கறிவேப்பிலையின் பயன்கள்

கறிவேப்பிலையின் பயன்கள்

நம்முடைய சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகளும், மசாலாப்பொருட்களும் மூலிகைகளுக்கு இணையான 

ஆரோக்கிய மற்றும் மருத்துவ பயன்களை கொண்டவையாக உள்ளன.

அந்த வகையில் எளிமையான மற்றும் நறுமணமுள்ள கறிவேப்பிலை நான்காவது வகை. பல பயன்பாடுகளை 
உள்ளடக்கியுள்ள இந்த அற்புத இலை சாம்பார் முதல் சட்னி வரை எந்த உணவையும் அழகாகவும் வாசனையாகவும் மாற்றும் வல்லமை படைத்ததாக உள்ளது.

மேலும், இது குடல் பிரச்சினைகளுக்கு உதவுவதற்கும், உணவின் சுவையை அதிகரிக்கும் மூலிகையாக இந்தியாவின் தென்பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் 
கொண்ட கறிவேப்பிலை இரைப்பை குடல் பிரச்சினைகளை 
குணப்படுத்தவும் முடி உதிர்தலைக் குறைக்கவும் ஒரு வீட்டு மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது.


கறிவேப்பிலை தேநீர்
25 கறிவேப்பிலை
1கப் தண்ணீர்
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை நன்றாக அலசிக்கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலை சேர்க்கவும்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அதை தணலில் இருந்து இறக்கவும்.

இலைகள் பாத்திரத்தின் அடியில் சென்று, நீரின் நிறம் மாறியவுடன், இலைகளை வடிகட்டவும்.

பிறகு அந்த வெதுவெதுப்பான நீரை பருகலாம்.

இந்த தேநீருடன் கூடுதலாக, சுவையை அதிகரிக்க சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தேனையும் சேர்க்கலாம்.

இந்த தேநீரை காலையில் வெறும் வயிற்றில், இரவில் படுக்கும் முன் அல்லது இரண்டு நேரங்களிலும் 
உட்கொள்ளலாம்.


Post a Comment

Previous Post Next Post