Google Photos பற்றிய சில தகவல்கள்

Google Photos பற்றிய சில தகவல்கள்

நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு Google Photos பற்றிய அறிமுகம் பெரிதாக தேவைப்படாது.

ஒருவேளை நீங்கள் Google Photos பேக்கப் அம்சத்தை இயக்கி இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பல புகைப்படங்கள் கூகுள் போட்டோஸில் தானாகவே பேக்கப் செய்யப்படும் என்பதும், இந்த செயல்முறை உங்கள் புகைப்படங்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் என்பதும் நீங்கள் அறிந்ததே!

இப்படி செய்வதால், நீங்கள் பல்வேறு சாதனங்களில் இருந்து உங்கள் புகைப்படங்களை அணுகலாம். பேக்கப் எடுப்பது ஈஸி! ஆனால் ஷேர் செய்வது எப்படி? இப்படியாக ஷேர் செய்யப்பட்டபோட்டோ ஆல்பத்தை டவுன்லோட் செய்வது எப்படி? என்கிற குழப்பம் உங்களுக்கு இருப்பின், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

அதாவது உங்கள் Google அக்கவுண்ட்டை அணுக முடியாத ஒருவர், உங்களின் குறிப்பிட்ட ஆல்பத்தை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், அந்த குறிப்பிட்ட போட்டோ ஆல்பத்தை நீங்கள் அவருடன் பகிர விரும்பினால், நீங்கள் அதை எப்படி செய்ய வேண்டும் என்கிற எளிய மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:


ப்ரவுஸர் வழியாக ஒரு போட்டோ ஆல்பத்தை ஷேர் செய்வது எப்படி?

1. உங்கள் ப்ரவுஸரில் உள்ள Google photos வலைத்தளத்தைத் திறந்து இடது மெனுவிலிருந்து Albums (ஆல்பம்ஸ்) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

2. நீங்கள் பகிர விரும்பும் ஆல்பத்தின் மீது கர்சரை கொண்டு செல்வத்தின் வழியாக, குறிப்பிட்ட ஆல்பத்தின் மீதான மூன்று புள்ளிகளை கண்டறிந்து அதை கிளிக் செய்து 'Share Album' என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

3. பின்னர் யாருடன் ஆல்பத்தைப் பகிர விரும்புகிறீர்களோ, அவரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் அல்லது பிற வழிமுறைகளைப் பயன்படுத்தவும்.

மொபைல் போட்டோஸ் ஆப்பை பயன்படுத்தி ஒரு போட்டோ ஆல்பத்தை ஷேர் செய்வது எப்படி?

1. நீங்கள் ஆப்பைத் திறக்கும்போது ஸ்க்ரீனில் கீழே உள்ள லைப்ரரியை கிளிக் செய்யவும்

2. நீங்கள் பகிர விரும்பும் ஆல்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

3. பின்னர் "ஷேர்" என்பதை கிளிக் செய்யவும்.

ப்ரவுஸர் வழியாக ஒரு ஆல்பத்தின் புகைப்படங்களைப் பதிவிறக்குவது எப்படி?

1. நீங்கள் பதிவிறக்க விரும்பும் ஆல்பத்தைத் திறந்து மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்தான புள்ளிகளை கிளிக் செய்யவும்.

2. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து download all என்கிற விருப்பத்தையும் கிளிக் செய்யவும்.

உங்கள் மொபைல் போனில் இருந்து ஒரு ஆல்பத்தைப் பதிவிறக்குவது எப்படி?

கூகுள் போட்டோஸில் இருந்து உங்கள் மொபைல் சாதனத்திற்கு ஒரு ஆல்பத்தின் படங்களை நீங்கள் பதிவிறக்க முடியாது.

- மாறாக நீங்கள் குறிப்பிட்ட ஆல்பத்தை உங்க இமெயில் அக்கவுண்டிற்கு அல்லது ட்ரைவ்விற்கு பகிரலாம்.


Post a Comment

Previous Post Next Post