கல்ஹின்னையில் கொரோனாவை விரட்டவா பள்ளிக்கந்தூரி திருவிழா கொடுக்கின்றார்கள்?

கல்ஹின்னையில் கொரோனாவை விரட்டவா பள்ளிக்கந்தூரி திருவிழா கொடுக்கின்றார்கள்?


கல்ஹின்னையில் உலமாக்கள் என்று பெயர் தாங்கிகொண்டு வயிற்றை நிரப்பிக்கொள்ளும் சில அறிவுகெட்ட ஜென்மங்கள் இருக்கின்றதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இன்று உலகமே பசி, பட்டி, தொற்று நோய்கள் என்று தவிக்கின்ற இவ்வேளையில் சில எருமை மாடுகள் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் இலகுவான வழிமுறைகளுக்கு இஸ்லாத்தை பயன் படுத்துகின்றார்கள்.இஸ்லாத்தில் இல்லாத 
ஒரு வழக்கத்தை,குர்ஆனில் இல்லாத ஒன்றை ,எங்கள் அருமை தூதர் நபி (ஸல்) சொல்லாத ஒன்றை சிலர் தங்கள் வயிற்றை  நிரப்பிக் கொள்ளவும் .பணக்காரர்களின் முன் நாங்கள்தான் உண்மையான முஸ்லிம்கள் என்று காட்டிக்கொள்ளவும் பணக்காரர்களின் காலை நக்கும் நரிகளாக கல்ஹின்னையில் ஒருசிலர்  வாழ்ந்து கொண்டிருப்பது வெட்கக் கேடு .

இதற்கு துணை போகின்ற அறிவுகெட்ட கல்ஹின்னை பள்ளி நிர்வாகம் அதைவிடப் பெரிய முட்டாள்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இப்படியான ஒரு காலகட்டத்தில் இவர்கள் எதற்காக பல லட்சங்கள் செலவு செய்து இப்படி ஒரு திருவிழாவை கொண்டாட வேண்டும் ?

இந்த அறிவுகெட்ட கொண்டாட்டத்தை கந்தூரி என்று கூற முடியாது .இது ஒரு மார்கத்திற்கு முரணான செயல் என்றுதான் கூறவேண்டும்.

கல்ஹினையில் பல குடும்பங்கள் பட்டினியில் வாழுகின்றார்கள்.வீடு வசதியில்லாமல் தவிக்கின்றார்கள்,படிப்பதற்கு தேவையான வசதிகள் இன்றி வெளியில் சொல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கின்றார்கள்.மருத்துவ வசதிகளில்லாமல் மிகவும் மோசமான நிலையில் தவிக்கின்றார்கள்.

உலகில் பல இடங்களிலும் மக்கள் பசி பட்டினியால் தற்கொலை செய்யும் பரிதாபங்கள்,வருமானமில்லாமல் தவறான செயல்களில் ஈடுபடும் பரிதாபங்கள் என்று மக்கள் தவிக்கின்ற இந்நிலையில் ஒரு கந்தூரியும் ,கத்தமும் ,அல்லது திருவிழா திருமணங்களும் பரக்கத்தை தருவதில்லை என்ற இஸ்லாமிய அடிப்படை அறிவு கூட இல்லாத ஜென்மங்கலாய் வாழுகின்றோம் என்று நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கின்றது.

பல லட்சங்களை செலவு செய்து கந்தூரியும் திருமணமும் கத்தமும் திருவிழா போன்று கொடுக்கின்ற நாம் ஒரு வசதியற்ற குடும்பத்திற்கு ஒரு சிறு வருமானதிற்கான வசதிகளை செய்து கொடுக்கலாமே?.

ஏன் இவர்களுக்கு இந்த குறுகிய எண்ணம்?

வசயில்லாத மக்கள் வாழ்நாள் முழுவதும் இவர்களிடம் கைநீட்டி வாழ வேண்டும் என்ற நோக்கமா?

தொழிலில்லாத இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கான வசதிகளை செய்து கொடுக்கலாம்.அவர்களின் தவறான வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டலாம்.பெண்களுக்கு தையலுக்கான உபகரணங்களை வாங்கிக் கொடுக்கலாம்.

இப்படி பல முக்கியமான அவசியமான தேவைகள் இருக்கின்றபோது இப்படிப்பட்ட திருவிழாக்கள் எதற்கு?

எல்லா விடயங்களுக்கும் அரசாங்கத்தை குற்றம் சொல்லும் நாம் ,நம்முடைய அழகிய வாழ்கையை ஏன் வாழக்கூடாது? 

உலமாக்கள் என்ன செய்கின்றார்கள் ? மத்ரஸாக்களில் இஸ்லாத்தை போதிக்கின்றோம் என்று பெருமை அடிக்கும் ஒஸ்தாதுகள் என்ன செய்கின்றார்கள் ?

இவர்கள் குர்ஆனை படித்தார்களா அல்லது போலிப் பட்டத்தோடு மத்ரஸாக்களில் பனி புரிகின்றார்களா?இவர்கள் எதிகால சந்ததியினருக்கு எதை கற்பிக்கப்போகின்றார்கள்?

இவர்களுக்கே இஸ்லாத்தைப்பற்றி தெரியாதபோது பிள்ளைகளுக்கு  எப்படி இப்படியான ஒரு சூழலில் இஸ்லாத்தை பற்றிய அறிவு வரும்?

இஸ்லாத்தில் இல்லாத ஒரு செயலை எதிர்கால சந்ததியினருக்கு சொல்லிக்கொடுக்கும் இப்படியான மதரஸாக்கள் இருப்பதைவிட அரசாங்கம் சொல்வதைப் போல மூடுவது எம் சமூகத்திற்கு இவர்கள் செய்யும் மிகப் பெரும் உதவியாயிருக்கும்.   

பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக உழைக்காமல் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தும் போலி உலமாக்களின்  வயிறை நிரப்பும் திருவிழாக்களை(கல்யாணம்.கந்தூரி ,கத்தம் )நிறுத்துங்கள்.

இல்லையென்றால் அல்லாஹ்வின் கோபப் பார்வைக்கு ஆளாக வேண்டிவரும்.

வசதியில்லாதவனை விட செல்வத்தைப் பெற்று அதை நல்வழியில் செலவிடுபவன் சிறந்தவன் என்று அல்லாஹ் 
திருக்குர்ஆனில் புகழ்ந்துரைக்கிறான்.

எதற்கும் சக்தி பெறாத, பிறருக்கு உடைமையான அடிமையையும், யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். 

இவன் இரகசியமாகவும்,வெளிப்படையாகவும் அதிலிருந்து (நல்வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:75
--------------------
அல்லாஹ் வழங்கிய செல்வத்தை நல்ல வழியில் செலவு செய்தவர், அல்லாஹ் வழங்கிய அறிவு ஞானத்தின் 
அடிப்படையில் தீர்ப்பு வழங்கிக் கற்றுக் கொடுப்பவர் ஆகிய இருவரைத் தவிர மற்றவர்கள் மீது பொறாமை 
கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்..
நூல் : புகாரி 73, 1409, 7149, 7316
-------------------
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2: 261
-------------------
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செல்வமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.நூல் : அஹ்மத்

Post a Comment

Previous Post Next Post