கல்ஹின்னையின் கருப்பு நாள்"-7-10-2011.VIDEO-2

கல்ஹின்னையின் கருப்பு நாள்"-7-10-2011.VIDEO-2

"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரராவார் சகோரத முஸ்லிமுக்கு அநீதமிழைப்பதோ அவரை அவமானப்படுத்துவதோ பழிப்பதோ கூடாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)"

நான் கல்ஹின்ன டுடே பத்திரிகையில் எழுதிய "கல்ஹின்னையின் கருப்பு தினம்" என்ற கட்டுரைக்கு ஒரு சில சகோதரர்கள் whatapp குழுமங்களின் மூலம் எதிர் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள். 

அது அவர்களின் சுதந்திரம் .அதைப்பற்றியெல்லாம் நாம் யோசிக்ககவில்லை நேரமும் காலமும் வீணாகி விடும் 

எமது நோக்கம் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் .அதற்காக எந்த விதமான தரம்கெட்ட விமர்சனங்களையும் தாங்கிக் கொள்வோம் 

கல்ஹின்னை சரித்திரத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையை பற்றித்தான் எழுதியிருந்தோம் .

ஒரு பெண்ணோடு சட்டத்தின் மூலம் மோத தைரியமில்லாதவர்கள் முழு ஊரையுமே ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்த கேவலத்தை பற்றித்தான் எழுதியிருந்தோம், மீண்டும்,மீண்டும்  எழுதுவோம்.எங்களிடம் அத்தனை ஆதாரங்களும் இருக்கின்றது .

குறிப்பிட்ட அதிபரோடு கூட்டுச் சேர்ந்து முன்னாள் பாடசாலை அபிவிருத்துக்குழு நடாத்திய நாடகங்கள் இனி ஒவ்வொன்றாக வெளிவரும்.என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

100வருடங்கள் சென்றும் சில வழக்குகலுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை கல்ஹின்னையின் மிகச்சிறந்த பத்திரிகை தர்மங்களை காக்கும் பத்திரிகையாளர் அறிந்திருப்பார் என்று நினைக்கின்றேன்.changing galhinna watsapp குழுமத்தில் ஒரு சகோதரர் ,பத்திரிகை தர்மத்தை காக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.அதற்குப் பதில்தான் இது.

எது எப்படியிருந்தாலும் பரவாயில்லை .உண்மைகள் இனி வெளி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கல்ஹின்னை பாடசாலையில் நேர்மையாக பணிபுரிந்த ஒரு பெண்ணை (ஆசிரியை)அவமானப் படுத்தும்போது இந்த அபிவிருத்திக்குழு எங்கே இருந்தது?

ஒரு பெண்ணுக்கு எதிராக ஊரைக்கூட்டி கோசம் போடவைத்த அதிபரை தலையில் வைத்து கொண்டாடிய பாடசாலை அபிவிருத்திக்குழு தூங்கிக் கொண்டா இருந்தார்கள்?

இவர்கள் எந்த மதத்தை பின் பற்றுகின்றார்கள் ?ஒரு பெண்ணுக்கு எதிராக வீதி வீதியாக சென்று "பாத்திமா ஒழிக"என்று ஹீரோயிசத்தை காட்டிய அபிவிருத்திக்குழு இஸ்லாமிய சட்டதிட்டங்களைப் பற்றி தெரிந்து வைத்துள்ளார்களா? 

தெரியாவிட்டால் கீழ்வரும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் படியுங்கள். 

(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை. நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதனை நீங்கள் இலேசாகவும் மதித்துவிட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க மகத்தானது”. (திருக்குர் ஆன் 24:15)

“எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்”. (திருக்குர் ஆன் 33:58)

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதனை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தயைக)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள் (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்பு மீறிய) தீயவர்கள். (24:4)

அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

கல்ஹின்னை ஒன்றியம் பாடசாலைக்கு செய்கின்ற சேவைகளை தடுக்க வேண்டாம் என்று ஒருசிலர் WATSAPP குழுமங்களில் கூவிக் கொண்டிருக்கின்றார்கள் .

ஒன்றியமோ .கல்ஹின்னை தனவந்தர்களோ ,அல்லது குழுமங்களோ அவர்கள் நீங்கள் சொல்லித்தான் செய்கின்றார்கள் என்று தப்புக் கணக்கு போடவேண்டாம் .

ஏனென்றால் ஊருக்கு அவர்கள் நல்லதை செய்யும்போது நல்ல எண்ணத்தோடுதான் செய்கின்றார்கள் .அவர்களுக்கு நீங்களோ நானோ சொல்லித்தான் ஊருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை 

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர்கள் செய்கின்ற உதவிகளை நிறுத்தப் போவதில்லை.அவர்கள் செய்கின்ற நல்ல சேவைகளுக்கு நீங்கள் முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் அதுவே போதும்.

முஸ்லிம் ஹாஜியார் ,ஜிப்ரி ஹாஜியார் ,பசீர் ஹாஜியார்,போன்ற தனவந்தர்களுக்கும் CHANGING GALHINNA ,GWA,போன்ற குழுமங்களுக்கும்  ,மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சிலருக்கும்  அல்லாஹ் கிருபை செய்யட்டும் .

கல்ஹின்னை பாடசாலையின் முன்னாள் அபிவிருத்திச் சங்கம் மற்றும் கல்ஹின்னை ஒன்றியமும் இணைந்து நடாத்திய ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு சம்பந்தமே இல்லாத முன்னாள் அதிபரை வரவழைத்து கொண்டாடியது ஏன்?

ஒரு திறமையான நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை (ஆசிரியர்) ஊர் மக்கள் முன் அவமானப் படுத்திய ஒருவரை வரவழைத்து தலையில் வைத்து கொண்டாடியது எதற்காக?

கடைசியாக கல்ஹின்னை தனவந்தர்களுக்கு எனது பணிவான  வேண்டுகோள்.

கல்ஹின்னை பாடசாலை சிறந்த ஒரு பாடசாலையாக மாற வேண்டுமென்றால் முதலில் "கல்ஹின்னை பாடசாலையில் இருக்கின்ற இயக்கங்களை மாற்றுங்கள்.பழைய மாணவர் சங்கம் ,அபிவிருத்திச் சங்கம் போன்றவற்றிற்கு நல்ல திறமையானவர்களை தேர்ந்தெடுத்து பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

அப்படியில்லாமல் எத்தனை திறமையான அதிபர்கள் வந்தாலும்,நீங்கள் கோடி கோடியாக கொட்டினாலும் நிலைமை மாறப் போவதில்லை .
பாடசாலை அதோ கதிதான் 
கீழேயுள்ள VOICE CLIP கேளுங்கள் 
ஒரு அதிபர் எப்படியெல்லாம் மக்கள் மனதில் விஷத்தை விதைக்கின்றார் என்று புரியும் 
 
(தொடரும்)

Post a Comment

Previous Post Next Post