சர்க்கரை அளவு குறைய என்ன காரணம்..?
சர்க்கரை அளவு குறைதல் என்பது உடலில் குளுக்கோஸ் அளவு 70 mg/dL க்கும் குறைவாக இருக்கும். இது அதிகமாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும். பெரும்பாலும் இன்சுலினை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை அளவு குறைகிறது.
அதோடு சரியான நேரத்தின் உணவு உண்ணாதது, புரோட்டீன் குறைவாக எடுத்துக்கொள்ளுதல், சரியான நேரத்தில் இன்சுலின் மாத்திரைகளை உட்கொள்ளாதது, அதிக வேலை அழுத்தம் அல்லது மன அழுத்தம் , தூக்கமின்மை, பருவநிலை மாற்றம், பெண்களுக்கு மாதவிடாய் சமயம் போன்ற காரணங்களால் சர்க்கரை அளவு குறைகிறது.
சர்க்கரை அளவு குறையும் போது என்ன செய்ய வேண்டும்..?
சர்க்கரை அளவு அடிக்கடி குறைகிறது எனில் எப்போதும் கையில் சாக்லெட் வைத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்களே பரிந்துரைப்பதுண்டு. காரணம் இதன் இனிப்பு தன்மை உடனே இன்சுலின் அளவை அதிகரித்துவிடும். சாக்லெட் மட்டுமின்றி ஃபிரெஷ் ஜூஸ் அருந்துவது, பழங்கள் சாப்பிடலாம், தேன் குடிப்பதும் நல்லது.
Tags:
ஆரோக்கியம்