இஞ்சி டீ : இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைத்த வரம். சளிக்கு அதிமருந்தாக செயல்படும். எனவே இஞ்சியை தண்ணீரில் தட்டிப்போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வாருங்கள். சளிக்கு தொண்டை வலிக்கு இதமாக இருக்கும்.
நீரேற்றம் : சளி இருக்கும்போது உடல் சூடாகும். இதனால் உடலின் நீர் வற்றிப்போகும். இதனை தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்கலாம். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை , தேன் கலந்து குடிக்கலாம். டீ, காஃபியை தவிர்க்கலாம்.
ஆவி பிடித்தல் : யூக்கலிப்டஸ் இலைகள் அல்லது டீ ட்ரீ எண்ணெய்யை சூடான நீரில் கலந்து ஆவி பிடிக்கலாம். இதனால் சளி குறையும். மூக்கடைப்பு சரியாகும்.
வாய் கொப்பளித்தல் : வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்கலாம். இதை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என செய்து வர சளி குறையும்.
விட்டமின் சி : விட்டமின் சி தொற்று வைரஸுகளுடன் போராட உதவும். எனவே எலுமிச்சை தண்ணீர், ஆரஞ்சு, திராட்சை போன்ற விட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுங்கள். இஞ்சி டீயுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்கலாம்.