CHANGING கல்ஹின்னையின் மகத்தான சேவைக்கு துணை நிற்போம்!

CHANGING கல்ஹின்னையின் மகத்தான சேவைக்கு துணை நிற்போம்!


கல்ஹின்னையில்  CHANGING GALHINNAI  பலதரப்பட்ட உதவிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள்.மிகவும் பாராட்டப்படவேண்டியதொரு விடயம்.

இன்றைய சூழலில் இப்படிப்பட்ட உதவிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கின்றது கல்ஹின்னை மக்களின் தேவையறிந்து உதவிகள் புரிவது மிகவும் பெருமைபடக் கூடிய செயல்.

அப்படிப்பட்ட உதவிகளை CHANGING  கல்ஹின்னை மூலம் கல்ஹின்னை மக்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.கொரோனா கால LOCK  DOWN  காலத்தில்  கஷ்டப்படுகின்றவர்களுக்கு  தனிப்பட்ட ரீதியிலும் பல்வேறு உதவிகளை செய்துகொண்டிருப்பதையிட்டு நாம் பெருமைப் படவேண்டும் 

கஷ்ட காலத்தில் உதவி செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல் அதை முறைப்படி செய்வதென்பது மிக மிக மேன்மை வாய்ந்த ஒரு செயலாகவே கருதவேண்டியுள்ளது.

ஒரு சில பணக்காரர்கள் பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்கின்ற உதவிகளை விட CHANGING  கல்ஹின்னையின் உண்மையான நோக்கம் மிகப் பெறுமதி வாய்ந்தது .

ஊரில் ஒரு சிலரின் கருத்துக்களை கேட்கும்போது மிகவும் சந்தோசமாயிருந்தது.

"CHANGING கல்ஹின்ன தந்த பணம் சரியான நேரத்தில் கிடைத்தது.சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்படுகின்றோம் அல்ஹம்துலில்லாஹ் அவங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் கொடுக்கவேண்டும் "என்று ஒரு சகோதரர் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது,

இவை புகழுக்காக எழுதவில்லை .இன்றைய சூழ்நிலையில் இவர்கள் செய்கின்ற உதவிகள் கனகச்சிதமாக திட்டமிடப்பட்டு  தேவையானவர்களுக்கு போய்ச்சேருகின்றது 

என்பதை கல்ஹின்னையில் பிறந்தவன் என்றவகையில் எழுதத் தோன்றியதைத்தான் எழுதுகின்றேன்.

அடுத்ததாக கல்ஹின்னைக்கு ஒரு ஆம்புலன்ஸ்(AMBULANCE)வண்டிக்கான ஆரம்பக் கலந்துரையாடல்கள் CHANGING கல்ஹின்னையில் நடந்துகொண்டிருக்கின்றன,இதுவும் கல்ஹின்னைக்கு மிக மிக முக்கியமான தேவைகளில் ஒன்று என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

CHANGING கல்ஹின்னையின் இந்த முயற்சிக்கு கல்ஹின்னை மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி ஊரின் மாற்றத்திற்கு துணைபுரிய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்  புரிவானாக 

ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரழி) நூல்: புகாரி (5352)



Post a Comment

Previous Post Next Post