதிட்டங்கள் அறியாமல் இவ்வாறான தகவல்கள் பரிமாறுவது பெரும் குற்றமாகும்.

    மேலும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் தனியார் பாடசாலைகளிலோ அரச பாடசாலைகளிலோ ஆசிரியர்கள் இலவசமாக பணியாற்றுவது இல்லை. அவர்கள் ஆற்றும் பணியில் தான் அவர்களின் வருமானம் உள்ளது . கட்டணம் செலுத்த முடியாவிட்டால் எதற்காக தனியார் பாடசாலைகளில் உமது பிள்ளைகளை அனுமதிக்கின்றீர்கள்? இக்கால கட்டத்தில் பிள்ளைகளின் மனநிலை மட்டுமல்ல ஆசிரியர்களும் கூட தனது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் மாணவர்களுக்காக அர்பணிக்கின்றார்கள்.

    அதிலும் நீங்கள் கூறியது போல் ஆசிரியர்களுக்கு வேறு யாரிடமும் பணம் வேண்டுவது அவசியமில்லை . அவர்கள் செய்யும் சேவையை மதித்து உரிய நேரத்தில் கட்டணத்தை செலுத்துவது பெற்றோராகிய எமது கடமையாகும்.

    ஒரு பெற்றோராக நான் கடைசியாக கூறிகொள்ள வேண்டியது என்னவென்றால் உங்கள் பிள்ளைகளுக்கு ஹராமான கல்வியை கற்பிப்பதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் . அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
Previous Post Next Post