கல்ஹின்னையின் கருப்பு நாள்"-7-10-2011.VIDEO-3

கல்ஹின்னையின் கருப்பு நாள்"-7-10-2011.VIDEO-3

கல்ஹின்னை டுடேயில் தொடராக வெளிவரும் "கல்ஹின்னையின் கருப்பு நாள் "பற்றிய கட்டுரையை படித்துவிட்டு அநேகமான ஊர் மக்கள் தங்கள் திருப்தியையும் ஆதரவையும் தெரிவித்திருந்தார்கள்..

ஊரில் நடந்த ஒரு சம்பவம் உண்மை சம்பவம் .ஒரு சில  நபர்களால் 2011 ஆம் ஆண்டு திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு சம்பவத்தை மீண்டும் ஏன் இந்த நேரத்தில் வெளியில் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சிலசகோதரர்கள் தனிப்பட்ட முறையில் கேட்டார்கள் .சிலர் நல்லதொரு விடயத்தை இந்த நேரத்தில் ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தியதையிட்டு பாராட்டுத் தெரிவித்தார்கள் .

ஆனால் ஒரு சிலர் மட்டும் ",உங்களைப் பற்றி பொய்யான தகவல்களை நாங்கள் வெளியிட்டு உங்களை அவமானப் படுத்தினால் எப்படி இருக்கும்?"என்று பயமுறுத்தும் தொனியில் பேசினார்கள்."5 கோடி பொல்லு போட்டுவிட்டு வெளி நாட்டில் ஒளிந்திருப்பதாக ஒரு செய்தியை பரப்பினால் எப்படியிருக்கும்"என்றும் பயமுறுத்தும் தொனியில் மொபைலில் சொல்லுகின்றார்கள். .(AUTO RECORD என்னிடம் இருக்கின்றது.ஆனாலும் அதை வெளியிட விரும்பவில்லை,)

எதற்காக இந்த நபர் இப்படி கோபப்படுகின்றார் என்று புரியாத புதிராக இருக்கின்றது?

நாங்கள் எவருடைய பெயரையும் குறிப்பிடவில்லை .எவரையும் தாக்கிப் பேசவில்லை .எந்த ஒரு தனிப்பட்ட முறையிலும் எவரையும் சுட்டிக் காட்டவில்லை .ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் ஏன் வலிக்கின்றது என்று புரியாத புதிராக இருக்கின்றது.

ஒருவேளை  இந்த வலிக்கின்றவர்கள்தான்  "கல்ஹின்னையின் கருப்பு நாட்களுக்கு" சொந்தக் காரர்கலாயிருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

ஊரில் ஒரு சிலரிடம் "கல்ஹின்னை டுடே"க்கு எச்சரிக்கை கொடுத்துள்ளோம் இனி எதுவும் வராது என்று சொல்லித் திரிவதாகவும் கேள்விப்பட்டோம்.

இவர்களுக்கு ஏன் இந்த வலி என்று எனக்குத் தெரியவில்லை.?

இவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும் .

இவர்கள் எப்படி பொய்யான ஒரு வதந்தியை பரப்புவதாக கல்ஹின்னை டுடே க்கு எச்சரிக்கை செய்தார்களோ ..இதே போன்றுதான் 2011லிலும் அந்தப் பெண்ணுக்கும் நடந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஒரு சிலரின் நலனுக்காக ,ஆதாயத்திற்காக ஒரு பொய்யால் ஒரு பெண்ணின் வாழ்வை சீரழிக்கப் பார்த்தார்கள் .சட்டப்படி மோத தைரியமில்லாமல் வீதியில் நின்று போராட அப்பாவி மக்களை ஒன்று சேர்த்தார்கள்.ஊர் மக்களிடம் அந்தப் பெண்ணை பற்றி பொய்களை கூறி ஆர்ப்பாட்டதிற்கு தூண்டியுள்ளார்கள்..இவை அத்தனையும் சட்டப்படி குற்றங்கள்.

சட்டத்தைப் பற்றி இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை 

தெரிந்திருந்தால் இவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டார்கள் .

அடுத்தவர்களை மிரட்டுவது,கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களுக்காக செய்த உதவிகளை தனி ஒருவர் தனதாக்கிக் கொண்டது பொய்களை கூறி மக்களை போராட அழைப்பது போன்ற செயல்கள் கடும் தண்டனைக்குரியது என்பதை ஒரு சிலர் புரிந்து கொண்டால் நல்லது என்று நினைக்கின்றேன்.

விடியோக்கள் நாங்களாக எடுக்கவில்லை .கல்ஹின்னை மக்கள்தான் எங்களுக்கு அனுப்பியுள்ளார்கள்.இன்னும் பல விடயங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது.ஆதாரங்களுடன் எங்களுக்கு கிடைத்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களை கல்ஹின்னை மக்கள் அனுப்பியுள்ளார்கள்.  


இவற்றை எல்லாம் இத்தனை வருடம் கழித்து ஏன் வெளியிடுகின்றீர்கள் என்று கேட்டவர்களுக்கு அடுத்து வரும் நாட்களில் தெளிவு படுத்துன்கிறோம் 

email: galhinnatoday@gmail.com



     .

Post a Comment

Previous Post Next Post